(சுகிர்தகுமார்) 0777113659
அம்பாரை மாவட்டம் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையிலான மாபெரும் பட்டத்திருவிழா வரலாற்றில் முதல் தடவையாக மிக பிரமாண்டமான முறையில் நேற்று (15) மாலை விநாயகபுரம் கடற்கரை முற்ற வெளியில் இடம்பெற்றது.
வலம்புரியோன் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் விநாயபகபுரம் முத்துலெட்சுமி நகையகத்தின் உரிமையாளர் சி.சஞ்ஜீவனின் முழுதான அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் குருமார்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டம் விடும் போட்டி ஆண்களுக்கான கயிறுழுத்தல் பெண்களுக்கான சங்கீதக்கதிரை மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
பட்டத்திருவிழா கலந்து கொண்ட அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதில் அதிகளாவனவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு; வண்ணமயம் மிக்க வித்தியாசமான பட்டங்களை வானில் பறக்கவிட்டதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இதேநேரம் இன்னிசை நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் உள்ளுர் வெளியூர் கலைஞர்களும் பங்கேற்று பல பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்சிப்படுத்தினர்.
கயிறு இழுத்தல் போட்டி மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கான போட்டிகளும் இடம்பெற்றது.
பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்ட முதலிடம் பெற்றவருக்கு 30ஆயிரமும் இரண்டாம் இடம் பெற்றவருக்கு 20ஆயிரமும் மூன்றாம் இடம்பெற்றவருக்கு 10 ஆயிரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் 7 ஆறுதல் பரிசில்களும் ஏனைய போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கிய சஞ்சீவன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இன்னும் சிலர் பாராட்டப்பட்டனர்.