இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளி அமைப்புகள், 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, சுயாட்சியுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமையும் கடமையும் இருப்பதாக” இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக இரான் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
விளம்பரம்
இரானின் வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதன் காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இரானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இரான் அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
இருப்பினும், இரானில் எந்த வகையான ராணுவ தளங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இரான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக இரான் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தங்களுக்குத் தெரியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
“அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக இரானிலுள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவில் பிபிசியின் செய்தி கூட்டாளரான சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு கருத்துகளை கூறியது ஏன்? என்ன முரண்பாடு?
தெஹ்ரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் டேனியல் ஹகாரி (கோப்புப் படம்)
பிபிசியின் மத்தியக் கிழக்கு பிராந்திய ஆசிரியர் செபாஸ்டியன் அஷரின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று நம்பப்படுகிறது. அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மீது இரான் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.
இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமின்றி கடமையும்கூட என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில், இரானிய புரட்சிகர காவலர் படைக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனம், மேற்கு மற்றும் தென்மேற்கு தெஹ்ரானில் உள்ள சில ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.
இருப்பினும், எந்தெந்த இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை.
சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்பட, அவர் இந்தத் தாக்குதலின்போது ராணுவ தலைமையகத்தின் செயல்பாட்டு மையத்தில் இருப்பதாகக் காட்டுகிறது.
ரஷ்யாவில் 12 வயது மகள் வரைந்த ஓவியத்தால் சிறையிலிருந்த தந்தை விடுதலை - என்ன நடந்தது?
இரான் எதிர்த் தாக்குதல் நடத்துமா?
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று, இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.
இரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களையோ அதன் எண்ணெய் நிலையங்களையோ இஸ்ரேல் குறிவைப்பதைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை குறித்து வாஷிங்டனுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது இரானிய அரசு ஊடகம் வழக்கம் போல தாக்குதலின் வீரியத்தைக் குறைத்துக் காட்டுவதாக பிபிசி நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அசாடே மோஷிரி கூறியுள்ளார்.
மேலும், இந்தக் கட்டத்தில் சில முக்கியக் கேள்விகள் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை,
இந்தத் தாக்குதலில் இரானுக்கு உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது?
ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே இரானிய மண்ணில் கொல்லப்பட்டது, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை என இந்த ஆண்டில் தொடர்ச்சியான அவமானங்களைச் சந்தித்திருக்கும் சூழலில், தன்னை ஆதரிக்கும் ஆயுதக்குழுக்கள் வலுவிழந்துள்ள நிலையில், இரான் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறதா?
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கவும் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கும் வித்திடக்கூடிய மற்றுமொரு தருணமாக இது இருக்குமா?
ஹமாஸை இயக்கிய இந்த 6 தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆனார்கள்?
இரானிய அரசு ஊடகம் சொல்வது என்ன?
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Reuters
“இரானிய ஊடகங்களில் வெளியாகும் படங்களும் வீடியோக்களும் அமைதி நிலவுவது போன்ற செய்தியைச் சித்தரிக்க முயல்கின்றன. ஆனால், அந்நாட்டில் சமூக ஊடகங்களில் நிலை முற்றிலும் வேறாக உள்ளது” என்று ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பெஹ்னம் பென் தலேப்லு பிபியிடம் கூறுகிறார்.
பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த பஹ்மான் கல்பாசி, இரானில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இரானிய அரசு ஊடகங்கள் தற்போது இந்தத் தாக்குதல்கள் உண்மையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவை தோல்வியுற்றதாகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளாகும்போது இரான் வழங்கும் பொதுவானதொரு பதில் இது என்றும் கல்பாசி கூறினார்.
“இந்த அணுகுமுறை, பழி வாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாக இருக்கக்கூடும். ஆனால், சேதத்தின் அளவைக் காட்டக்கூடிய உறுதியான ஆதாரம் இருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டால், இந்த அணுகுமுறை சிதைந்துவிடும்,” என்கிறார் கல்பாசி.