Showing posts with label North Central. Show all posts

 


அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதம் ஓமந்தைக்கும் புளியங்குளத்துக்கும் இடையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வாகனத்தை மோதித்தள்ளியது.


இருவர் படுகாயம். ZZ


 ஏ.எம்.நெளபர்,ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்-அமீன்,கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மிர்,ஓட்டமாவடி  பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸத்தீன்,வாழைச்சேனை,கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளான லசந்த பண்டார, சந்திரகுமார மற்றும் ஓட்டமாவடி  வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜி உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


கல்னை,கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளான லசந்த பண்டார, சந்திரகுமார மற்றும் ஓட்டமாவடி  வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜி உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இவ் வேலை திட்டத்தின் மூலம் பல்லின மாணவ சமூகத்தை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதன்  ஊடாக   நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவித்தல் நாட்டின் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும்  நோக்கி பயணிக்க முடியும் என ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர்  எம்.ரீ.எம். பாரிஸ் குறிப்பிட்டார். 

இந்த அடிப்படையிலேயயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த 
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் சொந்த நிதியின் மூலம் இம் மாணவர்களுக்கான மாதாந்த உதவித் தொகைகள் அவர்களின் கற்றல் காலம் முடியும் வரை வழங்கி வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்தும் அவர் இவ்வாறான மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 மனம்பிட்டி விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 2 #கிழக்கு #பல்கலைக்கழக #மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் 


பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி  ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து தொடர்பில் பஸ் மீட்கப்பட்ட பின்னரும் இன்று  காலையும் கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணியை முன்னெடுத்துள்ளனர். 

  

இந்த விபத்தில்  இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக  தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உள்ளடங்கின்றனர்


 உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும், 


மற்றைய சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


(ஏறாவூர் 2 ஒலிவில் 1 )


மேலும், குறித்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.


  சாரதியின் பாதுகாப்பற்ற வாகனம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பற்ற பாலமாக இருந்த இந்த பாலத்தில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட வயல் நிலங்களுக்கு தீர்வாக மாற்றீடான வயல் நிலங்களை மக்களுக்கு வழங்கல்.பொலனறுவை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங் நெல்சன் அவர்கள் பாராளுமன்ற உயரிய சபையில் தெரிவிப்பு. நான் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவன் என்ற வகையில் இந்த விடயத்தினை இந்த உயரிய சபையில் தெரிவுபடுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்.  

1980 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  காலத்தில் இருந்தே பரம்பரை பரம்பரையாக  வயல் நிலங்களை விவசாயம் செய்து வயல்களை விவசாயம் செய்தவர்களாக இந்த பரம்பரை மக்கள் காணப்பட்டனர். ஆகவே, அவர்களுடைய அந்த காணியில் விவசாயம் மாத்திரம் செய்பவர்களாக காணப்பட்டதோடு வீடுகளோ வேறு எந்தவிதமான கட்டிடங்களோ அமைத்தவர்களாக அவர்கள் அல்ல, எனவே இந்த மன்றில் அவர்களுக்கு உரிய விவசாய காணிகளுக்கு  அதாவது, வன இலாக உத்தியோகத்தரினால் கைப்பற்றப்பட்ட காணிகளுக்கு பதிலாக வேறு விவசாய நிலங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 


  உரிய அமைச்சரானவர் பாராளுமன்றத்தில் அதற்கான பதிலை குறிப்பிட்டு இருக்கின்றார். அதாவது, கிங் நெல்சன் அவர்கள் கூறிய கூற்றை ஏற்று மகாவலி அமைச்சருடன் தொடர்பு கொண்டு வயல் நிலப் பிரச்சனை தீர்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்து உள்ளார்.


    மேலும், அவர் உயரிய சபையில் பொலனறுவை மாவட்ட பால் பண்ணையாளர்கள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் தொடர்பாகவும் அந்த துன்பத்தின் விளைவாக அவர்கள் செய்த ஆர்பாட்டம் தொடர்பாக  மிக தெளிவாக அந்த உயரிய சபையில் விளங்கப்படுத்தி தீர்வை பெற்று தருமாறும் குறிப்பிட்டார்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று மதியம் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் நேற்றைய தினம் கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடம், மேலாண்மை பீடம், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மேலும் சில மாணவர்கள் மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மின்னேரியவில் அதிகாலை அகோரம் -இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி – பலர் படுகாயமடைந்துள்னர்.கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இலங்கை அரச போக்குவரத்துச் சபையின சாரதி உயிரிழந்துள்ளார்.

கல்வித் துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (09) முற்பகல் இடம்பெற்ற வடமத்திய மாகாண பட்டதாரி ஆசியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அறிவு மற்றும் மாறிவரும் உலகிற்கேற்ற ஆக்கத்திறன்களை கொண்டவர்களாக எதிர்கால தலைமுறையை உருவாக்குவதைப் போன்று நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் ஆன்மீக துறையையும் வளர்த்து, சிறந்ததோர் தலைமுறையை கட்டியெழுப்புவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 428 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள், 100 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள், 11 ஆங்கில மொழி மூலமான ஆசிரியர்கள் உள்ளிட்ட 539 பேர்களுக்கு இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

#lka #SriLanka #Medawachchiya
யாழ் -கொழும்பு சொகுசு பஸ், ரிப்பருடன் மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் மோதியது. விபத்தில் மூவர் உயிரிழப்பு 5 பேர் காயம்.

அனுராதபுரம், கெக்கிராவ – திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வீதியில் மூன்று சிறுவர்களை மோதிக் கொன்றுவிட்டு வாகனமொன்று தப்பியோடியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வீதியில் இறங்கி ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ – 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையடுத்து அங்கு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் இடம்பெற்றது. 

காலை 6.00 மணிக்கு பால்சோறு வழிபாடு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பிரித் பாராயணமும் நடைபெற்றது. 

அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம ஸ்ரீனிவாச தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றுவன்வெலி ஷாய பிரதான தேரர் கலாநிதி சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்னவும் வழிபாடுகளை நடத்தினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் புத்தரிசி வழிபாடுகளில் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.ஹரிசன் முதலாவதாக புத்தரிசி வழிபாட்டை மேற்கொண்டார். 

அரச தகவல் திணைக்களம்

நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாத்திரம் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பேதமின்றி வளங்களை பெற்றுக்கொடுத்து அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குவதற்காகவே ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை ஹதரஎல சீவலி முன்மாதிரி கனிஷ்ட பாடசாலையின் 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (29) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

பாடசாலையின் ஆசிரியர் விடுதியையும் கலையரங்கத்தையும் இதன்போது ஜனாதிபதி திறந்து வைத்தார். 

இன்று முற்பகல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார் 

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதேநேரம் ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை கதுருவெல நகர மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 03 மாடி வகுப்பறை கட்டிடத்தையும் இன்று ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார். 

பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். 

மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் நூலகங்களுக்கான நூல்களை வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டு உறுதி பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றன. 

அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை தோப்பாவெவ மகா வித்தியாலயத்தின் 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த 03 மாடி வகுப்பறை கட்டிடம் பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார். மேலும் அப்பாடசாலையின் மாணவர்களின் திறமைகளையும் ஜனாதிபதி அவர்கள் கண்டு கழித்ததுடன், அவர்களுடன் இணைந்து பாடலொன்றையும் பாடினார். 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தோப்பாவெவ மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்ற வகையில் தனது கடந்த கால அனுபவங்கள் சிலவற்றையும் அம்மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். சிறந்த சமூகம் ஒன்றையும் சிறந்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு தண்டனைகள் அவசியம் என்பதாலேயே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு தான் தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

( அப்துல்சலாம் யாசீம்)

அனுராதபுரம்-ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (02) சுத்தமான குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

"காரணம் அறியப்படாத நீண்ட கால சிறுநீரக நோய் பரவலை மட்டுப்படுத்தல் திட்டம்" திட்டத்தின்கீழ் இன்றைய தினம் ஹொரவ்பொத்தான - கடவத் றத்மலை கிராமத்தில் முதன் முதலாக 2266040/= ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தினை திறந்து வைத்தார்.

இதேவேளை இன்றைய தினம் பத்தாவ, கிவுளக்கட, மதவாச்சி, கஹடகஸ்திகிலிய மற்றும் நாச்சியாதீவு போன்ற பகுதிகளில் இக் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஐக்கிய தேசிய கட்சி ஹொரவ்பொத்தான தொகுதி அமைப்பாளருமான பீ. சஹீது, அரசியல் தலைவர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். 

தீயினால் உயிராபத்து ஏற்படவில்லை என்ற போதிலும், கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள 07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்



அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று (27) காலை அனுராதபுரத்தில் இருந்து மதவச்சி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தொடர்பில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக்கொண்ட பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (18) நிறைவேற்றி வைத்தார். 

உயர்தரப் பரீட்சையின் பின்னர் அரங்கேற்ற கலைகள் பீடத்திற்கு சென்று அத்துறையில் முன்னேறுவது மாணவி பிரபோதி லஹிருனியின் கனவாகும். இதற்காக இசைத் துறையை தெரிவு செய்த லஹிருனி தனது முக்கிய வாத்தியக் கருவியாக கிட்டாரை தெரிவுசெய்தார். 

பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம்மாணவியின் பெற்றோர் அவருக்கு இந்த இசைக் கருவியை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லாத காரணத்தினால் இம்மாணவி மிகவும் அநாதரவான நிலையில் இருந்தார். 

இவரைப்போன்றதொரு மாணவரான ஷாலிக லக்ஷான் என்ற மாணவனின் புதிய வீட்டுக் கனவை நிறைவேற்றி வைப்பதற்காக கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி ஜனாதிபதி பொலன்னறுவை கனங்கொல்ல என்ற பிரதேசத்திற்கு சென்றிருந்தார். 

அச்சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் மீது பாசங்கொண்ட தந்தையாக ஜனாதிபதி தனது கோரிக்கையையும் நிறைவேற்றித் தருவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் மாணவி பிரபோதி லஹிருனி ஜனாதிபதியின் அருகில் சென்றார். 

உண்மையான தந்தைக்குரிய பாசத்துடன் அம்மாணவியின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அம்மாணவியிடம் உறுதியளித்தார். 

ஒரு சில நாட்களில் அம்மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததுடன், இன்று முற்பகல் தனது பெற்றோருடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பிரபோதி லஹிருனி தனது கிட்டாரை ஜனாதிபதி இடமிருந்து பெற்றுக்கொண்டார். 

(ஐனாதிபதி ஊடக பிரிவு)

கெகிராவ - தம்புள்ள பிரதான வீதியின் மடாடுகம பகுதியில் வேன் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மெலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார தெரிவிக்கின்றனர். 

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேகம்பஹ பகுதியை சேர்ந்த ஆப்தீன் இஷாக் தீன் எனும் 58 வயதுடைய ஒருவரும் நூர்தீன் சமீரா உம்மா என்று 46 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

கெகிராவ பகுதியில் இருந்து தம்புள்ள திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் தம்புள்ளயில் இருந்து கெகிராவ திசையில் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் இரு குழந்தைகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலத்தை அந்நாட்டிலேயே அடக்கம் செய்யுமாறு தெரிவிப்பதற்காக தூதரகத்திற்கு சென்று திரும்பி வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரியா – 07 மைல் கல் பிரதேச வீதி தாழிறங்கியுள்ளது.
நேற்று (22) இரவு பெய்த கடும் மழையால் குறித்த வீதி தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் போக்குவரத்து தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தன

பொலன்னறுவை மாவட்டத்தின் தம்பாளை மற்றும்  ஓணாகம கிராமங்களுக்கு அருகிலுள்ள சின்னவில் மற்றும் வேரோடை  வயல் நிலங்களை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர், இன்று (21) நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த நிலங்களை, வன பரிபாலன திணைக்களத்தினர் உரிமை கோரியுள்ள நிலையிலேயே, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அப்பிரதேசத்துக்குச் சென்று அந்த நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களில் சிலருடன் கலந்துரையாடினர். 

கலேவல பிரதேசத்தில் மாத்திரையை உட்கொள்ளும் போது தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

நேற்று இரவு சிறுவனின் தொண்டையில் மாத்திரை ஒன்று சிக்கியுள்ளதால் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளான். 

கலேவல ஜயதிலக மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.



பொலன்னறுவை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப தொல்பொருள் நிலைய நிர்மாணப் பணிகளை நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

150 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்படும் முழு அளவிலான தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் இதுவாகும்.

வரலாற்று காலம் முதல் தற்காலம் வரையிலான பாரம்பரிய தொழில்நுட்ப முறைமைகள், மன்னர்கள் ஆட்சி காலத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் அமைந்துள்ளது. இது நவீன கேட்போர்கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப கண்காட்சி கூடங்களையும் கொண்டுள்ளது.

எமது கடந்த கால பாரம்பரியங்கள் மற்றும் மரபுரிமைகள் பற்றி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் விளக்கங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்ப நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தொழில்நுட்ப கூடத்தின் பௌதீக நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், தொல்பொருட்களை காட்சிக்காக வைக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அனைத்து நிர்மாணப் பணிகளையும் துரித கதியில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனை தொடர்ந்து அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறித்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

தேசிய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சனுஜா கஸ்தூரி ஆரச்சி, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன, மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் தலைவர் டி.பி.ஏ. பியதிலக்க ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேநேரம் “எழுச்சிபெரும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவரும் பொலன்னறுவை புதிய பஸ் தரிப்பிடத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்த ஜனாதிபதி, அனைத்து நிர்மாணப் பணிகளையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பொலன்னறுவை 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்றார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கு சீன அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

மகாவலி, சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகத்தின் மன்னம்பிட்டிய தொழில்நுட்ப சேவைகள் நிறுவனத்தின் மணல் வழங்கும் முறைமையில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததை தொடர்ந்து அப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக நிறுவனத்தின் ஊழியர்களும் மணல் ஏற்றும் டிப்பர் வண்டி உரிமையாளர்களும் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து மணல் ஏற்றும் டிப்பர் வண்டி உரிமையாளர்கள், ஜனாதிபதி பயணம் செய்த பாதையின் இருபுறத்திலும் ஒன்றுகூடி இருந்தனர்.

பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றிய வேளையில் இவர்களை கண்ட ஜனாதிபதி, அவர்களிடம் சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.