இஸ்ரேலுக்கு ரகசியமாக ராக்கெட்கள், வெடிபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துவருவது அம்பலம்
#Rep/SparkMedia.
சென்னை வழியாக இஸ்ரேலுக்கு ரகசியமாக ராக்கெட்கள், வெடிபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துவருவது அம்பலமாகியுள்ளதாக Al Jazeera நிறுவனம் செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது! கடந்த மே 15 அன்று, சென்னையில் இருந்து வந்த Borkum என்ற சரக்குக் கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தை அடைய முற்பட்ட போது, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் கப்பலாக இருக்கக்கூடும் என சந்தேகித்து ஸ்பெயின் இடதுசாரி கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர் கப்பலை ஸ்பெயின் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஸ்பெயின் துறைமுகத்தை அடையும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஸ்லோவேனிய நாட்டை நோக்கி நகர்ந்ததாக Al Jazeera கூறியுள்ளது Al Jazeera மேற்கோள்காட்டும் ஆவணங்களின்படி, இந்தியாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றிவந்த Borkum கப்பல் இஸ்ரேலின் Ashdod துறைமுகத்திற்கு செல்ல முற்பட்டதாக கூறியுள்ளது கடந்த ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாக செல்வதைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்ததாகவும் கடல் கண்காணிப்பு தளங்கள் காட்டுவதாக Al Jazeera தெரிவித்துள்ளது Borkum கப்பலில் 20 டன்கள் ராக்கெட் என்ஜின்கள், 12.5 டன்கள் வெடிக்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள், 1,500 கிலோ வெடிபொருட்கள் மற்றும் 740 கிலோ பீரங்கிகளுக்கான உந்துபொருட்கள் இருந்ததாகவும் சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த மற்றொரு சரக்குக் கப்பலான Marianne Danica, இஸ்ரேலுக்கு இராணுவ பொருட்களை ஏற்றிச் செல்ல முயன்றதாக தெரிவித்து மே 21 அன்று ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்தது அமைதி பேச்சுவார்த்தைக்கு வாதிட்டு வந்த இந்தியா, காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்தது இது எடுத்துக்காட்டுவதாக Al Jazeera செய்தி நிறுவனம் விமர்சனம் செய்துள்ளது