Showing posts with label corona. Show all posts

 


மீண்டும் தலைதூக்கும் கொரோனோ!

தேர்தல் பிற்போடப்படுமா?


கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903ஆகும்.


இதற்கிடையில் கொவிட் -19 உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரும் நாட்களில் எதுவுமே நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

 


பாறுக் ஷிஹான்


25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது.

இன்று   அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும்  முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய குறித்த மீன் தூண்டிலில் சிக்குண்டு   கடலில் அட்டகாசம் காட்டியதுடன் இளைஞர்கள் குறித்த மீனை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட  கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்கான சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.



 கோவிட்-19 தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை இன்றே பெறுங்கள்!

 


உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவினால் 53 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர்.

 


அதிகாரபூர்வ பதிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட, மூன்று மடங்கு அதிகமாக, 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் (18 மில்லியன்) கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த ஆய்வு 'தி லேன்செட்' ஆராய்ச்சி இதழில் வெளியாகியுள்ளது.


உலக சுகாதார மையம் கொரோனா தொற்றுநோயை முதல் முறையாக அறிவித்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.


கொரோனா தொற்றால் ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் குறித்து ஆராயும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் குழுவானது, 191 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுகுறித்து ஆய்வு செய்தது. இதனை உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை என அழைக்கின்றனர்.


இந்த இறப்புகளில் சில கொரோனா தொற்றால் நேரடியாக ஏற்பட்டவையாகும். மற்ற இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவை ஆகும்.


கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்றால் என்ன? எங்கு, எப்படி, யாரெல்லாம் பெற முடியும்?

அதவாது, இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட ஏற்கெனவே உள்ள இணை நோய்கள் கொரோனா பாதிப்பால் மோசமடைந்து ஏற்படும் இறப்புகளாகும்.


தொற்று நோய் தாக்குதலுக்கு முன்பு, சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது எதிர்பார்த்ததை விட எத்தனை பேர் அதிகமாக இறந்துள்ளனர் என்ற அதிகப்படியான உயிரிழப்புகள் என அழைக்கப்படும் அளவீட்டு முறை மூலம் இந்த இறப்புகள் கணக்கிடப்பட்டன.


இதனை கணக்கிட, பல்வேறு அரசாங்க இணையதளங்கள், உலகளாவிய இறப்புகளின் தரவுத்தளம், மனித இறப்புகள் தரவுத்தளம் மற்றும் ஐரோப்பிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் உள்ளிட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் திரட்டினர்.


ஒவ்வொரு நாடு மற்றும் பிரதேசங்களில், இந்த அதிகப்படியான உயிரிழப்புகள் குறித்த விகிதங்களுக்கு இடையில் பெருத்த வித்தியாசம் இருந்தது கணக்கிடப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த உலகளாவிய இறப்பு விகிதம் 1,00,000 பேருக்கு 120 இறப்புகள் என இந்த ஆராய்ச்சியில் கணக்கிடப்பட்டுள்ளது.


கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதாவது, 2020இன் ஆரம்பம் முதல் 2021 இறுதிவரையிலான இரண்டு ஆண்டுகளுக்கிடையில், 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் (18.2 மில்லியன்) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட 5.9 மில்லியன் இறப்புகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்.


அதிகப்படியான இறப்புகள் முழு ஆய்வு காலத்திற்கு மட்டுமே கணக்கிடப்பட்டன, வாரம் அல்லது மாத வாரியாக அல்ல, ஏனெனில், கொரோனா இறப்புகள் குறித்த தரவுகளை பதிவு செய்வதில் உள்ள தாமதங்கள் மற்றும் முரண்பாடுகள், அதுகுறித்த மதிப்பீடுகளை அதிகளவில் மாற்றக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


'தி லேன்செட்' இதழில் பதிவான ஆராய்ச்சியின்படி, கொரோனாவால் உயிரிழப்புகள், குறைந்த வருமானம் கொண்ட லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா ஆகியவற்றை சேர்ந்த நாடுகளில் அதிகமாக நிகழ்ந்துள்ளன. ஆனால், இத்தாலி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் உள்ளிட்ட அதிக வருமானம் கொண்ட நாடுகளிலும் இந்த இறப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளன.


அதிகப்படியான உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ள முதல் 5 நாடுகள்:

பொலிவியா

பல்கேரியா

ஈஸ்வாடினி

வட மசிடோனியா

லெசோத்தோ

குறைந்த உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ள 5 நாடுகள்:

ஐஸ்லாந்து

ஆஸ்திரேலியா

சிங்கப்பூர்

நியூஸிலாந்து

தைவான்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், 1,73,000 என்ற அளவில், அதிகாரபூர்வ தரவுகளை போலவே 1,73,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 1,00,000க்கு 130 பேர் என்ற அளவில் இறப்பு விகிதம் இருந்தது.


இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய, சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் டாக்டர் ஹைடோங் வாங் கூறுகையில், "திறன்வாய்ந்த பொது சுகாதாரம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள உண்மையான இறப்பு எண்ணிக்கையை புரிந்துகொள்வது முக்கியமானது.


கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?

கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்

"ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகப்படியான உயிரிழப்புகளில் பெரும்பாலானவை கொரோனா தொற்றால் நேரடியாக ஏற்பட்டவை என்பதை இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆனால், பல பகுதிகளில் இதுகுறித்த போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இப்போது இல்லை.


"இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர்வது, கொரோனா தொற்றால் எத்தனை பேர் நேரடியாக உயிரிழந்தனர், எத்தனை பேர் மறைமுக காரணங்களால் உயிரிழந்தனர் என்பதை தெரிந்துகொள்ள உதவும்.


தடுப்பூசிகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் காரணமாக, கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அதிகப்படியான உயிரிழப்புகள் குறையும் என, ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.


ஆனால், இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என அவர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸின் புதிய, ஆபத்தான திரிபுகள் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 


#Covid19Lka தொற்று தொடர்பான மேலும் 14 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,307 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 14 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 16,321 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த 14 பேரில், 07 பேர் ஆண்கள், 07 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 12 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிம்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.


அரசிக்கு லேசான சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ள அரண்மனை, வரும் வாரங்களில் அவர் "லேசான பணிகளை" மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.


"அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார் " என்று அரண்மனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


95 வயதான அரசி தனது மூத்த மகனும் பட்டத்து வாரிசுமான வேல்ஸ் இளவரசருடன் தொடர்பில் இருந்தார். இளவரசருக்கு கடந்த வாரம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.


பிரிட்டனில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியான இரண்டாம் எலிசபெத், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தனது 70 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தார்.


சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது முதல் பெரிய பொது நிகழ்ச்சியாக, சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் தொண்டு ஊழியர்களைச் சந்தித்தார்.


அரசி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் பலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


அரசு தனது முதல் தவணை தடுப்பூசியை கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி போட்டுக் கொண்டார்.


இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கும் ஏற்கெனவெ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறை.

 


இன்று(7)திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேடமாக நான்கு(04) பரீட்சை நிலையங்களை அமைத்து பரீட்சை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட பரீட்சாத்திகளுக்கு பெரிய கல்லாறு மாவட்ட வைத்தியசாலையிலும் ,கல்முனை கல்வி வலய பரீட்சாத்திகளுக்கு அட்டாளைச்சேனை அயுர்வேத வைத்திசாலையிலும், அம்பாறை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் ,திருகோணமலை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு குச்சவெளியிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பரீட்சையினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் நலன் கருதி பரீட்சை ஆணையாளரின்  பணிப்புரைக்கு அமைவாக இவ்வாறு விசேட நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.


வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடன் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (31)முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் 241 ஆம் படைப்பிரிவின் கீழ் வரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களுக்கு இராணுவத்தின் மருத்துவ பிரிவினரால் தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது 2ஆம் மற்றும் 3ஆம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம் கடந்த காலத்திலும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வைத்திய குழுவினர் அம்புலன்ஸ் வசதிகளுடன் வீடுகளுக்கு சென்று தடுப்பூசியினை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் பிரதேச செயலகம் சுகாதாரத்துறையினருடன் இணைந்து வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


இலங்கையில் தடுப்பூசி ஏற்றிய ஒருவருடநினைவு நன்றிகூர் விழா

 (காரைதீவு நிருபர் )

'ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக ' எனும் தொனிப்பொருளில் கொரானா  பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஒரு அங்கமாக, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர்  தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்  நேற்று  நடைபெற்றது.

 முன்னதாக தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டு    கொரோணா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்பு ,பணிமனையின் கேட்போர்கூடத்தில் விழா காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர்  தலைமையில் நடைபெற்றது.

பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைச் தவிசாளர் கே.ஜெயசிறில் ,கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசெயலக உதவி செயலாளர் எஸ்.பார்த்திபன், சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ன்மீகஅதிதிகளாக சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள், மௌலவி அஸ்ரப் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியுடன்கூடிய வாழ்த்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் பிரதான உரையை சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

தலைமை பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு, தாதியபரிபாலகி திருமதி பவளா ராஜேந்திரகுமார் ஆகியோர் காரைதீவுப்பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திய விபரணத்தை காணோளி துணைகொண்டு விளக்கவுரைநிகழ்த்தினர்.
சுகாதாத்துறையினரைப் பாராட்டும் நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ,  விசேட அம்சமாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் இதன்  போது பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர்.
பொதுச்சுகாதாரபரிசோதகர் கே.ஜெமீல் நன்றியுரையாற்றினார்.


.கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வு கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் !!

(நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ்)

"ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக எனும் தொனிப்பொருளில் பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையின் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் வைத்தியசாலையில் இன்று காலை நடைபெற்றது. 

கொரோணா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுக உரையை வெளிநோயாளர்  பொறுப்பு வைத்திய அதிகாரி சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். ஹரிஸ் நிகழ்த்தியதுடன் தொற்றுத்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் ஏ.எல். பாரூக் கொரோணா கட்டுப்பாட்டு முகாமைத்துவ திட்ட அறிக்கை விளக்கத்தை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் பிரிவுகளுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் இந்நிகழ்வின் போது பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 


நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் சுமார் 1500 மாணவர்களுக்கான முதலாவது பைசர் ரக கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது.


12வயது முதல் 15வயதுக்குட்பட்ட சகல மாணவர்களுக்கும் இத்தடுப்பூசி பாடசாலை ரீதியாக ஏற்றப்பட்டுவருகிறது.
நாவிதன்வெளிப்பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வினோதினி தட்சணாமூர்த்தி தலைமையில் இத்தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம்  நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் தேசிய பாடசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அத்தருணம் அஸ்ஸிறாஜ் தேசிய பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப்பும் கலந்துகொண்டார்.

நாவிதன்வெளிப்பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வினோதினி தட்சணாமூர்த்தி தகவல் தருகையில்:

எமது நாவிதன்வெளிப்பிரிவில் சுமார் 1500மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா முதலாவது தடுப்பூசி படிப்படியாக பாடசாலை ரீதியாக ஏற்றப்படவிருக்கிறது.

அதேவேளை சுமார் 280 ஆசிரியர்களுக்கும் 2வது 3வது தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நாம் செல்லும் பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் இத்தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

எமது கோட்டத்தில் இதுவரை ஓரிரு பாடசாலைகளில் ஓரிரு பிள்ளைகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே சுகாதாரத்திணைக்களம் விடுத்துள்ள சுகாதார நடைமுறைவிதிகளை கடைப்பிடிக்கும் அதேவேளை உரியதரப்பினர் தடுப்பூசியை உரியவேளையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவதோடு ஏனையவர்களையும் காப்பாற்றமுடியும் என்றார்.

 


இனிவரும் காலங்களில் மேலதிக தடுப்பூசி உள்ளடங்கலாக 3ஆவது தடுப்பூசியை பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான  வெளியிடப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.


 மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது அவரது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

மேலும், மாலைதீவு ஜனாதிபதியின் மனைவி பஸ்னா அஹமட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளார் ன்பது குறிப்பிடத்தக்கது.

 


இலங்கையில் 75 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

புதன்கிழமை (19)அதிகாலை காய்ச்சல் இருப்பதையுணர்ந்த தவிசாளர் காரைதீவு சுகாதார வைதத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டு அன்ரிஜன் செய்யவேண்டி ஆலோசனையைகேட்டார்.


 
அதன்படி சிரேஸ்ட பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு தலைமையிலான குழுவினர்  தவிசாளரது வீட்டிற்கு சென்றுஎ அன்ரிஜன் சோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி தவிசாளர் அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து அவர் குடும்பத்தோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரும் அவரது மனைவியும் ஏலவே இரண்டு வக்சீன்களையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


--

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.