2023 நடைபெற்ற அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும்
அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா கிழக்கு மாகாண மட்டபோட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலமாக இவர் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் சித்திர பாட வளவாளராக சேவையாற்றும் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.முனாவ்வின் புத்திரி ஆவார்.
இன்றிலிருந்து உடனடியாக செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் படி காத்தான்குடி கோட்டத்தின் புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளராக சகோதரர் A.G.M.ஹக்கீம்(SLEAS) Sir இன்று(21) தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் மிக நீண்ட நாட்களின் பின் SLEAS தகைமையுடைய நபருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையின் படி நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் "அஸ்ரப்" தின நிகழ்வு
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இருபத்தியாறாவது வருட நிறைவினைக் குறிக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (25) செவ்வாய்க் கிழமை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வருடாந்தம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நினைவுகூரும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். தொடக்க நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை மற்றும் ஒலுவில் வளாகங்களில் இடம்பெற்ற மர நடுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உத்தியோகபூர்வ நிகழ்வுகள் யாவும் பல்கலைக்கழகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. நிகழ்வின் வரவேற்புரையினை ஆங்கில மொழி விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மேற்கொண்டார். நிகழ்வின் பிரதான உரையாகிய “கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப் பேருரையினை” தென்கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறை தலைவரும் பேராசியருமான எம்.பீ.எம். இஸ்மாயில் நிகழ்த்தினார். நிகழ்வின் பிரதம அதிதி உரையினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் நிகழ்த்தியதுடன் வருடத்தின் சிறந்த ஆய்வாளர்களுக்கான உபவேந்தர் விருதுகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களுக்கான விருதுகளும் உபவேந்தரினால் வழங்கிவைக்கப்பட்டது.
உபவேந்தர் தனது உரையில் இப்பிராந்தியத்தின் நீண்டகாலத் தேவையாக உள்ள மருத்துவ பீடம் அமைப்பது பற்றிக் குறிப்பிட்டதுடன் குறித்த பீடத்தினை ஒலுவில் வளாகத்தில் அமைப்பதற்கான திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பட்டதாரி மாணவர்களுக்கு சிறந்த தொழிற் தகைமையினை உருவாக்கும் நோக்கில் கணிணிப் பீடம் ஒன்றினை நிறுவுவதற்கும் பட்டப் பின்படிப்புக் கற்கையினை வினைத்திறனாகக் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக பட்டப்பின்படிப்புக் கற்கைகள் பீடம் ஒன்றினைத் தாபிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.
முன்னெப்போதும் இல்லாதளவிற்கு கடந்த ஒரு வருட காலத்தினுள் பல்கலைக்கழகத்தினை சமூகத்துடன் ஒன்றிணைப்பதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெற்றி கண்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள விவசாய, பீன்படி சமூகங்களுடன் இணைந்த பல திட்டங்களை பல்கலைக்கழகம் முன்னெடுத்துவருகின்றது. கல்வி மற்றும் ஆய்வுப் பரப்பில் இப்பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதுடன் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல பயனுள்ள கல்வி மற்றும் ஆய்வுசார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தகுந்த திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக தென்கிழக்குப் பிராந்திய நூலக மற்றும் தவகவல் வலையமைப்பு (SERLIN) தொலைநோக்கும் திட்டமும் உபவேந்தரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண உரையினை பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாயுத்தீன் ஆற்றினார். நிகழ்வின் இறுதி அம்சமாக பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார் அவர்கள் வழங்கிய நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பதில் நிதியாளர், பிரதிப் பதிவாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பதிவாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நிதியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்களின் பிரதானிகள், பிரதேச கல்வியலாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய அம்சம் சில பயனர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் -- ஸ்பேம் ப்ரோடெக்ஷன் -- எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.
தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது.
இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.
அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.
புத்தாண்டு ஒவ்வொருமுறை பிறக்கும்போதும் புதுப்புது உறுதிமொழிகளை எடுப்பதும், அவற்றை அடுத்த சில நாள்களிலேயே காற்றில் பறக்கவிட்டுவிடுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த வேடிக்கைக்கு நடுவே, `இந்தப் புத்தாண்டில் நான் எந்த உறுதிமொழியும் எடுக்கப்போவதில்லை' என்று பலர் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.
உணவு வகைகள்
நம்முடைய உடல் அமைப்பைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று. நமது உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் ஒரு உணவால் கிடைப்பதல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் பல்வேறு மகத்துவங்கள் உள்ளன. எனவே, பல்வேறு உணவு வகைகளைக் கலந்து உண்ண வேண்டும். பால், கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகளான இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைத் தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று நாளாவது சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எந்த உணவையும் வறுத்துச் சாப்பிடாமல் வேகவைத்துச் சாப்பிடலாம். இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பண்டங்களைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் பழங்களை நொறுக்குத்தீனிகளாகச் சாப்பிடலாம்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 4661 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மலையகத்திலும் 03.12.2018 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இலங்கை நிர்வாக சேவை (SLAS) ஆட்சேர்ப்பிற்காக 2015 (2016) நடைபெற்ற போட்டிப்பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 220 பரீட்சார்த்திகள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 175 வெற்றிடங்கள் நிரப்பப்படும். அவர்களின் தமிழ் மொழி மூலம் தோற்றி தெரிவு செய்யப்பட்டோர் 69 பேர்.
அவர்களின் விபரம் 1) Abarna, S 2) Ala Ahamed, M.S. 3) Annet Ninthusha, E. 4) Aravinth, S. 5) Archchana, P. 6) Arunya, S. 7) Aslam, U.M. 8) Azeem, A.S.M. 9) Biranavan, N. 10) Dharshnee, K. 11) Ehanthan, G. 12) Fathima Hanassa, M.S. 13) Hensman, T. 14) Inthisha, K. 15) Jepamayooran, M. 16) Jezan, T. 17) Kekitha, S. 18) Kemasinthuja, K. 19) Kenijude, F. 20) Kiruthika, G. 21) Kowsigan, S 22) Krithika, M. 23) Kumanan, U 24) Kunalini, B. 25) Kuruparan, P 26) Luxiga, K. 27) Marinkumar, A. 28) Menaga, S. 29) Mohamed Safrin, M.S 30) Mohammed Fazal, A.G. 31) Muwahfika, M.I 32) Nafla, M.Y.F. 33) Niroshini, B. 34) Nishan, S. 35) Niththiya, K 36) Parthipan, M. 37) Phama, R. 38) Piranavarupan, P. 39) Prashanthan, R. 40) Rameshraja, K 41) Rangasamy, L. 42) Rashid, Y. 43) Reminton, J. 44) Revathy, N. 45) Rushdha, K. 46) Saleem, K.K.M. 47) Sanjeepan, N. 48) Sathesh, T. 49) Sathiyabbriya, K. 50) Shabarja, K. 51) Sharmilan, K. 52) Sharmy, S. 53) Shifka, S. 54) Sinthuja, S. 55) Srirajeevan, T. 56) Subakar, R. 57) Suganya, S. 58) Suntharalingam, T. 59) Tharani, G. 60) Tharani, T. 61) Theivanayaki, P. 62) Thevakumari, V. 63) Thiviya, M. 64) Thulanchanan, V. 65) Thusja, S. 66) Vanojini, S. 67) Vijayaruban, K. 68) Vishevitha, Y. 69) Zabrin, M.R.M.
தேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் 302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சுஎதிர்பார்க்கின்றது.
இதற்கான நேர்முகப்பரீட்சை நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்வதுடன் 08 வருடங்களுக்கு மேல் ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தேசிய பாடசாலைகளுக்காக தெரிவு செய்யப்படும் அதிபர்களை அடுத்த வருடம் முதல் அதிபர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெற உள்ளார். இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரியசாத் டெப் நீதித் துறையில் சுமார் 40 ஆண்டுகால சேவையாற்றியுள்ளார்.
1978ம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியில் இணைந்த பிரியசாத் டெப் 1996ம் ஆண்டு அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக நியமனம் பெற்று 2007ம் ஆண்டு அரச சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர் 2017ம் ஆண்டு பிரதம நீதியரசராக நியமனம் பெற்றார்.
குளிர் பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களான பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள்தான் அதிகளவில் பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதாக அரசு சாரா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உலகளவில் குளிர்பானங்கள் விற்பனையில் பெப்சி, கோக், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தப் புகழ்பெற்ற நிறுவனங்கள்தான் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதாக கிரீன் பீஸ் (Greenpeace) என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்யும் நோக்கத்துடன் அந்த அமைப்பு உலகம் முழுவதும் 42 நாடுகளில் 239 குழுக்களை அமைத்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டது. இதன் முடிவில் மொத்தமாக 1,87,000 பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் கோக் நிறுவனத்தின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகமாக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
தூய்மைப் பணிகள் நடைபெற்ற 42 நாடுகளில் 40 இடங்களில் கோக் நிறுவனத்தின் பிளாஸ்டிக் பொருள்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ``இந்த நிறுவனம் உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது” என பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வோன் ஹெர்னான்டெஸ் (Von Hernandez) தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொதுவாக பாலிஸ்டைரின் (polystyrene) என்ற பிளாஸ்டிக் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பேக்கேஜிங், காபி கப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
``கிரீன் பீஸ்ஸுடன் இணைந்து நாங்களும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவோம்” என கோக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பட்டியலையும் கிரீன் பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் வரிசைகளின் முறையே கோக், பெப்சி, நெஸ்ட்லே, டனோனே, மோண்டலேஸ் இண்டர்நேஷனல், ப்ரோக்டர் அண்டு கேம்பிள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் தேசத் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று.
இந்தியர்கள் அனைவரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர். தேசத் தந்தை, மகாத்மா, அஹிம்சா மூர்த்தி என பல்வேறு அடைமொழிகளால் அன்புடன் அழைக்கப்படும் அவர், வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தார்.
இன்றும் அவரது உற்றார் உறவினர்கள், அவர்களது சந்ததியினர் அங்கு வசிக்கின்றனர். தான் பிறந்த நாட்டில் மக்களால் தேசத்தந்தையாக காந்தி மதிக்கப்படுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்த நாடு தென்னாப்பிரிக்கா.
காந்தியின் ஐந்தாம் தலைமுறை விழுதுகள் தென்னாப்பிரிக்காவில் வேரூன்றிவிட்டனர். அவர்கள் தங்கள் எள்ளுத் தாத்தாவைப் பற்றியும் அவரது அஹிம்சை, சிந்தனைகள் பற்றியும் என்ன நினைக்கின்றனர்?
பிபிசி யின் சிறப்பு நேர்காணல் தென்னாப்பிரிக்காவில் இருந்து...
டர்பன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற பெரிய நகரங்களில் காந்தியை யாரும் மறப்பது எளிதல்ல. இங்கே ஒரு சில சாலை சந்திப்புகளுக்கும், முக்கிய சாலைகளுக்கும் காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன; காந்தியின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், காந்தி தென்னாஃபிரிக்காவில் வசித்த நினைவுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
டர்பனில் காந்தியின் பாரம்பரியம்
1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிகாவுக்கு வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1914ஆம் ஆண்டு இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பினார்.
காந்தி இங்கு வசித்தபோது குடியிருந்த, டர்பன் நகரின் ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான இந்திய வம்சாவளியினர், காந்தியின் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
1903ஆம் ஆண்டு ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்றை உருவாக்கினார் என்று தனது தாத்தாவின் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் காந்தியின் பேத்தி இலா காந்தி. காந்தியின் ஆளுமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட இடம் இது என்று அவர் கூறுகிறார்.
சத்தியாகிரக சித்தாந்தம் முதல் கூட்டு வீடுகள், தங்களுடைய வேலையை தாங்களே செய்வது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது (மண்பாண்டங்களை பயன்படுத்துவது, நீர் பாதுகாப்பு போன்றவை) போன்ற கருத்துக்கள் ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் காந்தி ஆசிரமத்தில் உருவாகி, மேம்படுத்தப்பட்டவை.
பாரிஸ்டர் என்ற முறையில் இங்கு கோட்டு-சூட்டு டை என்ற அலங்காரத்தில் வந்தார் காந்தி. வெள்ளையர்கள் மற்றும் இந்திய வம்சாவழி மக்கள் என பலதரப்பினரும் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இந்த ஆசிரமத்தை உருவாக்கி, இங்கே குடியேறுவதற்கு முன், காந்தி ஆங்கிலேயர்களின் பாணி வாழ்க்கை முறையை பின்பற்றினார். கையில் உணவு உண்ணாமல் ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றை பயன்படுத்துவார்.
உள்ளூரில் வசித்த கருப்பின மக்களிடமிருந்து காந்தி விலகி நின்றதால், அவரை சில விமர்சகர்கள் இனவாதி என்றும் அழைக்கின்றனர்.
காந்தியை இனவாதி என அழைத்தது ஏன்?
காந்தி தென்னாப்பிரிக்கா வந்தபோது அவருக்கு 24 வயதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் காந்தியின் பேத்தி 78 வயது இலா காந்தி.
இங்கிலாந்தில் சட்டப்படிப்பு பயின்ற காந்தி, அப்போது வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தார். உலக அனுபவங்களே அவரது சிந்தனையை மாற்றின. எனவே வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் கூறிய கருத்துக்களை வைத்து காந்தியை எடை போடமுடியாது என்கிறார் இலா காந்தி.
1940ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தில்தான் இலா காந்தி பிறந்தார். அப்போது மழை பெய்துக் கொண்டிருந்தாலும் தானே வண்டியோட்டிக் கொண்டு என்னை பார்க்க வந்தார் தாத்தா என்று தனது பிறந்தநாளைப் பற்றி குறிப்பிடுகிறார் இலா.
இனப் பாகுபாடு காட்டியவர் காந்தி என்ற குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு பதிலளித்த இலா காந்தி, "அவர் இளைஞராக இருந்தபோது கூறிய இரு கருத்துகளின் அடிப்படையில்தான் அவர் இன ரீதியாக பாகுபாடு காட்டுபவர் என்ற தவறான கருத்து உருவாகியது."
எங்களுடன் பேசிக்கொண்டே, ஒரு காலத்தில் குடும்பத்தின் சமையலறையாக இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் இலா. தற்போது அந்தக்காலத்தில் வசித்த இந்த வீடு முழுவதுமே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிட்டது.
சுவரில் காணப்படும் காந்தியின் சில சுவாரஸ்யமான கருத்துக்களை சுட்டிக் காட்டிய இலா காந்தி "இந்த வரிகளைப் பாருங்கள், இதைப் பார்த்து, தாத்தாவை இனவாதி என்று சொல்கிறார்கள், ஆனால் வேறு சில கருத்துக்களைப் பாருங்கள், அது, அவர் இனவாத கருத்தை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை தகர்க்கும்" என்று சொன்னார்.
காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் மகள் எலா காந்தி. காந்தியின் மிகப்பெரிய சீடரான இலா, சமூக சேவகராக செயலாற்றி வருகிறார். பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இலா, முன்னாள் எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது ஏழு வயதில் தாத்தாவின் மடியில் விளையாடிய இலா, காந்தியின் அமைதிக்கான சமூகப் பணியை தென்னாப்பிரிக்காவில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
இலாவின் மூத்த சகோதரி சீதா துபேலியா, தனது இறுதி மூச்சு வரை காந்தியின் கருத்துக்களை பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகள் கீர்த்தி மேனன் மற்றும் மகன் சதீஷ் காந்தி ஆகியோர் குடும்பத்தின் நான்காவது தலைமுறையினர்.
தொடர்ந்து அதிகரித்துவரும் வன்முறை மற்றும் இந்தியாவில் சமுதாயத்தில் அதிரித்து வரும் பிரிவினை பற்றி வருந்தும் கீர்த்தி மேனனையும் சந்தித்தோம்.
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி முதல் தலைமுறை என்றால், அவரது மகன் மணிலால் இரண்டாம் தலைமுறை. மணிலாலின் மகள் இலா காந்தி, இலாவின் சகோதரி சீதா துபேலியா ஆகியோர் மூன்றாம் தலைமுறையினர். சீதா துபேலியாவின் பிள்ளைகள் கீர்த்தி மேனன் மற்றும் சதீஷ் காந்தி குழந்தைகள் காந்தியின் நான்காம் தலைமுறையினர். இவர்களின் பிள்ளைகளான ஐந்தாவது தலைமுறையினரை சந்தித்தோம்.
இவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன், கேப் டவுன் மற்றும் ஜொஹானஸ்பெர்க் போன்ற நகரங்களில் வசிக்கின்றனர்.
டர்பனில் கீர்த்தி மேனனை சந்தித்தோம்.
எள்ளுத் தாத்தாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
காந்தி பற்றி பல பாட புத்தகங்களில் படிக்கமுடியும். அவரது அடுத்தடுத்த தலைமுறையினரைப் பற்றி ஊடகங்களில் தெரிந்துக் கொள்ளமுடியும். ஆனால் காந்தியின் ஐந்தாவது தலைமுறையைப் பற்றிய தகவல்களை பாடப் புத்தகங்களிலோ அல்லது வெறெந்த ஊடகங்களிலோ காணமுடியாது.
ஏனெனில் இவர்கள் ஊடகங்களின் வெளிச்சங்களுக்கு அப்பாற்பட்டு, இயல்பான எளிய வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர்.
எளிமையாக, மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கையை இவர்கள் வாழ்கின்றனர்.
காந்தியின் பேத்தியின் பேரக்குழந்தைகளான மூவருக்கும் சில விஷயங்கள் பொதுவானதாக இருக்கின்றன: அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள், நன்றாக பேசுகிறார்கள். காந்தியின் குடும்ப வாரிசுகள் என்றாலும், அதை தவறாக பயன்படுத்துவதில்லை. நேர்மையான காரியத்தை செய்வதற்கு ஒருபோதும் அச்சப்படுவதில்லை.
27 வயது கபீர் துபேலியா, டர்பனில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.
கபீரை விட 10 வயது மூத்தவரான மிஷா துபேலியா, உள்ளூர் வானொலி நிலையத்தில் தகவல் தொடர்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், கீர்த்தி மேனனின் சகோதரர் சதீஷின் பிள்ளைகள்.
இவர்களின் ஒன்று விட்ட சகோதரி சுனீதா மேனன் கீர்த்தி மேனனின் ஒரே வாரிசு. இவர் பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.
மூக்கு கண்ணாடி அணிந்து குறுந்தாடி வைத்திருக்கும் கபீரை பார்த்தால் மெத்தப் படித்தவர் போல் தோன்றுகிறது. மிஷா பார்ப்பதற்கு மிகவும் வயது குறைவானவராக தெரிகிறார். ஆனால், ஆழ்ந்த புரிதல் கொண்டவர். சுனீதா தனது வேலையில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
இவர்கள் தங்களை இந்தியர்களாக உணர்கிறார்களா அல்லது தென்னாப்பிரிக்க குடிமக்களாக உணர்கிறார்களா?
எங்களின் இந்த கேள்விக்கு, உடனே பதிலளித்த கபீர், "நாங்கள் தென்னாபிரிக்கர்கள்" என்று இயல்பாக கூறுகிறார்.
மிஷா மற்றும் சுனீதாவின் கருத்துப்படி, அவர்கள் முதலில் தென்னாப்பிரிக்கர்கள், பிறகுதான் இந்திய வம்சாவழியினர்.
இவர்கள் மூவரும் காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள். 1914இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது, மணிலாலும் தந்தையுடனே வந்துவிட்டார். ஆனால் காந்தி அவரை டர்பனுக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார்.
1903ஆம் ஆண்டில் டர்பன் அருகே ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் ஆசிரமம் ஒன்றை உருவாக்கிய காந்தி, அங்கிருந்து "இண்டியன் ஒபீனியன்" என்ற பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். 1920இல் அந்த பத்திரிகையின் ஆசிரியராக மணிலால் நியமிக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டு மணிலால் இறக்கும்வரை அந்த பொறுப்பை அவரே வகித்துவந்தார்.
தங்கள் தாத்தா இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுவதும், உலகம் முழுவதும், அஹிம்சை, சத்தியகிரகம் போன்ற சித்தாந்தங்களின் தலைவராகவும் அறியப்படுவதும் தங்களுக்கு பெருமையாக இருப்பதாக இந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
'காந்தி மனிதனாக பார்க்கப்பட வேண்டும்'
கபீரின் கருத்துப்படி, "தன்னுடைய கருத்துக்களை அமைதியான வழிகளில் எடுத்துரைத்தார்; அஹிம்சை தான் சரியான வழி என்று அவர் எடுத்த முடிவில் திடமாக இருந்தார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய கால கட்டத்தில் அவரைப் போன்றவர்களை பார்க்கமுடியாது. காந்தி அஹிம்சை பற்றி கூறியவை அந்த சமயத்தில் பலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்"
காந்திய மரபுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இந்த பாரம்பரியம் சில நேரங்களில் தங்களுக்கு ஒரு சுமையாக மாறுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
"காந்தி ஒரு மனிதரை விட அதிகமாக மதிக்கப்படுகிறார். அவருடைய மரபின் அளவீட்டின் அடிப்படையில் அவரது பரம்பரையை சேர்ந்த நாங்கள் வாழவேண்டும் என்பதற்கான அழுத்தங்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது" என்கிறார் சுனீதா.
"சமூக நீதி எனக்கு மிகவும் முக்கியமானது, கடந்த ஐந்து தலைமுறையாக காந்தி குடும்பத்தில் இந்த சிந்தனை தொடர்கிறது" என்கிறார் சுனீதா மேனன்.
தாங்கள் காந்தியின் குடும்பத்தினர் என்பதை நண்பர்களுக்கு பல காலம் வரை கூறியதே இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
"நான் வேண்டுமென்றேதான் காந்தி குடும்பத்தை சேர்ந்தவள் என்ற விஷயத்தை மறைத்துவைத்தேன்".
உண்மை தெரிந்தபோது நண்பர்களின் எதிர்வினை எப்படி இருந்தது என்று நாங்கள் கேட்டோம்.
"எங்கள் பின்னணி தெரிந்தபிறகு, அரசியலில் எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் மூலம் ஏன் என்பது புரிந்துவிட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள்" என்கிறார் சுனீதா. ஆனால் தனது குடும்ப பின்னணி நட்பில் எந்தவித மாறுதல்களையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
காந்தியின் போதனைகளை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காந்தி வாழ்ந்த காலகட்டம் வேறு, இன்று தாங்கள் வாழும் காலம் வேறு என்று கூறும் காந்தியின் வாரிசுகள், இன்றைய காலகட்டத்தில் காந்தியின் அனைத்து போதனைகளும் பொருந்தாது என்று கருதுகிறார்கள்.
தனது தாத்தா காந்தி உட்பட பல தலைவர்களின் தாக்கங்களும் தங்களுக்கு இருப்பதாக சொல்கிறார் சுனீதா.
இந்த இளைஞர்கள், காந்தியின் கண்மூடித்தனமான பக்தர்கள் அல்ல. காந்தியின் பல பலவீனங்களையும் பட்டியலிடுகிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கைச் சூழல் மற்றும் அந்தகால பின்னணியில் இருந்தே அவரை பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவில் காந்தியை பலர் விமர்சிப்பதை காந்தியின் பரம்பரையினர் அறிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அவர் மிகப்பெரிய தலைவராக போற்றப்படுகிறார். அதுவும் தேசத்தந்தையாக மதிக்கப்படுகிறார். அவரை பலர் மதித்தாலும், சிலர் விமர்சனம் செய்வது இயல்பானதே என்று அவர்கள் கூறுகின்றனர்.
"அஹிம்சையை பின்பற்ற வேண்டுமானால் ஒருவர் காந்தியவாதியாக இருக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். காந்தியை முன்னுதாரணமாக கொண்டு அகிம்சைக்கு உத்வேகம் பெறலாம். காந்திய சிந்தனைக்கு எதிராக இல்லாதவர்களும், காந்தியை விமர்சிக்கலாம், அஹிம்சை பாதையை பின்பற்றலாம்."
காந்தியை விமர்சனம் செய்பவர்கள், இந்த காலச் சூழலோடு அவரை பொருத்திப் பார்த்து விமர்சிப்பது பொருந்தாது என்று முத்தாய்ப்பாக சுனீதா கூறுகிறார்.