Showing posts with label Technology. Show all posts

 


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)

முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் அங்குரார்பணம்.


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)


பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


டெலன்ட் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.


இதன் போது நவீன தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு தொடர்பாக, ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ விரிவுரையினை வழங்கியதுடன் அதன் செயற்பாடுகள் மற்றும் தொழில் விருத்தி தொடர்பாக நாஸ் கெம்பஸின் பகுதி நேர மாணவ விரிவுரையாளர்களான எம்.என்.என். கரீப், றுஸ்த் நௌபர், நவீன விற்பனை வாய்ப்பின் சமூக ஊடக உக்திகள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சஜித் அஹமட், சந்தை விரிவாக்கள் மற்றும் நுணுக்குகள் தொடர்பாக சட்டமாணி ஏ.ஜி.எம். ஸாமில் ஆகியோர் பங்கேற்று விரிவுரையாற்றினர்.


இதன் போது அதிகளவிலான சுய தொழில் பெண் ஆர்வலர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 


உலகளாவிய இணையத்தள  பொருட்கள் விற்பனையாளர்களான ஷீன், டெமு, அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் விஷ் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்

 

சிறார்களுக்கு ஆபாச உள்ளடக்கங்களை  தங்கள் தளங்களில் அணுக அனுமதித்த குற்றம் தொடர்பிலேயே இவ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அதே மண்ணில்  தாளிடுவதற்கு இந்த கலப்பை உபயோகப்படுத்தப்படுகிறது. 

அம்பறையில் சம்மாந்துறை பகுதியில் இந்த புதிய கலப்பையை ஒரு விவசாயி கொள்வனவு செய்து வயலில் பயன் படுத்தி வருகிறார்.

 அண்மையில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பங்களாவடி பணிமனையில் இப் புது கலப்பை அறிமுகப்படுத்தப்பட்டது .

விவசாயிகள்  சங்கத்தின் தலைவர் ஏ. எம் .நௌஷாட் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இதனை பார்வையிட்டார்கள்.

நிலத்துக்கு தேவையான முக்கிய அரிய கனிப்பொருள் சிலிக்கனாகும். அந்த சிலிக்கன் என்ற கனிப் பொருள் வைக்கோலில் நிறையவே இருக்கின்றது  எனவே வைக்கோலை எரிக்காது நிலத்திலே தாளிடுதல் மிகுந்த பிரயோசனப்படும். மண்ணும் வளமாகும். பயிரும் செழிப்பாக வளர்ந்து நல்ல அறுவடையை தரும் 
என்றார் விவசாயிகள் சங்க தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான 
ஏ.எம். நவ்ஷாட் 
இந்த புதிய ரக கலப்பை தொடர்பாக குறிப்பிட்டார்

 

Ranking of the 10 Most Influential LinkedIn Profiles in Sri Lanka 🇱🇰 according to Favikon’s Global Thought Leaders list:

Congratulations to all 👏👏👏

1️⃣ Dhanika Perera

2️⃣ Otara Gunewardene

3️⃣ Harsha de Silva

4️⃣ Heminda Jayaweera

5️⃣ Chalinda Abeykoon

6️⃣ Abdus Salaam

7️⃣ Vidusha Nathavitharana

8️⃣ Amitha Amarasinghe

9️⃣ Nelson Sivalingam

🔟 Dilhan C. Fernando

\


 கூகுளின் பிரபலத்திற்கு ஒரு காரணம், நாம் அதனை பயன்படுத்தும் விதத்திலிருந்து நம்மை பற்றி கற்றுக்கொள்வதாகும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Human Compatible AI-க்கான மையத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்ரே (Jonathan Stray)

பெரும்பாலும் பயனரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றபடி, தேடல்களின் முடிவுகளை கூகுள் வழங்குகிறது. நீங்கள் யார்? எங்கு வசிக்கிறீர்கள்? போன்றவற்றை கூகுள் தெரிந்து வைத்திருப்பதாக ஜோனதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

உங்களுடைய கேள்விகளுக்கு முந்தைய தேடல்களை நினைவில் வைத்துக் கொண்டு முடிவுகளை இது வழங்குகிறது. உங்களுடைய முந்தைய தேடல்களை கவனத்தில் கொண்டு தேடல் முடிவுகள் வழங்கப்படுவதன் பொருள் கூகுள் அதன் பயனர்களின் தரவுகள் பலவற்றைச் சேகரிக்கிறது என்பதுதான்.

தொடர்ந்து பேசிய அவர், "கூகுள் ஒவ்வொரு தேடலின் பதிவையும் வைத்திருப்பதோடு, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒரு பயனர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதையும் தெரிந்து வைத்திருக்கும். இணைப்பைத் திறந்த சிறிது நேரத்தில் ஒரு பயனர் அதனை மூடினால், அந்தப் பக்கம் பயனரின் தேடலுக்குப் பயனுள்ளதாக இல்லை என்பதை கூகுள் புரிந்துகொள்கிறது." என்று தெரிவித்தார்.

இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அவர் விளக்கினார். "உதாரணமாக Python என்கிற கணினி புரோகிராம் மொழியை ஒருவர் தேடினால், அவருடைய முந்தைய தேடல்களில் இருந்து அவர் கணினி தொடர்புடைய தகவலைத் தேடுகிறார் என்பதை புரிந்துக் கொண்டு, அது தொடர்பான பக்கங்களையே காட்டும். Python பாம்புகளைப் பற்றிய பக்கங்களை காட்டாமல் இருக்கலாம்."

இதன் பொருள் கூகுள் நமது தேடலுக்கு ஏற்ப அது வழங்கும் முடிவுகளை தகவமைக்கிறது. அப்படியென்றால், நமக்கு உண்மையிலேயே தேவையான முடிவுகளைத் தருவதில்லை, மாறாக நாம் பார்க்க விரும்பும் முடிவுகளையே அதுவே தீர்மானித்து கொண்டு கூகுள் தருகிறது என்ற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய சாத்தியக்கூறு குறைவு என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

இருப்பினும் தேடல் முடிவுகளை வரிசைபடுத்துதல் அல்லது வழங்கப்படும் முடிவுகளில் மேலே இருக்கவேண்டிய பக்கம் எவை? கீழே இருக்கவேண்டிய பக்கங்கள் எவை என்பவை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது குறித்து விளக்கம் சொல்லாமல் கூகுள் அமைதியாக காக்கிறது.

நிதி ஆதரவு பெற்றுகொண்டு சில நிறுவனங்கள் அல்லது இணைய உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் பக்கங்களை தேடல் முடிவுகளில் கூகுள் முதலில் தோன்ற செய்வதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இந்த சந்தேகத்தை நிரூபிப்பது கடினம். பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை மனதில் கொண்டு அனைத்து நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது முக்கியம் என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் இந்த நிறுவனங்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் கருதப்படுகிறது.

கூகுளின் எதிர்காலம்:

கூகுள், கூகுள் வரலாறு, தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,Getty Images

ஐரோப்பிய ஒன்றியமும் கூகுளுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது என்றாலும், இந்த முடிவு அமெரிக்க நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் பொருளாதார மற்றும் வணிக போட்டியாற்றல் துறை நிபுணரான கிறிஸ்டினா கஃபாரா,

வெற்றிகரமான அமெரிக்க நிறுவனம் ஒன்று, உண்மையில் தவறாக நடந்து கொள்வதாகவும், அதை சரிசெய்யவேண்டும் என்று அமெரிக்காவே சொல்லும்போது விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அது உலக அளவில் உண்மையிலேயே ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி கிறிஸ்டினா சந்தேகிக்கிறார்.

"அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, உலகின் சிறந்த அமெரிக்க நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படும் நிறுவனம் ஒன்று தவறான முறையில் செயல்படுவதாக கூறுவதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது." என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், தேடுபொறி சந்தையிலும் விளம்பர தொழில்நுட்பத்திலும் மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனத்தை அசைப்பது சுலபமல்ல என்று கிறிஸ்டினா கஃபாரா எச்சரிக்கிறார். தற்போது வெர்ஜீனியாவில் கூகுள் மீது தொடங்கப் போகும் வழக்கு, அந்நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது.

"தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஐரோப்பாவில் இணையத் தேடலில் கூகுளின் சந்தைப் பங்கு 98 சதவீதமாக இருந்தால், அது அமெரிக்காவில் 93 சதவீதமாக உள்ளது. இப்போதும் அந்த நிலை மாறவில்லை. எனவே வலுவாக இருக்கும் கூகுளின் இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதுதான் கேள்வி. விளம்பர தொழில்நுட்பம் மற்றும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் கூகுளையே சார்ந்து உள்ளன. நாம் இணையத்தில் திறக்கும் ஒவ்வொரு வலைத்தளம், விளம்பரங்களைக் கொண்ட ஒவ்வொரு பயன்பாடு பற்றிய நமது அன்றாட அனுபவம் அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் கூகுளின் மூலம் இயக்கப்படுகிறது." என்கிறார் கிறிஸ்டினா.

தொடர்ந்து பேசிய அவர், "தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதித்துவிட்டோம். இது உலக அரசியலின் ஒரு பகுதி. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம், ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வேறு நிறுவனங்களை வாங்குவதன் மூலம் ஏகபோகத்தைப் பெற்றுவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடுகிறது." என்றும் தெரிவித்தார்.

இது அரசாங்கங்களின் தவறு என்று கிறிஸ்டினா கூறுகிறார். ஒரு புவிசார் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்படுவதற்கு அனுமதித்துவிட்டோம். கூகுளின் சந்தைப் பங்கை குறைக்க அதன் போட்டி நிறுவனங்கள் என்ன செய்யும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஆப்பிள் ஒரு தேடுபொறியைத் தொடங்கப் போகிறதா? இல்லை. அதேபோல், பிங் என்றென்றும் மைக்ரோசாப்டின் இயந்திரமாக இருந்து வருகிறது, பிங்கில் AI அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, சந்தைப் பங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, கிறிஸ்டினாவின் கருத்துப்படி, கூகுள் ஒரு ஏகபோக ஆதிக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆனால், இந்தக் கூற்றை மறுக்கும் கூகுள் நிறுவனம், போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. இருப்பினும், கூகுள் சர்ச், அதனுடன் போட்டியிடும் சர்ச் எஞ்சின்களை விட சிறந்தது என்பதை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதும் உண்மை.

இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் கூகுளுக்கு என்ன தண்டனை அளிக்கிறது என்பதை முடிவு செய்ய நேரம் எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின் முடிவு பாதகமாக இருந்தால், மேல்முறையீடு செய்யப்போவதாக கூகுள் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் யூ-டியூப் பக்கத்தில் ஒலி மற்றும் ஒளி வடிவில் வெளியாகும் உலகின் கதை என்கிற தொடரில் வெளியான ஒரு பாகத்தின் கட்டுரை வடிவம் இது.

 


கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.


முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.


ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.


இந்த பதில்களை "செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) " என்று அழைக்கிறது கூகுள் .


சில நேரங்களில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கூகுள் டயலர், ஸ்மார்ட்போன் திரை, கூகுள் அப்டேட்

ஸ்மார்ட்போனில் மீண்டும் பழைய கால் செட்டிங்ஸ் பெறுவது எப்படி? படங்களுடன் எளிய விளக்கம்

அமெரிக்க வரி, டிரம்ப் வரி, இந்தியா 50% வரி, trump tariffs, america tariff on india, usa tariff, tariff news today 

அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்

ராமலிங்க விலாசம் மாளிகை

கட்டபொம்மன் - ஜாக்சன் 'சந்தித்த' மாளிகையில் உள்ள ஓவியங்களும் சுரங்கப்பாதையும் உணர்த்தும் ரகசியம்

தொற்று பாதித்த பசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்க்ரூவர்ம் ஈயின் புழுக்கள், ஒரு வெள்ளை பாத்திரத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றன. 

சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு அமெரிக்காவில் ஒருவரிடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் சில நேரங்களில், தவறான தகவல்களை அளித்து, மக்களை குழப்புகின்றன.


அதேபோல், இந்த செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) நீங்கள் அடுத்து என்ன செய்யத் தேர்வு செய்கிறீர்கள் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.


இந்த ஆண்டு, 900 அமெரிக்க இணைய பயனர்கள் இணையத்தில் தாங்கள் தேடுபவற்றைக் கண்காணிக்க, பியூ ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி கொடுத்தனர்.


"செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும் தேடல்களில், இவர்கள் இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும், அவர்கள் தேடுவதை முழுவதுமாக நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது," என பியூவின் டேட்டா லேப்ஸ் இயக்குநர் ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும்போது, பயனர்கள் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு குறைவாக இருந்தது. மேலும், 26% சமயங்களில், அவர்கள் தேடுவதையே நிறுத்திவிட்டனர் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.


இது மிக முக்கியமானது, ஏனென்றால் மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். இணையதள செயல்பாடுகள் தொடங்கும் இடமும் இதுதான்.


பெரும்பாலான வலைத்தளங்கள், அதிலும் குறிப்பாக, பொருட்களை விற்காமல் தகவல் மற்றும் உள்ளடக்கம் வழங்கும் வலைத்தளங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.


இந்த டிஜிட்டல் சூழல் பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து இயங்குகிறது. ஆனால், கூகுளின் தேடல் முடிவுகளில் வலைத்தளங்கள் தோன்றுவதை குறைத்து, ஒரே இரவில் வணிகங்களை அழித்துவிடலாம்.


இணைய பயன்பாடு 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல தளங்கள், கூகுளில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் பார்வையிடுவதை தான் நம்பியுள்ளன.

"பெரும்பாலான வலைத்தளங்கள் இயங்குவதற்கு கூகுள் பார்வையாளர்கள் தேவை," என மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்சிவ் நிறுவனத்தின் தேடுபொறி குறித்த பிரிவின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.


"ஆனால், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பார்வையாளர்களை பெருமளவு குறைத்து, வலைத்தளங்களின் வருமானத்தை 20%, 30%, அல்லது 40% வரை சரியச் செய்கின்றன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது."


கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு பயன்முறை, பாரம்பரிய தேடல் முடிவுகளை முற்றிலும் நீக்குவதால், இது மேலும் மோசமாகலாம்.


லில்லி ரே மற்றும் நிபுணர்கள் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.


சிலர் இது நாம் அறிந்த இணையத்தை அழித்துவிடலாம் என அஞ்சுகின்றனர்.


வலைத்தளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடுமா?

வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்காக மக்கள் வருவதை, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) குறைக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தை 'முட்டாள்தனம்' எனக்கூறி மறுக்கிறது கூகுள்.


"நாங்கள் ஒவ்வொரு நாளும் வலைத்தளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகளை இயக்குகிறோம், அதில் பெரிய சரிவு இல்லை",


மேலும், "இந்த ஆய்வு தவறான முறையையும், தேடல் போக்குவரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாத, ஒரு சார்பு கொண்ட கேள்விகளையும் பயன்படுத்துகிறது"என கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், பியூ நிறுவனம் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.


"எங்கள் முடிவுகள், வலை பகுப்பாய்வு நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன," என ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடப்படும் விஷயங்களைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தேடல் போக்குவரத்தை 30% முதல் 70% வரை குறைக்கின்றன என பல அறிக்கைகள் கூறுகின்றன.


நூற்றுக்கணக்கான வலைத்தளங்களின் தரவைப் பயன்படுத்தி இதை தானே சோதித்ததாக ரே கூறுகிறார்.


ஆனால், கூகுள் இதை ஏற்கவில்லை.


ஆராய்ச்சி தவறானது, தரவுகள் சார்புடையவை, மற்றும் அர்த்தமற்ற தரவுகளை மேற்கோள் காட்டி, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிபிசியிடம் கூறுகிறது கூகுள்.


மக்கள் வலைத்தளங்களுக்கு சென்று தேடுவது பல காரணங்களால் மாறுபடுவதாகவும், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பலவகையான இணைப்புகளை வழங்கி, வலைத்தளங்களைக் கண்டறிய புதிய வழிகளை உருவாக்குவதாகவும் கூகுள் கூறுகிறது.


செயற்கை நுண்ணறிவு சுருக்கங்களில் (AI summaries) இருந்து வரும் தரவுகள் உயர்தரமானவை, ஏனெனில் பயனர்கள் அந்தத் தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.


ஆனால் அதற்கு முரணாக, கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு, அதன் மக்கள் தொடர்பு துறையின் கருத்தை மறுக்கிறது.


கூகிள் ஜெமினியிடம் கேட்டால்,செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) வலைத்தளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறும்.


ஆதாரம் தெளிவாக உள்ளது. "கூகுள் தகவல்களை மாற்றி, உண்மையை மறைக்க முயல்கிறது, ஏனெனில் அது மக்களை பயமுறுத்தும்," என்கிறார் ரே.


ஆனால் கூகுள் நிறுவனம் தாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது.


 கூகுள்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த காலத்தில், கூகுள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இணைப்புகளை வழங்கியது.

குழப்பும் செயற்கை நுண்ணறிவு

ஆனால், இதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோமா என்ற மற்றொரு கேள்வியும் உள்ளது.


"மக்கள் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தேடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மக்கள் மேலும் கேள்விகளைக் கேட்க உதவுகின்றன, இது வலைத்தளங்களுடன் இணைவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது," என கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், இது அர்த்தமற்றது என ரே கூறுகிறார்.


"கூகுள் 'இனி யாரும் கிளிக் செய்ய விரும்பவில்லை' என்று சொல்லலாம். ஆனால் அது மற்றவர்களின் கடின உழைப்பில் லாபம் ஈட்டுகிறது. தகவல்களை உருவாக்கிய தளங்களுக்கு பார்வையாளர்கள் செல்வதை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது" என்கிறார் ரே.


வலைத்தளங்களை விடுங்கள், ஏஐயின் தவறான தகவல்களைத் தரும் பழக்கம் உங்களுக்கும் கெடுதல் தரும் என்று ரே கூறுகிறார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுவான விளக்கங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன," என்கிறார் அவர்.


"இது வலைத்தளங்களில் இருந்து பார்வையாளர்களை பறிப்பது மட்டுமல்ல, பயனர்கள் வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து, விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்து, முடிவுகளை எடுக்கும் திறனைக் கொள்ளையடிப்பது போன்றது."


ஏஐயின் பதில்கள் உதவிகரமாகவும், புறநிலை அம்சம் கொண்டதாகவும், மற்ற தேடல் அம்சங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியத்துடனும் உள்ளன என்கிறது கூகுள்.


ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் நாமும் சேர்ந்திருக்கலாம்.


ஏனென்றால், பதில்கள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.


நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் குறைகிறது.


செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே முடிவுகளை எடுத்துக் கொடுத்து விடுவதால், வெவ்வேறு ஆதாரங்களை ஆராய வேண்டிய தேவையும் குறைகிறது அல்லவா?.


ஆனால், கூகுள் தவறு செய்து வலைத்தளங்கள் மறையத் தொடங்கினால், அது நாம் தவறான இணைப்பை கிளிக் செய்ததால் இருக்காது. நாம் தேடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தான் இருக்கும்.

 


நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.


ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.


இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.


சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கழிப்பறை இருக்கைகளிலிருந்து நோய்கள் பரவுமா?

"பொது கழிப்பறையை விட வீட்டு கழிப்பறை ஆபத்தானது" - காரணத்துடன் விளக்கும் சுகாதார நிபுணர்கள்

ஒருவரை அழைக்கும்போதோ அல்லது ஆண்ட்ராய்டு போனில் இருந்து அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம். 

உங்கள் ஸ்மார்ட் ஃபோன் திரை தானாகவே மாறிவிட்டதா? - காரணம் இதுதான்

ஹைபர்சோனிக் ஏவுகணை 

ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 

மோதி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வியா? அமெரிக்கா, சீனாவுடனான உறவு பற்றிய ஓர் அலசல்

End of அதிகம் படிக்கப்பட்டது

எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.


ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.


உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.


ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.


'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன?

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர்.


சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.


"வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.


 டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.பட மூலாதாரம்,Google

படக்குறிப்பு,பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து.


இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ?

அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ).


'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


தொலைபேசியின் மென்பொருளையும் காட்சியையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில்  மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது

முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது.


புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும்.


பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன?

'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.


இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது.


அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது.


'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள்.


ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.


யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.


தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.


எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது.


இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.


புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள்.


கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை.


போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.பட மூலாதாரம்,Google

படக்குறிப்பு,கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார்.


மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார்.


பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது.


எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம்.


பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம்



 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பான கருத்தரங்கு அதிபர் ஏ. ஜீ.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் 2025.08.19ம் திகதி  நடைபெற்றது.

உலக வங்கியின்"Gem project"திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக,  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கில பாட இணைப்பாளர் திரு. ஏ.எல்.எம். ஆரிப் அவர்கள் கலந்து கொண்டார்.

தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள் செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறை மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் , மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் 

 

ஒரு மாணவர் தனது பட்டத்தைப் பெற ஒரு ஹியூமனாய்டு ரோபோவை (Humanoid Robot) அனுப்பினார்.


இது என்னங்கடா புதுசா இருக்கு?! 🤯 சீனால ஒரு புத்திசாலிப் பையன், தன் பட்டமளிப்பு விழாவுக்கு (Graduation Ceremony) நேர்ல போகாம, ஒரு ரோபோவை (Robot) அனுப்பி பட்டத்தைப் வாங்கிட்டு வந்திருக்கான்! 


கை குலுக்கறதுல இருந்து, சர்டிபிகேட் வாங்குறது வரைக்கும் எல்லாமே ரோபோதான் (Robot) பாத்துக்கிச்சு.

 


செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.


ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது.


உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.


இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா?


விளம்பரம்


ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது?

சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

சரோஜா தேவி விருதுபெறும் காட்சி

வெறுக்கப்பட்ட மகளாக பிறந்து திரையுலக ராணியாக வலம் வந்த சரோஜா தேவியின் சாதனை பயணம்

லார்ட்ஸ் டெஸ்ட்

போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?

 நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்?

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  தமிழ்நாடு அரசு   

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசு வேலை - இளைஞர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.


கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது.


10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது.


ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை.


இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.


ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ.


2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது.


"நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார்.


ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது?

'கதை படித்தால் பணம் வரும்' - லுக் ஆப் மோசடியின் பெண்கள் சிக்கியது எப்படி?

11 ஜூலை 2025

ஸ்டார்லிங்க் இணைய வேகம், கட்டணம் எப்படி இருக்கும்? இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

8 ஜூலை 2025

கீழடி: மண்டை ஓடுகளின் அடிப்படையில் முகத்தை மறுஆக்கம் செய்தது எப்படி? ஆய்வாளர்கள் விளக்கம்

5 ஜூலை 2025

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன.


இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன.


கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன.


இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது.


ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.


சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம்.


அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது.


ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது?

தரவு மையம் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன.

பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.


ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும்.


2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது.


இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது.


இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம்.


கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?

19 ஜூன் 2025

ஃபாஸ்டேக்: 'ரூ. 3000 செலுத்தினால் 200 ட்ரிப்' - புதிய அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கான பதில்கள்

19 ஜூன் 2025

ராக்கெட் விண்வெளிக்குப் புறப்படும் போது சவாலான முதல் சில நிமிடங்களில் என்ன நடக்கும்?

8 ஜூன் 2025

வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்?

சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது.


ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது.


சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது.


சுற்றுச்சூழல் குழுக்கள் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார்.


நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார்.


ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன.


அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.


மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது.


மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது.


அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை.


2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின்  காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா?

உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார்.


மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது.


எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.


ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.


தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து

6 ஜூன் 2025

ஐபோன் உற்பத்தி: டிரம்ப் அறிவிப்பால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 40 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்தா?

26 மே 2025

நடிகர்களே இல்லாமல் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரான காதல் சினிமா - ஏ.ஐ மூலம் சாத்தியமானது எப்படி?

21 மே 2025

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ?

ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது.


ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார்.


சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, பட மூலாதாரம்,Meta

படக்குறிப்பு,சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன.

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார்.


தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.


இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன.


ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார்.


பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார்.


"நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்."


"நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார்.


ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாற்றினால் யாருக்கு இழப்பு?

17 மே 2025

ஏ.ஐ வல்லுநராக விருப்பமா? கல்லூரி படிப்பை தேர்வு செய்கையில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

17 மே 2025

சென்னை மாநகராட்சி சேவைகளை விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம் - ஆணையர் தகவல்

4 மே 2025

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன.


இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர்.


ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார்.


நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது.


ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் .




 (வி.ரி.சகாதேவராஜா)


 தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில்  SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU Lanka) வுடன் இணைந்து தாராள உள்ளங்கள் அறக்கட்டளை யினால் கல்முனை அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது,

 அறக்கட்டளையின் தலைவர்  ஜெ.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நேற்று(14) புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ்  சிறப்பதிதிகளாக கல்முனை பிரதி கல்விப்பணிப்பாளரும் காரைதீவு கல்முனை தமிழ்பிரிவு கோட்டாக்கல்விப் பணிப்பாளருமாற ஆ. சஞ்ஜீவன் , முன்னாள் முல்லைத்தீவு  மாவட்ட செயலாளர் கே.விமலநாதன்  , கல்முனை HNB முகாமையாளர் என்.அரவிந்தன் , மற்றும் கௌரவ அதிதியாக AU Lanka கிழக்கு மாகாண தலைமை நிர்வாக அதிகாரி கே.கஜேந்திரன் அவர்களும் மற்றும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிருவாக உறுப்பினர்கள், AU Lanka நிருவாக உறுப்பினர்கள் SuRaLa திட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் AU Lanka கல்முனை அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது


 உலகின் மிகப்பெரிய Computer 🖥️ Hacking கொள்ளையர்கள் அமெரிக்கா தான்!

அவர்கள் கொள்கையே அந்த அளவுக்கு நேர்மையற்றதாக உள்ளது!


- Zhang Hanhui,

ரஷ்யா 🇷🇺-வுக்கான சீன தூதர்

 


பாறுக் ஷிஹான்


நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  உணவகங்களில் புதன்கிழமை (19) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற   QR code  மூலமான முறைப்பாடு  மற்றும் நேரடியாக வழங்கப்பட்ட முறைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு அதன் உண்மைத்தன்மையை அறிய சில உணவு கையாளும் நிறுவனங்களில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  ஜே. மதன்   தலைமையில்  பொது சுகாதார பரிசோதகரினால் இப்பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதன் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது.
 
அத்துடன் தற்போதைய நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம்  மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும் பொறுப்பும் ஆகும் .பொதுமக்கள் தங்கள்  முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எமக்கு  QR code ஊடாக முறைப்பாடுகளை முறையாக வழங்கும்  பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதே வேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் சிலவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  வகையில் காணப்பட்ட உழுவா  மற்றும் மாசி கைப்பற்றப்பட்டதுடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டது.
  
மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்படும்  கறுப்பு மிளகின் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நடவடிக்கையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஜே. மதனின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்   மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

 



ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இன்று (ஜனவரி 29) அதிகாலை 6.23 மணிக்கு விண்ணில் ஜிஎஸ்எல்வி- எப்15 (GSLV- F15) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் என்விஎஸ்-02 (NVS-02) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இந்த என்விஎஸ்-02 மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும், பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் ஏவப்பட்டது.


இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் நடந்த முதல் ராக்கெட் ஏவுதல் இதுவாகும்.


இந்த ஜிஎஸ்எல்வி-எஃப் 15 என்பது இந்தியாவின் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (ஜிஎஸ்எல்வி) 17வது விண்கலமாகும் மற்றும் உள்நாட்டு கிரையோ நிலை கொண்ட 11வது விண்கலமாகும். அதுமட்டுமல்லாது உள்நாட்டு கிரையோஜெனிக் நிலையுடன் ஜிஎஸ்எல்வியின் 8வது செயல்பாட்டு விண்கலம் இதுவாகும்


வி.நாராயணன், இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் என்பதால், இந்த ஏவுதல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.





இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா, 100வது ராக்கெட்பட மூலாதாரம்,@isro

சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில், 43,360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்.


முன்னர் ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச் (SHAR) என இந்த விண்வெளி ஆய்வு மையம் அழைக்கப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சதீஷ் தவான் நினைவாக, செப்டம்பர் 5, 2002இல் பெயர் மாற்றப்பட்டது.


1960களில், விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டன. அதன் அங்கமாக, நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் அல்லாமல், ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


1969இல் இதற்காக ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டது. காரணம் ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ளது.


இதன் பயனாக, இங்கிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டால், அவை வினாடிக்கு 0.4 கி.மீ கூடுதல் வேகத்துடன் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 1440 கி.மீ கூடுதல் வேகத்தை ராக்கெட்டிற்கு அளிக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் பூமியின் சுழற்சி அமைந்துள்ளது.


ஸ்ரீஹரிகோட்டாவைப் போன்று, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம், பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன.


நிலவில் மனிதர்களுக்கு ஆக்ஸிஜனை உருவாக்குவது எப்படி?- வேகமெடுக்கும் ஆராய்ச்சி


இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா, 100வது ராக்கெட்பட மூலாதாரம்,@isro

படக்குறிப்பு,ஸ்ரீஹரிகோட்டாவில், 43,360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்

ஏவுதளத்திலிருந்து ராக்கெட் புறப்பட்டவுடன் திட்டமிட்டபடி அது நேரடியாக விண்ணில் பயணிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தொழில்நுட்ப காரணங்களால் சில நேரம் ராக்கெட்டுகள் பயணப் பாதையில் இருந்து திசைமாறி விபத்துக்குள்ளாகும்.


அதுபோன்ற தருணத்தில், ராக்கெட் பல துண்டுகளாக சிதறி மக்கள் வாழும் பகுதியில் விழுந்தால் உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டா சுற்றுவட்டாரத்தில் பெரிய அளவிலான மக்கள் தொகையோ, வீடுகளோ கிடையாது.


தண்ணீரால் சூழப்பட்ட இந்த இடத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் விபத்தில் சிக்க நேர்ந்தால், அவற்றில் இருந்து உடையும் பாகங்கள் கடலில் விழும் என்பதால் உயிர் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்படும்.


நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?


தோல்வியில் முடிந்த முதல் முயற்சி

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவலின்படி, ஆகஸ்டு 10, 1979இல், எஸ்எல்வி-3 (SLV-3 E1) மூலம் ரோகிணி (Rohini Technology Payload) எனும் முதல் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.


அதுவே ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச்சின் முதல் ராக்கெட் ஏவுதல் நிகழ்வு. ஆனால், ராக்கெட்டின் இரண்டாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.


பிறகு, 1980ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி எஸ்எல்வி - 3 (SLV-3 E2) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது ரோஹிணி - 1 (RS-1) என்ற 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.


இந்தச் சாதனையின் மூலமாக சொந்தமாக ராக்கெட், செயற்கைக்கோள் ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை கண்காணிக்கும் அமைப்புகளையும் ஏற்படுத்திய 6வது நாடாக இந்தியா உருவெடுத்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் அப்போது இருந்தது.


ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இரண்டாவது ஏவுதளம் 2005இல் தொடங்கப்பட்டது.


உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?

 


எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.


''புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது, அந்த கையடக்கத் தொலைபேசி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாததாக இருந்தால், அந்த தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று கிடைக்கப் பெறும்."


''இந்த குறுந்தகவல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அதனால், கையடக்கத் தொலைபேசிகள் சட்டரீதியானதாகக் காணப்படுகின்றமையானது, பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்" என அவர் கூறுகிறார்.



இலங்கை,  செல்போனுக்கு புதிய கட்டுப்பாடு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பரிசாக கிடைக்கும் செல்போன்களை என்ன செய்வது?

நாட்டிலுள்ள நபர் ஒருவருக்கு பரிசாக அல்லது வெளிநாட்டிலிருந்து மீண்டும் வருகை தரும் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்தல் அத்தியாவசியமானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கின்றார்.


''இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்குப் பரிசு வழங்குவதற்கு அல்லது தமது பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகளை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் இருக்குமானால் அந்த கையடக்கத் தொலைபேசியை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்துகொள்ள முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்த்தகர்கள் தமது வர்த்தக அபிலாஷைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



இலங்கை,  செல்போனுக்கு புதிய கட்டுப்பாடு

படக்குறிப்பு,நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன என்கிறார் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்

இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தமது தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளைப் பதிவு செய்ய வேண்டுமா என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் வினவினோம்.


''இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்."


''அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சிம் அட்டையானது, வெளிநாட்டு பிரஜை நாட்டைவிட்டு வெளியேறும்போது பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வெளிநாட்டு பிரஜை தனது தொலைபேசியை இலங்கையிலுள்ள ஒருவருக்கு பரிசாக வழங்குவாராக இருந்தால், அவர் புதிய சிம் அட்டையை உட்செலுத்த வேண்டும். அப்போது அந்த தொலைபேசிக்கு பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி என்ற குறுந்தகவல் கிடைக்கும். தொலைபேசியை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படும்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.



இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்களை விடவும், பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்கள் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்து வருவதை சந்தையில் காண முடிகின்றது.


இந்த நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரும்போது முன்னெடுக்கப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் காரணமாக, மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இல்லாது போகுமா என அவரிடம் வினவினோம்.


''குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இந்தப் புதிய நடைமுறையின் ஊடாக இல்லாது போகின்றது எனச் சிலரால் கூற முடியும். எனினும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்து இன்றும் அதிக விலையில் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன."



''எனினும், நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் பதிவு செய்து, பயன்பாட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாங்கள் முயல்கின்றோம்.'


''ஒரே ரகமான கையடக்கத் தொலைபேசிகள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை நாங்கள் காண்கின்றோம். குளிரூட்டப்பட்ட விற்பனை நிலைகளிலும், சாதாரண விற்பனை நிலையங்களிலும் இரண்டு விதமான விலைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்படும். விற்பனையாளர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற போட்டித் தன்மை காரணமாக, பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்."


''பாரியளவிலான கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் அதிகளவான லாபம் ஈட்டுகின்றன. பாரியளவிலான தொலைபேசிகளை இறக்குமதி செய்யும்போது கிடைக்கின்ற சலுகைகளின் பிரகாரம் அதிக லாபத்தைப் பெறுகின்றனர். எனினும், அந்தச் சலுகை பொது மக்களுக்கு கிடைப்பதில்லை" என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கிறார்.

 



#மாகாண #மட்ட #தகவல் #தொழிநுட்ப #புத்தாக்க #போட்டி #நிகழ்ச்சி-2024


அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் #தேசிய #மட்டப் #போட்டி நிகழ்வுக்கு தெரிவு !!!!!!


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் செயற்பட்டு வரும் இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்பான குழுக்களாக காணப்படும் #Computer #Society, #Hardware & #Software #Team, #young #Inventors #Club ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்  இன்று 14/09/2024 மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட தகவல் தொழில்நுட்ப புத்தாக்க  (ICT INNOVATION) போட்டி நிகழ்வில் எமது பாடசாலை சார்பாக சுமார் 10 மாணவர்கள் பங்குபற்றினார்கள்.மேற்படி போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவம் செய்து சுமார் 150 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.ஆயினும் அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பாக எமது பாடசாலை மட்டுமே பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதில் #AM.#முராத் எனும் மாணவன் #கல்வித்துறையில் #புத்தாக்கம் புரிவதற்கான ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்மையால் அவர் தேசிய மட்ட தகவல் தொழில்நுட்ப புத்தாக்க போட்டி நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் இளம் விஞ்ஞானி எனும் விருது பெற்ற மிஸ்காத் அவர்களின் மகனாவார்.


மேலும்,ஏனைய மாணவர்கள் 9 பேருடைய கண்டுபிடிப்புக்களும் நடுவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கு மாகாண மட்ட #விசேட #திறமைச் #சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இந்நிகழ்வானது எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்த வரலாற்று நிகழ்வாகும் எனக் கூறின் அது மிகையாகாது.


இதற்காக மாணவர்களை பயிற்றுவிப்பதில் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வசதிகளை ஏற்படுத்தித் தந்த அதிபர் AH.பௌஸ் மற்றும் எமது பாடசாலை ICT பாட ஆசிரியர்கள்,விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள் சாதித்து காட்டிய மாணவச் செல்வங்கள் என யாவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தகவல்-

#பிரதி #அதிபர்

#இணைப்பாட #விதானம்

 


மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக நியு மெக்சிகோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

 


'தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு' (IT outage), கடந்த இரண்டு நாட்களாக


உலகம் முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் ஒரு சிறு தொழில்நுட்ப தவறு கூட நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு வெள்ளிக்கிழமை நடந்தவை ஒரு உதாரணம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான்.


அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. வங்கித் துறை, பங்குச் சந்தை மற்றும் மருத்துவத்துறையும் இதனால் பாதிக்கப்பட்டது.


சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 85 லட்சம் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் விமான சேவைகள், வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஹாங்காங் விமான நிலையத்தின் கணினித் திரையில் தோன்றும் 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்'

கடந்த வெள்ளிக்கிழமை காலை தங்களது கணினிகளை ஆன் செய்த விண்டோஸ் பயனர்கள் பலரும் திரையில் தோன்றிய ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' கண்டு சற்று திகைத்துப்போயினர்.


'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன் பின்னர், ரீஸ்டார்ட் செய்யப்படும்’ என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.


இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஐ.டி துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த விவரங்களை தமிழ்நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.


காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அஜய் பேசுகையில், "வெள்ளிக்கிழமை என்றவுடன் சரி சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டால், இரண்டு நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் கணினியை ஆன் செய்தேன். எங்கள் கணினி திரைகளில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ஏற்படவில்லை, காரணம் நாங்கள் இணைய சர்வர் மூலம் மற்றொரு கணினியில் தான் லாக்-இன் செய்வோம். ஆனால், அவ்வாறு லாக்-இன் செய்வதில் தான் சிக்கல் ஏற்பட்டது. 5 முதல் ஆறு மணி நேரம் வரை எங்களால் பணிபுரிய முடியவில்லை" என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "முதலில் எங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்று நினைத்தோம். பின்னர் செய்தியைப் பார்த்த பிறகு உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புரிந்தது. எங்களது கிளையண்ட் (Client) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் சுகாதார நிறுவனம். 5 மணி நேரம் தாமதமானதால் அதற்கு ஈடாக இரவு வரை பணிபுரிந்தோம்." என்றார்.



படக்குறிப்பு,பாங்காக் விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்

தங்கள் குழுவுக்கு நஷ்டம் என்று பார்க்கும் போது மனித உழைப்பும், நேரமும் தான் என்கிறார் அஜய்.


"ஆனால் வங்கித்துறை, பங்குச் சந்தைகள் போன்றவற்றில் ஒவ்வொரு நொடியும் பணம் சார்ந்தது. எனவே வேலை சரியான நேரத்தில் நடக்கவில்லை என்பதால் அதில் தான் நிதி சார்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டது" என்கிறார்.


"வழக்கமாக வெள்ளிக்கிழமை அதிக வேலை இருக்கும், பரபரவென்று அலுவலகம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அன்று காலை முழுவதும் வேலையில்லாமல் இருந்தது, பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் வரமால் போனால் கிடைக்கும் ஒரு நிம்மதி உணர்வு தோன்றியது. அதேவேளை பொது மக்கள் பலரும் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் அவதிப்பட்டதை செய்திகளில் கண்டபோது வருத்தமாகவும் இருந்தது" என்கிறார் அஜய்.



சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவசங்கர் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் தங்களது நிறுவனத்தின் 20 சதவீத பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.


"காரணம் எங்கள் நிறுவனம் பெரும்பாலும் லினக்ஸ் இயங்குதளத்தை சார்ந்து உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போல பயன்படுத்த எளிதாக இருக்காது" என்று கூறுகிறார்.


சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.


"அந்த ஆண்டி-வைரஸ் மென்பொருள் அடிக்கடி தானாகவே புதுப்பிக்கப்படும். கடைசி அப்டேட் (Update) வியாழன் இரவு வந்தது. வெள்ளிக்கிழமை காலை எல்லா கணினிகளிலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் தோன்றியவுடன் பிரச்னை புரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களது கிளையண்ட் ஒரு பிரபலமான வெளிநாட்டு வங்கி, ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் பல நிதிப் பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்பட்டன." என்று கூறுகிறார் மென்பொறியாளர் மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).


சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மனோஜ், இந்த தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் தங்களது நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் இனி வரும் வாரங்களில் தான் தெரியவரும் என்றும் கூறினார்.


மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் கிரவுட்ஸ்ட்ரைக் ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை செய்த ஐ.டி. நிறுவனங்களில் மட்டுமே பாதிப்பு இருந்ததாக அவர் கூறினார்.



படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக கிரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன.

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக ஒரு நிறுவனத்தில் 1000 மென்பொருள் பொறியாளர்கள் இருந்தால், அவர்களது கணினிகளை பராமரிப்பதற்கான குழு ஒன்று இருக்கும். ஆனால் அதில் 20 முதல் 25 நபர்கள் மட்டுமே இருப்பார்கள். வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கில் கணினிகள் பழுதானதால் அவர்கள் தான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் இது வெள்ளிக்கிழமை ஏற்பட்டது தான்.


பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிறுகளில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் விடுமுறை என்பதால் இதை இந்த இரண்டு நாட்களில் முழுமையாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். நிச்சயமாக இது மிகப்பெரிய எச்சரிக்கை. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் விண்டோஸை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் இது போல மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.


விண்ோஸ் வெளிநாட்டு வங்கிகள்



படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகம்

இதுகுறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, "அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம்.


வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் உடன் மைக்ரோசாப்ட் இயங்கி வருகிறது. இதிலிருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டு செயல்முறையை வழங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் தான் மைக்ரோசாப்ட் மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டது" என மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னர் விளக்கம் அளித்திருந்தது.


வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என்பதையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது.


வாடிக்கையாளர்கள் மீண்டு வர உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஒரு வலைப்பதிவில் "கிரவுட்ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் பயன்படுத்தும் 85 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளது.


நிறுவனத்தின் துணைத் தலைவரான டேவிட் வெஸ்டன், "இந்த எண்ணிக்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் 1% க்கும் குறைவுதான். ஆனால். பரந்த அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் க்ரவுட்ஸ்ட்ரைக் மென்பொருளை பயன்படுத்துவதைப் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.