இலங்கை அணியின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், "இந்த உத்தரவு இருந்தபோதிலும், ஒரு வீரரோ அணியின் உறுப்பினரோ இலங்கைக்குத் திரும்ப தீர்மானித்தால், சுற்றுப்பயணம் தடையின்றி நடைபெறுவதற்காக, இலங்கை கிரிக்கெட் வாரியம் உடனடியாக மாற்று வீரர்களை அனுப்பும்" என்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஒரு வீரரோ, வீரர் குழுவோ அல்லது துணை ஊழியர்களோ இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
டெல்லி கார் வெடிப்புச் சம்பவம், உலக நாடுகள் அறிக்கை, டெல்லி
செங்கோட்டை அருகே வெடிப்பு: இஸ்ரேல், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் கூறியது என்ன?
முடிவுக்கு வந்த அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கம்
முடிவுக்கு வந்த அமெரிக்க அரசு முடக்கம் - டிரம்புக்கு ஆறுதல் கிடைத்தாலும் சவால் தொடருமா?
பாடகி சுசிலா, பி.சுசிலா
''நெஞ்சம் மறப்பதில்லை... '' : பி.சுசீலாவின் பிரபலமான 15 பாடல்கள்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் நிரம்பாதது ஏன்?
காலியாக இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ கல்வியிடங்கள் - ஆர்வம் குறைகிறதா?
End of அதிகம் படிக்கப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன கூறியது?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, போட்டிகள் தொடரும் என்றும், போட்டி நடைபெறவிருந்த தேதிகளில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அட்டவணையில் சில மாற்றங்களுடன் தொடர் தொடரும் என்று தெரிவித்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது, ஆனால் இப்போது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டி நவம்பர் 15 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 16 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
முதல் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது, அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த தொடருக்காக இலங்கை 16 வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியுள்ளது. நம்பகமான வட்டாரங்களின் தகவல்படி, குறைந்தது எட்டு வீரர்கள் கொழும்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டர் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக உள்ள மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கையின் முடிவை வரவேற்கும் பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
"இது உண்மையான விளையாட்டுத்திறன் மற்றும் பரஸ்பர ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மொஹ்சின் நக்வியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தப் போட்டிகள் முதலில் நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தன.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் வரவேற்றுள்ளனர். "ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்" என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 'ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "கிரிக்கெட்டுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கை அணிக்கு நன்றி" என்று பதிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி, "பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பின் அடையாளமாக கிரிக்கெட்டைப் பயன்படுத்துவது இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு" என்று தனது பதிவில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஷீத் லத்தீஃப், தனது நீண்ட பதிவில், இலங்கையில் மிகவும் மோசமான பாதுகாப்பு சூழல் இருந்தபோதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடிய காலத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டிருந்தார்.
"நாங்கள் 1994 ஆம் ஆண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சென்றபோது, இலங்கையில் சூழல் சரியாக இல்லை. தமிழ்ப் புலிகளுடன் பல மோதல்கள் நடந்தன. கொழும்பில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, ஒரு குண்டுவெடிப்பு நடந்தது, நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. மோசமான சூழல் நிலவியபோதும், பாகிஸ்தான் அணி கொழும்பில் இருந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அரசாங்கமும் எடுத்த முடிவுகளை வீரர்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டனர்" என்று ரஷீத் லத்தீஃப் அப்பதிவில் கூறியுள்ளார்.
ஜே.எம்.பாஸித் - கத்தார்
கத்தார் வாழ் இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற 8 அணிகள் கொண்ட மாவனல்லை பிரீமியர் லீக் (MPL) சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 7 ஆம் திகதி க்ரீக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சுற்றுப்போட்டியில் வெஸ்ட் பே வோரியர்ஸ் அணி வாக்ரா ராயல்ஸ் அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், வெஸ்ட் பே வோரியர்ஸ் அணியின் ரஷான் முகமது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
நூருல் ஹுதா உமர்
நூருல் ஹுதா உமர்
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்திய 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்று அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தேசிய இளைஞர் சேவை மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் கங்கா சகாரிக தேசிய இளைஞர் மன்ற உதவிப்பணிப்பாளர் முபாறக்அலி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஸ்ரீவர்த்தன ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக தலைவர் மிருஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஒரு ஏழை பஞ்சாபி தந்தை, ஒரு பெண் குழந்தையின் தச்சராக வேலை செய்தார். அவரது மகள் கிரிக்கெட் விளையாட முடிவு செய்தபோது, அவர் அவளுக்கு ஆதரவளித்தார். அவளை தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தினார். அவரது சக ஊழியர்கள் அவரை கேலி செய்து சிரித்தனர். தனது மகள் சிறப்பு வாய்ந்தவள் என்று அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அந்தப் பெண் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக மாறினார். உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக டீம் இந்தியா போராடிக்கொண்டிருந்தபோது, அவர் தீர்க்கமான ரன்களை எடுத்து, இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்கத்தை அளித்தார். அவர் தொடர்ந்து பேட்டிங் & பந்தில் ஒழுக்கமாக இருந்தார். ஒரு விரைவான கேமியோவை எடுத்து அரையிறுதியில் வெற்றி ரன்களை அடித்தார், இறுதிப் போட்டியில் மீண்டும் பேட்டிங் & பந்தில் ஒழுக்கமாக இருந்தார், லாரா வால்வார்ட்டை வீழ்த்த மிக முக்கியமான கேட்சை எடுத்தார். அவரது தந்தை கிராமவாசிகளுடன் ஒரு பெரிய திரையில் இறுதிப் போட்டியைப் பார்த்தார், ஒருவேளை அவரைப் பார்த்து சிரித்தவர்களுடன் கூட. நேற்று தனது மகள் உலக சாம்பியனான பிறகு அந்த நபர் கோபமடைந்தார். பெயர் அமன்ஜோட் கவுர்.
ஆணாதிக்கத்திற்கும், அதிக பெண் கருக்கலைப்புக்கும், தொந்தரவான ஆண் பெண் விகிதத்திற்கும் பெயர் பெற்ற ஹரியானா மாநிலத்தில் நான் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு தென்னாப்பிரிக்க விக்கெட்டிற்கும் பிறகும் பட்டாசு சத்தம் கேட்க முடிந்தது, இறுதி விக்கெட் விழுந்ததும் நகரம் வெறிச்சோடியது. இங்கே தீபாவளி மாதிரி இருந்தது. அது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது.
பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.
251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.
ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.
இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்
'
மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?
End of அதிகம் படிக்கப்பட்டது
பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.
இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.
மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.
பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்
இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''
"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.
இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.
இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்
இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.
இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.
இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.
அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.
இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது
இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.
இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.
சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.
சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்
"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.
அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.
அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.
இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.
ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.
அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.
அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.
அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.
அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.
இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.
ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி
அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.
"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.
இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.
இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்
அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.
அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.
இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.
அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.
அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.
ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.
படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது
"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.
அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.
பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்திருக்கின்றன. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை
3 மணிக்குத் தொடங்கியிருக்கவேண்டிய ஆட்டம், நவி மும்பையில் தொடர்ந்து மழை பெயததால் தாமதம் ஆனது. இறுதிப் போட்டிக்கு கூடுதலாக 2 மணி நேர 'கட்-ஆஃப்' (cut off) இருப்பதால், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் இது முழுமையான 50 ஓவர் ஆட்டமாகவே நடக்கும்.
#SportsUpdate |
மகளிர் உலகக்கோப்பை 2025: நவி மும்பையில் நடைபெற்ற 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!
#WomensWorldCup2025 | #WomensWorldCupSemiFinal | #WorldCupFinal | #JemimahRodrigue | #CWC | #INDvAUS | #INDWvAUSW | #WWC | #ICC | #DailyThanthi
வக்ஷன் வெறும் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளதோடு, இந்த சம்பியன்ஷிப்பில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
ஏழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒக்டோபர் 18 ஆம் திகதி இந்தியாவில் அந்நாட்டின் பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் அணியை சந்தித்தேன். பார்வையற்ற பெண்களுக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க இந்த அணி நவம்பர் மாதம் இலங்கை வர உள்ளது.
I met with the visually impaired women’s cricket team in India on 18 October. The team will visit Sri Lanka in November 2025 to participate in the Women’s T20 World Cup for Visually Impaired Women.
#HariniAmarasuriya #indiantourism #cricket #cricketlovers
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக மற்றும் மிகவும் இளம் வயதில் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. நடப்பு உலகக்கிண்ண தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ஓட்டங்களை குவிக்கத் தவறிய ஸ்மிருதி மந்தனா, இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் பிரதீகா ராவலும் அரைசதம் கடந்துள்ளார்.
இன்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாகவும், மிகவும் இளம் வயதிலும் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 112 இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா 5000 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
13 ஆவது மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.
இலங்கை: சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்ன, அச்சினி குலசூர்ய, சுகந்திகா குமாரி, மால்கி மதர, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீர, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்க.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இப்போட்டி தொடங்கவுள்ளது
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.
முதலில் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவின் வெற்றியின் நாயகனாக திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார், சிவம் துபே 33 ரன்கள் எடுத்தார்.