Showing posts with label Janaaza. Show all posts


 தம்பாளை ஸமட்

நேற்று இரவு(19)கரப்பொல ,முத்துக்கல் குளத்தின் இஸ்பீல் வழியாக மோட்டார் சைக்கிலில்  சேனபுரவிற்கு செல்லும் போது வெள்ள நீரில் மூழ்கிய சேனபுரயில் திருமணம் முடித்து இருந்த ஓட்டமாவடி ரிஸ்வான் அவர்களின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டுள்ளது-

தம்பாளை ஸமட் JP).

 


அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி கடற்கரை வீதியில் வசித்துவரும் 

முஹம்மது அபூபக்கர் முகம்மது பாத்தும்மா வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்


இவர் மரணித்த மீராசாஹிப் (சீனி முஹம்மது மனேஜர்) அவர்களின் அன்பு மனைவியும்


மரணித்த Yoosuf (A.I)

மரணித்த Hasim - கண்டி (ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)

பேராசிரியர்: Dheen Mohamed (University of Qattar)

Ameen 

Nisam  (Accountant) 

மரணித்த Niyas - பிரதி அதிபர் 


Ummu Habeeba

Ummu Salma

Ummu Salha

Jameela

ஆகியோரின் அன்புத் தாயாரும்.


மரணித்த அலாவுதீன்  (ஆங்கில ஆசிரியர்)

Mr.தையார்  (ஓய்வு பெற்ற புள்ளிவிபரவியலாளர்)

Mr.முனவ்வர்  ஓய்வு பெற்ற கிராம அலுவலர் 

Mr.தாஹிர்  ஆசிரிய ஆலோசகர் (வலயக் கல்வி அலுவலகம் அக்கரைப்பற்று)

ஆகியோரின் மாமியாரும் ஆவார்


ஜனாஸா நல்லடக்கம்

இரவு 9.00 மணிக்கு பட்டினப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு 

தைக்காநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Taqwa Emergency service


 பாயிஷ் ஹஸரத் ஜூம்மா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இறை அழைப்பை ஏற்றார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
அக்குரணை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் மெளலவி #பாயிஸ் ஹஸரத் அவர்கள் இன்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது இறையடி சேர்ந்தார்.


 அக்கரைப்பற்று ஜும்மா பத்ர் பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த மன்சூர் மீன் வியாபாரி  சியானா தம்பதியரின் அன்பு பேரக்குழந்தை மீரா நகர் மீரா ஓடையில் மூழ்கி வபாத் ஆனார்கள்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


ஜனாஸா தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உள்ளது


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

 


அந்தனி ஜீவா (26 மே 1944 ) இலங்கை, மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வந்தவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் இன்று காலமானார்




 ரிஸ்கி ஷரீப் (𝐑𝐢𝐬𝐤𝐲 𝐒𝐡𝐚𝐫𝐞𝐞𝐟) காலமானார்

மாவனல்லை ரிஸ்கி ஷரீப் (Risky Shareef) 2025.01.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்
ரிஸ்கி க்ஷரீப் நீண்ட காலம் லேக் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் சேவையாற்றி உள்ளார்.
சிறிது காலம் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்
விஷேட ஓய்வு பெறல் திட்டத்தின் கீழ் தினகரனில் இருந்து ஓய்வு பெற்ற ரிஸ்கி ஷரீப் மாவனல்லை ஹெம்மாதகம வீதியில் Book Mark என்ற பெயரில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
அனாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டு மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக
ஜனாசா நல்லடக்கம் 2025.01.11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 12.00 மணிக்கு கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் மைய்யவாடியில் நடைபெறும்



மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் பி.ஜெயச்சந்திரன். அவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

80 வயது ஆகும் அவர் உடலநலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த நிலையில் உயிர் பிரிந்தது.


பல சூப்பர்ஹிட் பாடல்கள்..

ஜெயச்சந்திரன் தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். மூன்று முடிச்சி படத்தில் 'வசந்தகால நதிகளிலே', ஒருதலை ராகம் படத்தில் வரும் 'கடவுள் வாழும் கோவிலிலே', ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. போன்ற பாடல்களில் தொடங்கி அவரது பாடல்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.

பூவே உனக்காக படத்தில் 'சொல்லாமலே யார் பார்த்தது', வானத்தைப்போல படத்தில் 'காதல் வெண்ணிலா கையில் சேருமா', கிரீடம் படத்தில் 'கனவெல்லாம் பலிக்குதே' போன்ற 90ஸ் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

ஜெயச்சந்திரத்தின் மரணம் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவரது ஹிட் பாடல்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

 


காத்தான்குடி 04ம் குறிச்சி அறபிக்கலாசாலை வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்துவந்த சகோதரர் மாஹிர் ஹாஜியார் அவர்கள் பஸ் விபத்தில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
அன்னார் மர்ஹூம் றாஸிக்(AA)டபள் ஏ அவர்களின் அன்பு மகனாவார்கள்.

 



பேராசிரியர் அச்சி முஹம்மது இஷாக்.

பேராசிரியர் அச்சிமுகம்மது இஷ்ஹாக் காலமானார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரியின் பொறுப்பாளருமான பேராசிரியர் அல்ஹாஜ். அச்சிமுகம்மது இஷ்ஹாக் அவர்கள் நேற்றிரவு புனித மக்காவில் இறையழைப்பை ஏற்றுக்கொண்டார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் ஜனாஸா தற்போது மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர் மக்காவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹும் முத்துமுகம்மது ஹாஜியார், கதீஜா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நஸ்லி இஷ்ஹாக்கின் பாசமுள்ள கணவரும், காலஞ்சென்ற பொறியியலாளர் பஸீல் ஏ. மஜீத் அவர்களின் மருமகனும், மெரீனா அப்துல் மஜீத் மஹ்றூப் அவர்களின் மச்சானும், மரியத்தின் சகோதரரும், காலஞ்சென்ற உதவி அரசாங்க அதிபர் இப்றாலெவ்வையின் மைத்துனரும், அல்ஹாஜ். எம். ரி. ஏ. தௌபீக் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமாய் அமைய நிந்தவூர் - எனது மண் பிரார்த்திக்கிறது.


நிந்தவூரின் தீன்.
தொழுகையினை என்றும் இமாம்ஜாமாத்துடன் நிலையாக கடைப்பிடித்தார்.
ஜாவத்த பள்ளியில் இவருக்கு என்று பிரத்தியேக இடம் உண்டு.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் தொடர்ச்சியாக மறைந்த தலைவருக்கு பக்கபலமாக இருந்து பல உதவிகளை கட்சிக்காக செய்தவர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக அதிபராக (Chancellor) தனது ஓய்வு காலத்தில் கடமையாற்றினார்.
நிந்தவூரின் வளர்ச்சியில் மாத்திரம் அன்றி இலங்கையின் பல கிராமங்களில் இவரின் சேவை பலருக்கு தெரியாமல் நடந்துள்ளது.
புனித மக்கா நகரில் தனது உம்றா கடமையினை நிறைவேற்ற குடும்பத்துடன் சென்ற வேளை அவருக்கு இறை அழைப்பு கிடைத்துள்ளது.
அன்னாருக்கும் அன்னாரின் சந்ததிகளுக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவனின் அருள் மென்மேலும் கிடைக்கட்டும்.

 



காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 



2024.12.05

ஜனாஸா அறிவித்தல்!


பாலமுனையை பிறப்பிடமாகவும் கம்பளையை  வசிப்பிடமாகவும் கொண்ட பொலிஸ் பிரதான பரிசோதகர் U.L.இமானுல்லாஹ் CI இன்று வபாத்தானார்.


"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியின்.."


அவரது ஜனாஸா நல்லடக்கம் கம்பளையில் இடம்பெறும்.


🤲 யா அல்லாஹ் அன்னாருடைய நற்கிரியைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான “ஜன்னத்துல் பிர்தௌஸ்” எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக..


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்..

 

முன்னாள் ராஜாங்க அமைச்சரான சேகு இஸ்ஸதீன்  அவர்களுடைய ஜனாஸா தொழுகை இன்று அக்கரைப்பற்று பட்டினின  ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு பின்பு அ தைக்காதடி மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது.  அக்கரைப்பற்றையும்  அயல் கிராமத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கண்ணீர் மல்கி உருகி பிரார்த்தித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர் இறுதி ஜனாஸாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, ஹசன் அலி மற்றும் எம் எஸ் உதுமாலெப்பை  எம்பி ஆகியோரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்திருந்தார்கள்

 


லுனாவை வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டு களுபோவில வைத்தியாசலையில் மரணமடைந்தவரது ஜனாசா தற்சமயம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது..இறந்தவரது பெயர் சியாம் என்பதாகவும் வயது 73 என்பதாகவும் தெரியவருகின்னறது.


#PulmottaiFirthowze.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
கிண்ணியா, இடிமனைச்சேர்ந்த முகம்மது காசிம் அமீன் என்பவரின் அன்பு மனைவியும் குறிஞ்சாக்கேணி MOH அலுவலகத்தில் பொதுச்சுகாதார மருத்துவமாதுவாக (PHM) கடமை செய்தவருமான அப்துல் லெத்தீப் #பர்ஷானா என்பவர் இன்று 25-11-2024 அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்.
(நல்லடக்கம் பற்றிய தகவல் விரைவில்)
இவர் வைத்தியசாலையில் கடமை செய்கின்றபோதும் ஏனைய கடமைகளின்போதும் நோயாளிகளுடனும் அவர்களுடைய உறவினர்களிடனும் அன்பாக பேசிப்பழகி தன்னால் முடியுமான உதவி ஒத்தாசைகளையும் செய்யக்கூடிய மிகவும் நல்ல பண்புகளைக் கொண்டவர்.
யா அல்லாஹ்!
இவர் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து இவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக்கி விடுவாயாக...ஆமீன்!



 ஊர்,விலாசம் தெரியாத B. அமீர்டீன் என பெயர் குறிப்பிடப்பட்ட 63 வயது உடைய நபர்  சுகயீன முற்று கல்முனை அஷ்ரப் ஞாப கார்த்த வைத்தியசாலையில் 2024. 7.9.ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2024.9.17ஆம் திகதி காலை 11. 00 மணியளவில் வைத்தியசாலை 08ஆம் இலக்க விடுதியில் மரணமடைந்துள்ளார். சுமார் 42 நாட்களாக பிரேத அறையில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அவருடைய உறவினர் யாரும் தெரியப்படவில்லை. ஆகவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.

 சாமசிறீ,தேச கீர்த்தி, அல்ஹாஜ் மௌலவி ஐ. எல்.

எம்.முஸ்தபா  (JP) அல் உஸ்வா ஜனாஸா சேவைப் பிரிவு சம்மாந்துறை

0773269035

 

அக்கரைப்பறறு நீதிமன்ற நீதிபதியின் தங்குமிட  வளாக பாதுகாப்பு அறையில் நேற்று இரவு கடமை புரிந்து கொண்டிருந்த  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் , தாரிக்-46 வயது நிரம்பியவர் உயிரிழந்திருக்கின்றார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், அக்கரைப்பற்று நகர் பிரிவு 4ம் பிரில் வசித்துவருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறிது காலமாக இவர், சில நோய்களினால், பாதிக்கப்பட்ருந்தார். நேற்று மாலை இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக நீதிபதியின் வாசஸ்தல பாதுகாப்பு கடமைக்கூடத்தில் கடமையில் ஈடுபட்டுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிசார் தடயவியல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டனர். மரண விசாரணைகளை அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி .றிஸ்வான் அவர்கள் மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், ஜனாசாவினை உறவினர்களழடம் ஒப்படைக்குமாறும் பணித்திருந்தார்.








இன்று பிற்பகல் அக்கரைப்பற்று கடற்கரை சடலமொன்று கரை ஒதுங்கி காணப்பட்டது குறித்த அந்த ஜனாசாவினை அடையாளம் காண்பதற்காக தகவலானது சமூக வலைத்தளங்களில்  பதிவிடப்பட்டிருந்தது, இதனால் உறவினர்களின் உதவியானது பெறப்பட்டிருந்தது

குறிப்பிட்ட அந்த நபர் அக்கரைப்பற்று  பள்ளி குடியிருப்பு பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என்பதாக உறவினர்கள் தெரிவித்திருந்தார்கள் அவரது ஜனாஸா உறவினர்களால் அடைய ளம் காணப்பபட்டிருந்து.

மரண விசாரணை அதிகாரியினார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் பிரேதப்
பரிசோதனைகளுக்காக .  அனுப்பட்டது . பின்னர்  ஜனாஸா உறவினர்களுக்கு  கையளிக்கப்படும்

 




அக்கரைப்பற்று தெற்கு வீதியில் வசித்தவரும் தற்போது டீன்ஸ் வீதியில் வசிப்பவருமான அப்துல்  மஜீத் (கண்ணாடி சரிப்) வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


ஏஎல்.தாஹிறாவின் அன்பு கணவரும் 


மனாஸ் (Cashier WATER BOARD )

சுறைஹா (பிரதேச செயலகம் அக்கரைப்பற்று )

உவைஸ் (engineer)

றுவைஸா

பாயிஷா

ஜனூஸா

ஹரீஸா

நிஸாயா (நீதிமன்ற உத்தியோகத்தர்)

ஸபானா

ஆகியோரின் அன்பு தந்தையும் 


மரணித்த யாஸீன் வாவா 

(றஸாக் ஸ்டோரின்) சகலனும் 

ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service


( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த பிரபல தமிழ்ப் பற்றாளர் தமிழாசான் ஓய்வு நிலை அதிபர் கலாபூஷணம் பொன். தவநாயகம்   தனது 89 வது வயதில்  மட்டக்களப்பில் நேற்று (29) காலமானார். 

அவரது இறுதி யாத்திரை  நாளை (1) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெறுமென அவரது புதல்வர் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் த.மதிவேந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். சிறந்த கலை இலக்கிய வாதி. மேடைப் பேச்சாளர். இவரது நகைச்சுவைப் பேச்சு அவையை அதிரவைக்கும்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக பன்னெடுங்காலமாக சேவையாற்றிவர். இன்றும் பாடப்படும் அப் பாடசாலையின் பாடசாலை கீதத்தை இயற்றிய பெருங் கவிஞராவார்.

 சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்டு காரைதீவில் வாழ்ந்த திரு பொன்.தவநாயகம் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ஆசிரியராக விடுதி மேலாளராக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் பகுதிநேர தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

கிழக்கில் ஆளுமைகள் பலரையும் உருவாக்கிய பெயர்பெற்ற ஆசிரியர்களுள் ஒருவர். 

மிதவாதத் தமிழ்த் தேசியக் கருத்தியலில் ஆழமான பற்றுக் கொண்டு தனது மேடைப் பேச்சினூடாகத் தமிழ்த் தேசியச் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்திய ஆளுமைகளுள் ஒருவர்.

கலைஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்களுடன் செயலாற்றியவர்.

அவருக்கு மனைவி மங்கையர்க்கரசியுடன், டாக்டர். கௌரிகாந்தன்( அவுஸ்திரேலியா ), பொறியியலாளர் ஞானவிந்தன்( நியூசிலாந்து) ,பேராசிரியர் மதிவேந்தன்( கிழக்கு பல்கலைக்கழகம்),தமிழினி (அவுஸ்திரேலியா ) ஈழசுகந்தன்( நியூசிலாந்து ) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

பொன் தவநாயகம் எனும் ஆளுமையின் உடல் மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்று அவரது மாணவர்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.