களுவாஞ்சிக்குடி நீதிமன் சமுதாய சீர்சிருத்த வேலை மேற்பார்வையாளர் ருமணன் பணிபுரியும் (Master of Social Work with Merit Pass)-சமூக வேலைத்துறையில் முதுகலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு www.ceylon24.com தமது வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றது.
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது.
இவ்வருடத்திற்கான சாதாரணத் தரப்பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்பெறும் நோக்கில் ஸ்மார்ட் போர்ட் (Smart Board) வழங்கி வைக்கப்பட்டன.
மேற்குறித்த ஸ்மார்ட் போர்ட் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை உத்தியோகபூர்மாக கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கையாளிக்கும் நிகழ்வு இன்று அதிபர் காரியாலத்தில் இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் எமது கல்லூரிக்கு ஸ்மார்ட் போர்ட் பெற்றுத்தருவதாகக் அளப்பரிய பங்காற்றிய கல்முனை முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருமான ஜே.லியாக்கத் அலி அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், கல்முனை பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களால் ஆரம்பப் பிரிவுக்கான விஞ்ஞானம் ( Science for Primary) எனும் தொனிப் பொருளில் 2024. 12.15 ஞாயிற்றுக்கிழமை கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கணேசரத்தினமும் கௌரவ அதிதிகளாக ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல் விரிவுரையாளர்களாக கடமையாற்றிய கே. கமலதாசன் மற்றும் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா ஆகியோரும் விசேட அதிகளாக ஏ.எம். முபாரக் கே.எல்.எம். பார்சாட் ரி. திலகாராஜா உட்பட ஏனைய விரிவுரையாளர்களான ஏ.ஜே. வசீல் ஏ.ஏ. ரமீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளுக்கு இணைப்பாளராக எஸ்.என்.ஏ அரூஸ் கடமையாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷரஃப் அவர்களின் ஆலோசனைக்கிணங்க புதிய தலைமுறை கழகத்தின் மாவடிப்பள்ளி செயற்பாட்டாளர்களினால் பெற்றோர்களை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் அதிபர், ஆசிரியர்களிர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது மாவடிப்பள்ளி கல்வி சமூகமும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாறான உதவும் கரங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
மகாசக்தி பாலர் பாடசாலையின் விடுகை விழா இன்றைய தினம் இடம்பெற்றது..
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வானது இன்று தினம் அக்கரைப்பற்று மகாசக்தி கட்டத்தில் இடம்பெற்றது ....
இன் நிகழ்வானது மகாசக்தி நிலைய உப தலைவி திருமதி.மங்கையக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.....
இன் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் வெளிக்கள உத்தியோத்தர் திரு.மோகனதாஸ் அவர்களும் திருக்கோவில் வலய முன்கல்விக்கான உதவி கல்விப்பணிப்பாளர் திரு.விவேகானந்த ராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன்
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மகாசக்தியின் முகாமையாளர் திரு.திலகராஜன் மற்றும் சட்டத்தரணி திரு.N.தமிழினியன் ஆசிரியர்கள் பெற்றோர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...
இவ் நிகழ்வில் மகாசக்தி பாலர் பாடசாலையின் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பாலர் பாடசாலையில் இருந்து தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைப்பட்டது அதனை தொடர்ந்து பெற்றோர்களினால் ஆசிரியர்களும் கொளரவிக்கப்பட்டது குறிப்பிடத்ததுக்கது...
பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் ,கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகம் மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பீடங்கள் மற்றும் துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) என்னும் பிரிவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் பேரில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அட்டவணையின் நிரல் 1
இல் காணப்படுகின்ற “வணிகம் மற்றும் முகாமைத்துவப் பீடம்” என்னும் விடயத்திற்கு நேரொத்ததாகவுள்ள நிரல் 11 இல் காணப்படுகின்ற முகாமைத்துவத் துறையானது, கணக்கியல் மற்றும் நிதித் துறை என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
மேலும், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தின் அட்டவணையின் நிரல் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள பீடம் வெகுசன ஊடக பீடம் எனவும், நிரல் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் வெகுசன ஊடகத்துறை, மொழிகள் துறை, கணினிக் கற்கைகள் துறை அரங்கேற்றக் கலைத்துறை எனவும் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
அத்தோடு, இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நிரல் 11 இல் காணப்படும் சமூக மருத்துவம் மற்றும் குடும்ப மருத்துவ திணைக்களம் என்பதற்கு பதிலாக பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவ திணைக்களம் எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நிப்தவூரைச் சேர்ந்த கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி
(சுலைமான் றாபி)
இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology) கல்வி அமைச்சுடன் இணைந்து, கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், கல்வி மற்றும் உயர்கல்வி என இரு பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பல கல்வியாளர்கள் தேசிய கல்வியாளர் விருதுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு, உயர்கல்வித் துறையில் கணினியியல் (Computing) கற்கைகளுக்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப சிரேஷ்ட விரிவுரையாளர் நிந்தவூரைச் சேர்ந்த கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்கள் தேசிய கல்வியாளர் விருது பெற்றுள்ளார்.
குறித்த துறையில் அவர் மேற்கொண்ட கற்பித்தல், ஆய்வு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்புகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
மேலும், பேராசிரியர் ராகல் (பேராதனை பல்கலைகழகம்) மற்றும் பேராசிரியர் ராமநாதன் (யாழ்ப்பாண பல்கலைகழகம்) ஆகியோரும் கணினியியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக தேசிய கல்வியாளர் விருது பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நியூசிலாந்துக்கான இலங்கை தூதுவர் டேவிட் பைன் மற்றும் சிறப்பு அதிதியாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்திய தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்ட "பசுமை வாசல் பவுண்டேஷன்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட மரக்கன்றுகள் நடும் போட்டியில் வெற்றி பெற்ற கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி கற்று வரும் இலங்கையின் இளம் பசுமை மீட்சி செயற்பாட்டாளர் மின்மினி மின்ஹாவுக்கு "பசுமை விதை செம்மல் விருது-2024" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது 10 வயதிலிருந்து மாவட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமி ஆவார். 10 லட்சம் நபர்களினை இலக்காக கொண்டு "சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி" என்ற சாதனைக்குரிய இவர் சுயாதீன முறையில் கல்வி, நிர்வாக உயரதிகாரிகளின் அனுமதியுடன் சுற்று சூழல் தேசிய வேலைத் திட்டத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வு உரையையும் மேற்கொண்டு வருகிறார்.
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் கணித முகாம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கணித முகாம் மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றதை பலரும் பாராட்டினர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கணிதப் பிரிவின் தலைவர் திருமதி தயாமதி பியோஜுட் நவீந்தன்( காரைதீவு )கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஷா கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கணித செய்முறை விளக்கம் பலரையும் கவர்ந்தன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேற்படி, இந்த பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து இன்று (28) மீண்டும் பரீட்சைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் 2ம் இடத்தை பெற்றமைக்காக கல்முனை வலய கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும், மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலய பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம் எஸ் சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டார். அவரது கல்வி சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல் சம்சுதீன், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திக் நிறைவேற்றுக் குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிசாத், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு பத்திரங்களும் கையளிக்கப்பட்டது.
2023 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா" - 2024 வெல்லவாய Motivirus கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் பஸீஹா பர்வின் தலைமையில் மொ/ மஹாவெலமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெல்லவாய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே. சுசில் விஜேதிலக கலந்து கொண்டதுடன், கௌரவ மற்றும் விசேட அதிகாரிகளாக வெல்லவாய வலயக் கல்விப் பணிமணை உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.வி. தர்மசிறி, ஆலோசனை விவகாரங்கள் மற்றும் இலங்கை TTC மையத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சர்ஜூன், வெல்லவாய வலய பாடசாலைகளின் அதிபர்கள், மொழி பயிற்றுவிப்பாளர் எம்.யு.எம். பாயிஸ், கல்வி நிர்வாகிகள், சர்வ மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட பல கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டது டன் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவிகளின் வணிக கண்காட்சியும், சந்தைப்படுத்தலுக்கான விற்பனை ௯டமும் !
மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த (உ/த) 2025ஆம் வருட உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகளது குழு செயற் திட்டத்தினை அடிப்படையாக கொண்ட "Expo Experts - 2024" எனும் தொனிப்பொருளில் வணிக கண்காட்சியும் சந்தைப்படுத்தலுக்கான விற்பனை ௯டமும் வர்த்தகப் பிரிவு ஆசிரியர் ஏ.ஏ. றிஷாம் அவர்களின் வழிகாட்டலில் வியாழக்கிழமை (07) உயர்தர வணிக மன்றம் மற்றும் கலை வர்த்தக பிரிவின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் ஸ்மார்ட் கட்டிட தொகுதியில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக பாடசாலை பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, இலங்கை வங்கி உதவி முகாமையாளர் மற்றும் கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வர்த்தகப் பிரிவு மாணவிகளுடைய படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கம் மூலம் இளம் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதுடன் இது எதிர்காலத்தில் தொழில் முனை நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த விரைவாக்கவும் மாணவிகள் தொழில் முனைவோர் செயல்முறை அனுபவிக்க அனுமதிக்கிறது. வணிக கண்காட்சியில் விற்க தங்களது தயாரிப்பு அல்லது சேவையை தயாரிப்பாளர்கள் அவர்களின் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமானதாகவும் லாபகரமாகவும் இருக்குமாறு அனைவரையும் ஊக்குவிப்பது செயற் திட்டத்தின் நோக்கமாகும்.
இக்கண்காட்சியில் மாணவிகள் செயன்முறை பயிற்சியினை உற்சாகமாகவும் வினைத்திறன் முறையில் செயற்பாட்டமை காணக்௯டியதாக இருந்தன. இந்நிகழ்வில் இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் தமது கிளை ஒன்றினை நிறுவி மாணவிகளுக்கு வங்கி நடைமுறை தொடர்பான விளக்கங்கள் வழங்கியிருந்தது. கண்காட்சியும் சந்தைப்படுத்தலுக்கான விற்பனை ௯டமும் நவம்பர், 07 தொடக்கம் 09ஆம் திகதி பி.ப 2:00 மணி வரை 03 நாட்களுக்கு இடம்பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான என்.டி நதீகா, எம்.எஸ் மனூனா, கலை வர்த்தகப் பிரிவு ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திகாமடுல்லமாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசத்திற்கான காரியாலயமானது காரைதீவு பிரதான வீதியில் நேற்று (2) சனிக்கிழமை மாலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தலைமை வேட்பாளர் சபாபதி நேசராசா தலைமையில் இடம்பெற்றது .
நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களான இரா.பிரகாஷ் (சிவில் சமூக செயற்பாட்டாளர் ),கி .லிங்கேஸ்வரன் (தலைவர் கல்முனை வர்த்தக சங்கம்) , இ.துரைசிங்கம்( சிவில் சமூக செயற்பாட்டாளர்)
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் கட்சி பிரமுகர்களான ஹென்றி மகேந்திரன் (ரெலோ), சங்கரி( புளட்) ,முன்னாள் திருக்கோவில் தவிசாளர் இ.வி.கமலராஜன் உள்ளிட்ட கட்சி ஆதாரவாளரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சியில் மஹ்மூத் மாணவிகள் முதலாம் இரண்டாம் நிலைகள் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு.
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) தினப் போட்டி - 2024 நிகழ்ச்சிகள் மட்/மட்/ நல்லையா வித்தியாலயம் பிள்ளையாரடி, மட்டக்களப்பு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தரம் 06 தொடக்கம் 09 பிரிவு வரையான மாணவிகள் பேச்சு, வாசிப்பு, நிகழ்ச்சிகளில் பங்கேற்று முதலாம், இரண்டாம் நிலைகளை பெற்று மூன்று மாணவிகள் தேசிய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சிக்கு தெரிவு செய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எழுத்து போட்டி : (முதலாம் நிலை) தரம் - 08 ஐ.ஐ. சுமையா. எழுத்து போட்டி : ( இரண்டாம் நிலை) தரம் - 06 எம்.ஜ. அமீஹா சஹ்தா. எழுத்து போட்டி : ( இரண்டாம் நிலை) தரம் - 09 ஜீ.எப். சுக்னா ஹானிம்.
தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கான தேசிய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) தினப் போட்டி - 2024 நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 03ஆம் திகதி கல்வி அமைச்சு, இசுறுபாய பத்தறமுல்லை கொழும்பில் இடம்பெற்றவுள்ள மொழிப் பிரயோகமும் கிரகித்தலும் போட்டி நிகழ்ச்சியில் மாணவி வெற்றி பெற உற்சாகமளிக்கும் நோக்குடன் குறித்த மாணவிகளை அதிபர் அலுவலகத்துக்கு நேரடியாக அழைத்து கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்படவழிப்படுத்திய சிங்கள பாட இணைப்பாளர் ஏ.எம்.எம். அணிஸ் சிங்கள பாட ஆசிரியர்களான ஏ.எம். நெளஷாத், எம்.ஜ.எப். பாத்திமா சபானா, பாத்திமா ஸபினா மற்றும் சாதனை படைத்த மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் ஆர். ஸ்ரீஸ்கந்தராஜா பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச சுற்று நிறுபத்திற்கு அமைய நூலக வாரத்தினை முன்னிட்டு தேசிய வாசிப்பு மாதம் அக்டோபர் 2024 "வழி காட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்" எனும் தொனிப்பொருளில் நடமாடும் நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் தலைமையில் பச்சை வீடு ௯டத்தில் இடம்பெற்றது.
மிக சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நடமாடும் நூலகத் திறப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். நடமாடும் நூலகத்தில் சமயம், அகராதிகள், நாவல், கல்வி, அறிஞர்கள், பாடப்புத்தகத்துடன் தொடர்பான நூல்கள், செய்தி பத்திரிகைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என பல்துறை சார்ந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இடைவேளை நேரத்தில் கல்லூரி சமூகத்தினர் பயன்பெறும் வகையிலும் வாசிப்பினை மாணவி மத்தியில் சமூக மயப்படுத்துவற்கான ஏற்பாடுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களினை கல்லூரியின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் அவர்களினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் எம்.எஸ் மனூனா, ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியானது 125ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வெற்றிகள் பலவற்றை குவித்துக் கொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (29) கல்முனை வலய மட்டத்தில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஆண் மற்றும் பெண் மாணவ மேலைத்தேய வாத்திய (Western Band) இசைக்குழு போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) முதலாம் மற்றும். இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியானது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் சிறப்பாக ஒழுகுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பலத்த போட்டிகளின் மத்தியில் இதில் பங்குபற்றிய ஆண் மாணவ மேலைத்தேய இசை குழுவானது முதலாம் இடத்தையும், பெண் மாணவ மேலைத்தேய இசை குழுவானது இரன்டாமிடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது. இவ் மாணவர்களை ஊக்குவித்த அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் அவர்களுக்கும், பெண் மாணவிகளின் மேலைத்தேய இசை குழுவுக்கு பொறுப்பாகவும் வழிகாட்டியாகவும் உள்ள பிரதி அதிபர் அருட்சகோதரி எம். பிரியசாந்தி அவர்களுக்கும், பொறுப்பாசிரியரான திருமதி எஸ். சுரேஷ் அவர்களுக்கும் ஆண் மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசை குழுவுக்கு பொறுப்பாக உள்ள அருட்சகோதரர் ஏ. தேவராஜா அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான எஸ். நிர்மல் ராஜா அவர்களுக்கும் மற்றும் உதவிகளை புரிந்த பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தற்போது பிரத்தியேக வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பெற்றோர் மத்தியில் கல்வி மாத்திரம் அல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பிள்ளைகளை பங்கு பற்ற ஊக்குவிப்பளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டுள்ளது.
இப்போட்டியின் மூன்றாம் இடத்தை கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் தனதாக்கி கொண்டது.
2023 (2024) க.பொ.த.சா/த பரீட்சையில் அதிக அளவு 9"A" பெற்ற முதல் 60 பாடசாலைகளில் 10 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. வடமாகாணத்தில் நான்கு பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் ஐந்து பாடசாலைகளும் அதில் உள்ளடங்கியுள்ளன.
இச்சாதனையில் கிழக்கு மாகாணத்தில் ஜந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன அதில் நான்கு பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியன அதில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மட்டுமே கல்முனை கல்வி மாவட்டத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தரவுகளானது பெண் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிபரமானது. இவ்வெற்றியின் மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகள், மாணவிகளை பல வழிகளிலும் திறன்பட பயிற்றுவித்த பாட இணைப்பாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற “சாதுரிய காக்கையார்” என்ற நாடகத்தில் நடித்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி ஆசிரியர் சிவகுரு நந்தகுமாரினால் தயாரிக்கப்பட்ட “சாதுரிய காக்கையார்” என்ற தலைப்பிலான நாடகமானது மாகாணத்தில் முதலிடம் பெற்றது.
இந் நாடகம்
அண்மையில் கொழும்பில் மருதானை ரவர் மண்டபத்தில் (Tower Hall) நடைபெற்ற தேசிய ரீதியிலான இறுதிப் போட்டியில் கலந்து கொண்டது.
அப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட்ட 40 நாடகங்களில் முதல் 10 நாடகங்கள் தெரிவு செய்யப்பட்டன. அந்த பத்து நாடகங்களுள் ஒன்றாக கல்முனை கார்மேல் பற்றிமாகல்லூரி நாடகமும் தெரிவானது.
கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட இந் நாடகத்தில் பங்குபற்றிய மாணவர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்களை வழங்கும் விழா நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட் சகோதரர் எஸ்.இ.றெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், கல்முனை பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாளினி விக்னகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடகத் தயாரிப்பு ஆசிரியர் மற்றும் நடித்த ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.