Showing posts with label Sri lanka. Show all posts




Rep/Naalir

" திண்ணை " தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அக்கரைப்பற்று ஒளிப்படக் கண்காட்சியை பார்வையிடவென இன்று மாலை அங்கு சென்றிருந்தேன்.


மிகவும் நுணுக்கமானதும், கருத்துச் செறிவுள்ளதும், மக்களுக்கும், தமது பெற்றோர்களை வயோதிபர் மடங்களில் கவனிப்பாரற்று தங்கவைக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்பூட்டக் கூடிய வகையிலான ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


மிகவும் பிரயோசனமான கண்காட்சியாக அமைந்திருந்தது.


மேலும் இக்கண்காட்சியானது இன்னும் விரிவுபடுத்தப்படுவதுடன், இது போன்ற நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களும் விசேடமாக கலந்து கொள்ளச் செய்யப்படுவதும் அவசியமாகும்.


இதனை ஏற்பாடு செய்வதில் முழுமூச்சாக தொழிற்பட்ட தோழரும், ஒளிப்படக்கலைஞருமான அப்துல் ஹமீட்,  டாக்டரும், ஒளிப்படக்கலைஞருமான Dr .ஆக்கில் அஹமட், மற்றும் ஏனைய ஒளிப்படக்கலைஞர்களுக்கும் எனதினிய வாழ்த்துக்களும், நன்றிகளும்....

 


எம்.எஸ்.எம்.நூர்தீன்

கத்தான்குடியில் 83 வயதிலும் புனித அல்குர்ஆனுக்காக பணி செய்யும் முஅல்லிமா செய்னப்


காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் சின்ன ஹசரத் என நாம் அழைக்கும் மெளலவி அலியார் பலாஹி அவர்களின் உடன் பிறந்த சகோதரியே முஅல்லிமா சுலைமா லெப்பை செய்னப் அவர்களாகும்.


இப்போது மு அல்லிமா செய்னப் அவர்களுக்கு 83 வயதாகிறது.


1971ம் ஆண்டு புனித அல் குர்ஆனை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.


தற்போது சற்று தளர்ந்து போய் இருந்தாலும் 54 வருடங்களாக புனித அல்குர்ஆனை கற்றுக் கொடுத்து வருகிறார்.


இவரது அல் குர்ஆன் மதரசா காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதியிலுள்ளது.


தற்போது இவரது மதரசா அல் மதரசத்துல் இஸ்லாமியா என அழைக்கப்படுகிறது


இங்கு ஹிப்ழு மணனப் பிரிவு ஆரம்பிக்கட்டு அது சிறப்பாக இயங்கி வருகிறது 


இவருக்கு 5 பெண் பிள்ளைகள் இவர்கள் 5 பேருமே முஅல்லிமாக்களாகும்.


அதில் ஒரு மகள் அல் ஹாபிழா சாகிறாவாகும்.


காத்தான்குடியில் 

முதல் பெண் ஹாபிழா இவரேயாகும். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளி நாடு ஒன்றுக்கு புனித அல் குர்ஆன் ஓதல் போட்டிக்கும் சென்றிருந்தார்.


மேற்படி 5 பெண் பிள்ளைகளும் இப் போது முஅல்லிமாக்களாக இருந்து புனித அல் குர்ஆனை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.


முஅல்லிமா ஹாஜியானி செய்னப் அவர்களிடம் இது வரைக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் புனித அல்குர்ஆனை ஓதி உள்ளார்கள்.


அவர்களில் பலர் பல்துறை சார்ந்தவர்களாக உலமாக்களாக  ஹாபிழ்களாக ஹாபிழாக்களாக உள்ளனர்.


இவரது பேரப்பிள்ளைகள்

ஹாபிழ்களாக. 


M.I.M Ismah( falahi)

M.I.M Israque

M.A.Haleema Zainab Jeyapura university, 3rd rank in District A/L in Bio System technology stream at Balika school

M.A.Ahna


மெளலவி மெளலவியாவாக 

M.I.M Ishaque( falahi)

Moulavi

M.I.M Ismah(falahi)


M.I.Amina


University

M.A.M Ayna

M.Z.H.Zahriya Husaina


M.I. Aamina ( following Moulaviya)


உணவு பாதுகாப்பு அதிகாரியாக

A.A.Azeer Ahmed(M.Sc) -Food Inspector


மருத்துவ பீட மாணவராக

A.A.Ayyash Ahmed MBBS final year)


பொறியாளராக 

M.I.M Isjal

A.A.Atheef Ahmed


பல்கலைக்கழக மாணவியாக

M.A.R. Raheeqa fajr

M.z.H.zahriya Husaina

M.A.M.Ayna


இவ்வாறு இவரது பேரப் பிள்ளைகள் உள்ளனர்


நமதூரில் 83 வயதிலும்  முஅல்லிமா சுலைமா லெப்பை செய்னப் அவர்கள் சிறப்பாக புனித அல்குர்ஆனுக்காக பணி செய்து வருவது மிகப் பெரிய சிறப்பாகும்‌.


சனிக்கிழமை (25)யன்றும் இவரது மதரசாவில் புனித அல் குர்ஆனை மணனம் செய்த 14 பெண் ஹாபிழாக்களாக பட்டம் பெற்றனர்


நமதூரில் எல்லோராலும் கெளரவிக்கப்பட வேண்டிய ஒரு பெண்ணாக இவர் திகழ்கிறார்


அல்லாஹ் அவரது உயர்ந்த பணிகளை பொருந்திக் கொள்வானாக


எம்.எஸ்.எம்.நூர்தீன்

26.01.2025

 


அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு!

- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரச சேவையை வலுப்படுத்துவது மற்றும் அரச சேவைக்கான செலவை நிர்வகிப்பதன் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில், அரச சேவையில் காணப்படும் அத்தியாவசியமான 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இ்ங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப காரணங்களால் நேர்முகப் பரீட்சைகள் தாமதமாகக்கூடிய வெற்றிடங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த அரச சேவை மூலம் மனிதவளத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனச் செலுத்தப்பட்டது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், “City Branding” முறையை பயன்படுத்தி அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் அனுராதபுரத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பதற்கான பெரும் சாத்தியங்கள் காணப்படுவதுடன், இலங்கையின் முதல் இராசதானி மற்றும் முதலாவது குளம் கட்டப்பட்ட இடம் என்ற வகையில் வெளிநாட்டவரைக் கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சமூக மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சமூகத்தை உருவாக்க "Clean Sri lanka" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, கலாநிதி சேன நாணயக்கார, சட்டத்தரணி ஏ.ஏ. ஜீவந்த பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின தாருக சமரகோன், பி.டி.என். பலிஹேன, ரோஹன பண்டார, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, அனுராதபுரம் மாவட்டச் செயலாளர் கே. ஜி. ஆர். விமலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-01-26


மட்டக்களப்பு, வாழைச்சேனை புலிபாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


வி.சுகிர்தகுமார்  


 அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் அரசியலுக்காக உருவாக்கப்பட்டதல்ல. உத்தியோகத்தர்களின் நலன்களை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. நாட்டினை யார் ஆட்சி செய்தாலும் அவர்களும் பேசி உத்தியோகத்தர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும என சங்கத்தின் தேசிய தலைவர் கித்சிறி கமகே தெரிவித்தார்.
சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் அசுவெசும வேலைத்திட்டம் தொடர்பில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களை தெளிவூட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் அம்பாரை மாவட்ட  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.எச்.வஹாப் தலைமையில் நேற்று மாலை (25)இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய சங்கத்தின் பொருளாளர் அன்வர் மற்றும் பிரதிச் செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த காலத்தில் செயற்பட்ட சங்கத்தின் செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தாது அரசியல் நோக்கத்தினை மையமாக கொண்டே செயற்பட்டார். அது சங்கத்தின் செயற்பாடுகளை பாதித்துள்ளதோடு சங்கத்தின் அங்கத்தவர்களின் நலன் தொடர்பிலும் பாதிப்பினை உருவாக்கியது.
அகவே நாட்டினை யார் ஆட்சி செய்தாலும் அவர்களும் பேசி உத்தியோகத்தர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். அதற்காகவே சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் தனிநபர் நலன் தொடர்பில் அக்கறை செலுத்த முடியாது.
எனவே சங்கத்தினை புனரமைப்பு செய்து சிறந்த முறையில் செயற்படவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேநேரம் உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டது.
சங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கில் இருந்து பெரும் ஆதரவு தேசிய சங்கத்திற்கு கிடைக்கும் எனவும் அதில் அம்பாரை மாவட்டமும் இணைந்து கொள்ளும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

 



நூருல் ஹுதா உமர்


புதிய அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்முனைக் கல்வி வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் வைபவ ரீதியான நிகழ்வு பாடசாலையின் முதல்வர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் (24) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ .ஜாபீர் மற்றும் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல்.றியால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 



ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 


இலங்கை காவல்துறை சந்தேக நபர்களை வித்தியாசமாக நடத்துவது போல் தெரிகிறது. சிலர் சாலையில் பிடுங்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு கம்பிகளுக்குப் பின்னால் வீசப்படுகிறார்கள், மற்றவர்களுக்கு ஆடம்பர சிகிச்சை அளிக்கப்படுகிறது

 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் –




 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெற்றது.

கல்முனை  ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து   காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
ஆரம்ப வைபவம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா கலந்து சிறப்பித்தார்கள்.

  கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினரும் கலந்து ஒத்துழைத்தனர்.

125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் பல நிகழ்வுகள் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.


''புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது, அந்த கையடக்கத் தொலைபேசி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாததாக இருந்தால், அந்த தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று கிடைக்கப் பெறும்."


''இந்த குறுந்தகவல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அதனால், கையடக்கத் தொலைபேசிகள் சட்டரீதியானதாகக் காணப்படுகின்றமையானது, பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்" என அவர் கூறுகிறார்.



இலங்கை,  செல்போனுக்கு புதிய கட்டுப்பாடு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பரிசாக கிடைக்கும் செல்போன்களை என்ன செய்வது?

நாட்டிலுள்ள நபர் ஒருவருக்கு பரிசாக அல்லது வெளிநாட்டிலிருந்து மீண்டும் வருகை தரும் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்தல் அத்தியாவசியமானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கின்றார்.


''இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்குப் பரிசு வழங்குவதற்கு அல்லது தமது பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகளை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் இருக்குமானால் அந்த கையடக்கத் தொலைபேசியை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்துகொள்ள முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்த்தகர்கள் தமது வர்த்தக அபிலாஷைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



இலங்கை,  செல்போனுக்கு புதிய கட்டுப்பாடு

படக்குறிப்பு,நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன என்கிறார் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்

இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தமது தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளைப் பதிவு செய்ய வேண்டுமா என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் வினவினோம்.


''இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்."


''அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சிம் அட்டையானது, வெளிநாட்டு பிரஜை நாட்டைவிட்டு வெளியேறும்போது பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வெளிநாட்டு பிரஜை தனது தொலைபேசியை இலங்கையிலுள்ள ஒருவருக்கு பரிசாக வழங்குவாராக இருந்தால், அவர் புதிய சிம் அட்டையை உட்செலுத்த வேண்டும். அப்போது அந்த தொலைபேசிக்கு பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி என்ற குறுந்தகவல் கிடைக்கும். தொலைபேசியை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படும்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.



இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்களை விடவும், பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்கள் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்து வருவதை சந்தையில் காண முடிகின்றது.


இந்த நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரும்போது முன்னெடுக்கப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் காரணமாக, மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இல்லாது போகுமா என அவரிடம் வினவினோம்.


''குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இந்தப் புதிய நடைமுறையின் ஊடாக இல்லாது போகின்றது எனச் சிலரால் கூற முடியும். எனினும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்து இன்றும் அதிக விலையில் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன."



''எனினும், நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் பதிவு செய்து, பயன்பாட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாங்கள் முயல்கின்றோம்.'


''ஒரே ரகமான கையடக்கத் தொலைபேசிகள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை நாங்கள் காண்கின்றோம். குளிரூட்டப்பட்ட விற்பனை நிலைகளிலும், சாதாரண விற்பனை நிலையங்களிலும் இரண்டு விதமான விலைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்படும். விற்பனையாளர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற போட்டித் தன்மை காரணமாக, பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்."


''பாரியளவிலான கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் அதிகளவான லாபம் ஈட்டுகின்றன. பாரியளவிலான தொலைபேசிகளை இறக்குமதி செய்யும்போது கிடைக்கின்ற சலுகைகளின் பிரகாரம் அதிக லாபத்தைப் பெறுகின்றனர். எனினும், அந்தச் சலுகை பொது மக்களுக்கு கிடைப்பதில்லை" என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கிறார்.

 முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

  





பாறுக் ஷிஹான்


நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு   இடமாற்றம்  வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு கோரி இன்று மதியம் பொதுமக்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை வேண்டும் என எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்று   சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் முஹமட் இஸ்மாயில் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது எனவும் இவ்விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அஷ்ரப் தாஹிர் எம்பி  சுகாதார அமைச்சரை பாராளுமன்றத்தில் வைத்து  கேட்டுக் கொண்டார்.

மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சம்பந்தமான காணொளி ஒன்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக தாதியர் உத்தியோகத்தர் உமர் அலி தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெறுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கும்இ  நோயாளர்கள் பராமரிப்பில் கவனயீனமாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டி காட்டியதற்கும் டாக்டர்மார் நேரத்துக்கு கடமைக்கு வரவில்லை வராமல் மேலதிகநேர கொடுப்பனவுகளை எடுக்கின்றார்கள்
கடமைக்கு வராமல் பொது விடுமுறைகளில் ஓய்வு நாட்களில் வேலை செய்ததாக பொய்யாக ஆவணங்கள் பூர்த்தி செய்து அதனை வைத்திய அத்தியட்ச்சகர் உறுதிப்படுத்தி அதன் பின்னர் அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நான் கூறியதற்கு கிடைத்த பரிசு என  பாலமுனை வைத்தியசாலைக்கு  தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி தனது முகப்புத்தகத்தில் தெளிவு படுத்தி கூறியுள்ளார்.

 




அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (24) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

இந்த மனு மீதான விசாரணை, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.

மனுதாரரின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் இன்று முடிவடைந்த நிலையில், மேலதிக விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினம் மனுக்கள் தொடர்பான வாதங்களை சட்டமா அதிபரும் முன்வைக்க உள்ளார்.

இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்து புதிய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், அவை நிறைவேற்றப்பட வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 


மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

2016 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் கலப்பு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கூறினார்.

அதனை நடைமுறைப்படுத்துவற்கு எல்லை நிர்ணயம் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற போதிலும் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை கடந்த கால முறைமையிலேயே மீண்டும் நடாத்துவது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமையவே பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.

இதற்கமைய விரைவில் அமைச்சரவையில் மகஜர் சமர்ப்பிக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர்  தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் கூறினார். 

 


இவருடைய பெயர் அப்த்துல் கபூர் இவர் akkaraipattu தை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் இருந்தார் இவருக்கு இப்பொழுது நியாபக மறதி இவர் யார் இன்று இவருக்கே நியாபகம் இல்லை இவர் இப்போது காணாமல் போய் விட்டார் இவரை கண்டவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள் அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன் 0764699347

0771223396
0754918325
May be an image of 1 person
All reactions:
காதர் அக்கரைப்பற்று and 18 others

 

Rep/Saajahaan.

சற்று முன்னர் சேருவில - தங்கநகரின் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் காத்தாங்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் மோதி விபத்து

.



சுகிர்தகுமார் 


 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில் 9 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலய மட்டத்தில் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன் 173 புள்ளியினை பெற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயம் மாணவி; இரண்டாம் நிலையினையும் 171 புள்ளிகளை பெற்று தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலை மாணவர்கள் இருவர் மூன்றாம் நிலையினை பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு கோட்டத்தில் அன்னை சாரதா வித்தியாலயத்தில் 18 மாணவர்களும் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 17 மாணவர்களும் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதுடன்  திருக்கோவில் கல்வி வலயத்தில் குமர வித்தியாலயத்தில் 15 மாணவர்களும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 12 மாணவர்களும் சித்தியடைந்து வலயத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ள பாடசாலைகள் எனும் பெருமையினை பெற்றுள்ளது.
இந்நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் கடந்த வருடம் 126 மாணவர்கள் சித்திடைந்த நிலையில் இம்முறை 155 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் ஆலையடிவேம்பு கோட்டத்தில் தொடர்ந்தும் அதிக மாணவர்களை சித்தியடைச் செய்யும் பாடசாலையாக இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்த பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான கி.கமலமோகனதாசன் கடந்த வருடம் சற்று வீழ்ச்சி அடைந்த அன்னை சாரதா கலவன் பாடசாலை இம்முறை வளர்ச்சி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என கூறினார்.



 தொடர்ந்தும் அதிக மாணவர்களை சித்தியடைச் செய்யும் பாடசாலையாக இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்த பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான கி.கமலமோகனதாசன் கடந்த வருடம் சற்று வீழ்ச்சி அடைந்த அன்னை சாரதா கலவன் பாடசாலை இம்முறை வளர்ச்சி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என கூறினார்.

 
புலமைப் பரிசில் பரீட்சையில் 2023 ம் வருடம் திருக்கோயில் வலயம் 88.53 சித்தி வீதத்தினைப் பெற்று தேசிய ரீதியில் தமிழ்மொழி வலயங்களில் முதலாம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தின் சிங்கள மற்றும் தமிழ்மொழி வலயங்களிடையே 3 வது இடத்தினையும் பெற்றிருந்து சாதனை படைத்திருந்தது.
2024ம் வருடத்தில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சித்தி வீதம் 88.66 ஆக உள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 0.14 வீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சில பாடசாலைகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயம் இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை !

நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம் இம்முறை 2024 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்த பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மொத்தம் 57 மாணவர்களில் பத்து மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 85.8 என்ற சராசரி அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள இந்த பாடசாலையின் அடைவுக்கு அதிபர், ஆசிரியர்களின் அயராத உழைப்பே காரணம் என பெற்றோர்கள் நன்றி பாராட்டுகிறார்கள்.
சுனாமிக்கு பின்னர் கரையோர பிரதேச மாணவர்களின் கல்வி நன்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடசாலை போதியளவு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இயங்கி வருவதுடன் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

கல்விசார் மற்றும் கல்விசாரா போட்டிகளில் கூட மிளிரும் இந்த பாடசாலையின் மேம்பாட்டில் முதன்மை வகிக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன், பிரதியதிபர், உதவியதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், சாதனை மாணவர்கள் எல்லோருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 


வி.சுகிர்தகுமார்     


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை குறைப்பதற்கான நடவடிக்கையினை ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருக்கும் கடந்த காலத்தில் மூடப்பட்ட நீர்வடிந்தோடும் மதகினை மீளவும் பயன்படுத்தும் நடவடிக்கையினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் முன்னெடுத்தார்.
இதன் பிரகாரம்  வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை  உயர் அதிகாரிகளுடன் பேசி அவர்களது ஒத்துழைப்போடு பிரதான வீதியின் குறுக்காக போடப்பட்டிருந்த மதகினை மீளவும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம் இன்று வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் பிரதான வீதியின் குறுக்காக மூடப்பட்டிருந்த மதகினை பயன்படுத்துவது தொடர்பில் சாத்தியவள அறிக்கையினை மேற்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
குறித்த மதகினை சீரமைக்கப்படும் பட்சத்தில் பிரதேச செயலகத்தை அண்டியப பல்வேறு பிரதேசங்களில் தேங்கி நிற்கும் நீர் வெளியேற்ற வாய்ப்பு உருவாவதுடன் மழை காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் நிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.