Showing posts with label literature. Show all posts


 நூருல் ஹுதா உமர் 


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி"
என்ற ஆய்வரங்கு சனிக்கிழமை (02) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைகழக "மொழித்துறை" அரங்கில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூத்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில்
தென்கிழக்கு பல்கலைகழக கலை கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸீல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் மொழி பெயர்ப்புத் துறையின் செல்நெறி தொடர்பில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.எப்.எம். அஸ்ரப் ஆய்வுரை நிகழ்த்தியதுடன் சிறுகதைத்துறையின் செல்நெறி தொடர்பில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயிலும், பெண் எழுத்துக்களின் செல்நெறி தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ம.நதிராவும், இலக்கியத்தில் நவீன தொழில்நுட்பத்தின் செல்வாக்கு தொடர்பில் கணிமையாளர் மு.மயூரனும், ஆய்வு பகிர்வின் நோக்கு சம்பந்தமாக யப்பான் கக்சுயின் பல்கலைக்கழக ஓய்வுநிலை ஆய்வுப் பேராசிரியர் கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கருத்துப் பகிர்ந்தனர். 

மேலும் திறனாய்வுத் துறையின் செல்நெறி தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்கும், கவிதைத்துறையின் செல்நெறி தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை விரிவுரையாளர் கலாநிதி த.மேகராசாவும், நாவல்துறையின் செல்நெறி தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் கலாநிதி எம். சத்தார் பிர்தெளஸ் அவர்களும் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் நன்றியுரையை அம்பாறை மாவட்ட கலாசார இணைப்பாளர் ஏ.எல்.தௌபீக் நிகழ்த்தினார்.

 


நூருல் ஹுதா உமர்


கத்தார் சகாபாக்கள் நூலக வெளியீட்டில் கவிஞர் புதுகை சிக்கந்தர் எழுதிய காயங்களின் கரும்பலகை என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வொண்டர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கத்தார் சகாபாக்கள் நூலகத்தின் தலைவர் மணிகண்டன் ஐயப்பன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர் கத்தார் முத்தமிழ் மன்றம் ரெஜினா கோபால்சாமி, சட்டத்தரணி பட்டிமன்ற பேச்சாளர் கத்தார் முத்தமிழ் மன்றம் சிந்து தமிழ், எழுத்தாளர் பாத்திமா நிஸ்ரா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

கத்தார் காயிதே மில்லத் பேரவை தலைவர் முஹம்மத் முஸ்தபா நூலை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில்  சிறப்பு அதிதிகளாக கவிஞர் கொடிநகரான், ராமசெல்வம் (கத்தார் தமிழர் சங்கம்), குரு (கத்தார் முத்தமிழ் மன்றம்), விஜய் ஆனந்த் (பாரதி மன்றம்) , ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் சமீர், செயலாளர் வலியுல்லாஹ், கத்தார் அயலக திமுக அணி துணைச் செயலாளர் மதன்குமார், ஸ்கை தமிழ் வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இது கவிஞர் புதுகை சிக்கந்தர் அவர்களின் இரண்டாவது நூலாகும்.


UMAR LEBBE NOORUL

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.