காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.