”விடாமுயற்சியி”னால், பத்ம பூஷன் விருது பெறுகின்றார்,தல அஜித்
இந்திய அரசினால் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!#AjithKumar | #PadmaBhushan
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள தன்னைப் பற்றிய ஆவணப் படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தனுஷ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் நயன்தாரா இன்று (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கை, திரையுலகில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் நேரடியாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், நயன்தாரா தரப்புக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் தனுஷ் தரப்பின் வாதங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவருடைய வழக்கறிஞர் அருண்.
அவர், "நானும் ரவுடிதான் படத்திற்கான பதிப்புரிமை உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, என் வாடிக்கையாளர்தான் (தனுஷ்) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” என்று அவர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரம்
நயன்தாராவுக்கு ஆதரவாகப் பல்வேறு நடிகைகள் அவருடைய அறிக்கையை இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?
கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
கங்குவா: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்
பி.சுசீலா: 70 ஆண்டுகளாக இனிமையான குரலால் மக்களை ஈர்த்துவரும் 'மெல்லிசைப் பாடகி'
ஷாருக் கான்: பாலிவுட்டில் வில்லன் நடிகர் காதல் நாயகனானது எப்படி?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நயன்தாரா, தனுஷ் சர்ச்சை என்ன?
நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும் ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின் இந்த ஆவணப்படம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்தான் நயன்தாரா இன்று தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் தனுஷ் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
நயன்தாரா கூறுவது என்ன?
மூன்று பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம் இதுதான்:
“நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, அதில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது, தனிநபர் சாதனங்கள் மூலம் எடுக்கப்பட்ட வெறும் 3 விநாடி வீடியோ மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், அதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆவணப் படத்தில் திரைத்துறையைச் சேர்ந்த தனது நலம்விரும்பிகள் பலரும் பங்களித்து இருப்பதாகவும் தன்னுடைய பல திரைப்படங்கள் குறித்த நினைவுகள் இடம்பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, தனது மிகச் சிறப்பான மற்றும் முக்கியத் திரைப்படமான ‘நானும் ரவுடிதான்’ இடம்பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணப் படத்தின் டிரெய்லரில், நயன்தாராவுடன் பணியாற்றிய இயக்குநர் அட்லி, நடிகை ராதிகா, நடிகர் ராணா டகுபதி, நாகார்ஜூனா, இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் நயன்தாரா குறித்துப் பேசியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதல், திருமணம் குறித்துப் பகிர்ந்துள்ளனர். அவருடைய முக்கிய திரைப்படங்களின் காட்சிகள், பாடல்கள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம்: மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி - 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
கேரளா: 'இந்து மத வாட்ஸ் ஆப் குழு' தொடங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி - சர்ச்சையின் முழு பின்னணி
3 மணி நேரங்களுக்கு முன்னர்
நடிகர் தனுஷ் பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,மூன்று விநாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதாக தனுஷ் குறித்து நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னும் தனுஷிடமிருந்து தடையில்லா சான்று பெற முடியாததாலும், ‘நானும் ரவுடிதான்' படத்தின் பாடல்கள், காட்சிகள், புகைப்படங்களைக்கூட பயன்படுத்த அனுமதி தராத காரணத்தாலும், ஆவணப்படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து, தற்போதுள்ள வடிவத்திற்குக் கொண்டு வந்திருப்பதாக நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் பாடல் வரிகளைக்கூட பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படாதது, தன் இதயத்தை நொறுக்குவதாக நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
“படப்பிடிப்பில் இருப்பவர்களின் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவரா தயாரிப்பாளர்?” என்றும் நயன்தாரா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு, “தனுஷின் நோட்டீஸுக்கு சட்ட ரீதியாக பதிலளிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சக நடிகைகள் ஆதரவு
நயன்தாராவின் இந்த அறிக்கை வெளியான உடனேயே, அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட மற்ற நடிகைகள் சிலரும் நயன்தாராவின் பதிவுக்கு ‘லைக்’ செய்துள்ளனர்.
குறிப்பாக, நடிகை பார்வதி அந்த அறிக்கையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
“தொழில் மற்றும் பணரீதியாக இல்லாமல், தனிப்பட்ட ரீதியில் தனுஷ் இதைச் செய்திருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஆடியோ வெளியீட்டு விழாவொன்றில் தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்து 'வாழுங்க, வாழ விடுங்க' என தனுஷ் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன்.
குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நயன்தாராபட மூலாதாரம்,Netflix India
படக்குறிப்பு,10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'நானும் ரவுடிதான்' வெற்றி திரைப்படமாக அமைந்தது
கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ நயன்தாராவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இது இரண்டாவது படம்.
விஜய் சேதுபதி, ராதிகா, பார்த்திபன், ஆனந்தராஜ். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரின் கூட்டணியில் நகைச்சுவை திரைப்படமாகப் பல விதங்களில் புதுமையான அனுபவத்தைத் தந்ததாக அச்சமயத்தில் திரைப்பட விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
கடந்த 2016இல் சிறந்த தமிழ் நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது நயன்தாராவுக்கு இந்தப் படத்திற்காக வழங்கப்பட்டது.
விருது மேடையில் பேசிய நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட மொத்த படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்திருப்பார். தனுஷ் குறித்துப் பேசியபோது, “இந்தப் படத்தில் தனுஷ் என் நடிப்பை வெகுவாக வெறுத்தார். அதற்காக தனுஷிடம் மன்னிப்பு கேட்கிறேன்” எனக் கூறியிருந்தார். அதைக் கேட்டு தனுஷும் சிரிப்பார். இந்தக் காணொளி அச்சமயத்தில் வெகு பிரபலமானதாக இருந்தது.
தனுஷ் தரப்பு கூறியது என்ன?
நயன்தாரா தரப்புக்கு தனுஷ் தரப்பில் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவருடைய வழக்கறிஞர் அருண் அனுப்பிய நோட்டீஸை, நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
(மூன்று பக்க நோட்டீஸையும் முன்பு பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன், பின்னர் மற்ற இரண்டு பக்கங்களையும் நீக்கிவிட்டு, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பகுதியை மட்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.)
அதன்படி, அந்த நோட்டீஸில் தனுஷின் வழக்கறிஞர், “படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், போட்டோ-ஷூட்கள், வீடியோக்கள் மற்றும் படத்தை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் வீடியோக்கள் ஆகியவற்றை ஊடகங்கள் உள்ளிட்ட எந்தத் தளங்களிலும் பயன்படுத்தும் உரிமை படத் தயாரிப்பாளருக்கே உள்ளதாக” கூறப்பட்டுள்ளது.
ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'
16 நவம்பர் 2024
"யுரேனஸின் நிலவில் மீன்கள் நீந்தலாம்" - 40 ஆண்டு கருதுகோளை தலைகீழாக மாற்றிய புதிய கண்டுபிடிப்பு
5 மணி நேரங்களுக்கு முன்னர்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் பட மூலாதாரம்,VigneshShivN/Twitter
படக்குறிப்பு,இருவருடைய காதல், திருமணம் உள்ளிட்ட பகுதிகள் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன
“நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கான பதிப்புரிமை (copyright) உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் (Wunderbar) என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, என் வாடிக்கையாளர்தான் (தனுஷ்) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என் வாடிக்கையாளரால் பணியமர்த்தப்பட்ட ஒருவரால் (work on hire - வேலையைச் செய்பவருக்கு அல்லாமல் அதன் உரிமையாளருக்கே சொந்தமானவை) எடுக்கப்பட்டது. கடந்த 22.10.2015 அன்று வண்டர்பார் ஃபிலிம்ஸ் எனும் என் வாடிக்கையாளரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோக்கள் என் வாடிக்கையாளரின் யூடியூப் சேனலில் இருப்பதை 10 ஆண்டுகளாக அறியவில்லை என்பதை அவர் (நயன்தாரா) மறுக்க முடியாது. இதன்மூலம் நயன்தாரா ‘நெட்பிளிக்ஸ் இந்தியா’ நிறுவனத்தைத் தவறாக வழிநடத்த முயல்வதாக” அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தனது வாடிக்கையாளரான தனுஷ்தான் படத்துடன் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் பிரத்யேக உரிமையாளர் எனவும் தனுஷின் வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
“படப்பிடிப்பின்போது வீடியோ எடுப்பதற்காக என் வாடிக்கையாளர் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை என எதிர்த்தரப்பு கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் அதை எடுத்தவருக்குத்தான் சொந்தமானது எனக் கூறுவது மிக மேலோட்டமானதாக உள்ளது. அவையும் தயாரிப்பாளருக்கே சொந்தம்” என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தக் காட்சிகளை 24 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் கூறுவது என்ன?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பதிப்புரிமை சட்டம் 1957 குறித்து விளக்கினார்.
“இலக்கியம், கலை படைப்புகளுக்கு வழங்கக்கூடியதுதான் பதிப்புரிமை (copyright). புத்தகம், இசை, காட்சி சம்பந்தப்பட்டவற்றுக்கு வெவ்வேறு வித பதிப்புரிமைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் சட்டப்படி அதற்கான உரிமை தயாரிப்பாளருக்குத்தான் இருக்கும்,” என்றார்.
சாம்ஸன், திலக் வர்மா சதம்: இந்திய அணி புதிய வரலாறு - தென் ஆப்ரிக்க மண்ணில் பதிவான சாதனைகள்
16 நவம்பர் 2024
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: இறுதி யுத்தத்திற்குப் பின் தமிழர்கள் வாக்களிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
நயன்தாரா / விக்னேஷ் சிவன் பட மூலாதாரம்,NAYANTHARA/Instagram
“வெளிநாடுகளில் ஒரு படத்தை ஒவ்வொருமுறை ஒளிபரப்பும்போதும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சதவீத பணத்தை அதில் பங்கெடுத்த முக்கியக் கதாபாத்திரங்களுக்கு வழங்கும் அளவுக்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தளவுக்கு இந்தச் சட்டங்கள் வளரவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.
இருந்தாலும், தற்போது சினிமாவை பொறுத்தவரை எல்லோரும் தெளிவாக அனைத்து தளங்களுக்குமான பதிப்புரிமையை தயாரிப்பாளர் ஒப்பந்தமாக ஏற்படுத்திக் கொள்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் ‘நானும் ரவுடிதான்’ சம்மந்தப்பட்ட அனைத்து உரிமைகளும் அதன் தயாரிப்பாளரான தனுஷுக்கு இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
ஆனால், இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் (fair use) உள்ளன. "இலக்கியம், ஆராய்ச்சி சார்ந்தவற்றுக்குப் பாடல்களையோ, காட்சிகளையோ 30 விநாடிகள் வரை அவர்களின் அனுமதியோ ஒப்புதலோ இல்லாமலேயே குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அதையே வணிகரீதியாகப் பயன்படுத்தினால் விதிமீறலாகிவிடும்" என்கிறார் அவர்.
தற்போது எழுந்துள்ள விவகாரத்தில், 3 விநாடி காட்சி ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தப்பட்டதா, என்பது தெளிவாகவில்லை எனக் குறிப்பிடும் வெற்றிச்செல்வன், ஒருவேளை தன்னைப் பற்றிய ஆவணப்படம் எனும் நோக்கில்கூட நயன்தாரா தனது தரப்பு வாதங்களாக முன்வைக்க முடியும் என்கிறார்.
மேலும், 3 விநாடிகள் எனக் குறுகிய காலமே பயன்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டலாம் என்கிறார்.
நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள்' (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
“இந்திய ராணுவத்திடம் சாய் பல்லவி மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று எக்ஸ் தளத்தில் தன்மய் குல்கர்னி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
“சாய் பல்லவி கூறியதை பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் அமரன் திரைப்படம் வரும் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்திய ராணுவத்தின் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை சார்ந்து திரையாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்திரைப்படம் வெளியாகும் சமயத்தில் நடிகை சாய் பல்லவியைக் குறிப்பிட்டு, ‘Boycott Sai Pallavi' என்று சமூக ஊடக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சாய் பல்லவி ஏற்கனவே கொடுத்த நேர்காணலில் இந்திய ராணுவத்தைப் பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார், அதற்காக அவர் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி என்ன பேசினார்? அது ஏன் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது?
கனடாவில் சீக்கியர் மத்தியில் 'காலிஸ்தான்' ஆதரவு எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு
என்ன சர்ச்சை?
"பாகிஸ்தான் மக்கள் இந்திய ராணுவத்தினரைத் தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள். அதேசமயம் இந்தியர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள்,” என்று முன்பு நடந்த ஒரு நேர்காணலில் நடிகை சாய்பல்லவி கூறியது இப்போது வைரலாகப் பரவிவருகிறது.
“சாய் பல்லவி பேசியதைப் பார்க்கும்போது, அவர் (இஸ்லாமிய மதபோதகர்) ஜாகிர் நாயக்கால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது போலத் தெரிகிறது. இவருடைய படங்களைப் பார்க்காதீர்கள்," என்று ‘மிஸ்டர் சின்ஹா’ என்ற பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிரான வன்முறைக்கும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு பசுவை வாகனத்தில ஏற்றி கொண்டுசென்றதற்காக ஒரு முஸ்லிமுக்கு நடந்த வன்முறைக்கும் என்ன வித்தியாசம்,” என்றும் சாய் பல்லவி அதே நேர்காணலின் மற்றொரு பகுதியில் கூறியுள்ளார்.
ஆனால் சில சமூக வலைதளப் பயனர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“பசுக்களை கடத்துவதும், காஷ்மீரில் உள்ள பண்டிட்களின் மீது நடக்கும் தாக்குதலும் ஒன்று என்று சொல்பவர் தான், பாலிவுடில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்,” என்று ‘பேராசிரியர் சாஹப்’ என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சாய் பல்லவி இந்து மதத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் எதிரானவர். அவரது படங்களைப் புறக்கணிப்போம்," என்று ‘ஹிந்து IT செல்’ என்னும் கணக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
பலரும் சமூக வலைதளத்தில் சாய் பல்லவிக்கு எதிராகப் பல விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக வாக்கு வங்கியை விஜய் குறி வைக்கிறாரா? அவருக்கான வாக்குகள் எங்கிருந்து வரும்?
29 அக்டோபர் 2024
டிரம்பை ஆதரிக்கும் பழமைவாத கிறிஸ்தவர்கள் - 'பைபிள் பெல்ட்' மாகாணங்களில் என்ன நடக்கிறது?
29 அக்டோபர் 2024
சாய் பல்லவி, அமரன் திரைப்படம், இந்திய ராணுவம் பட மூலாதாரம்,X/Sai_Pallavi92
படக்குறிப்பு,ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ‘விராட பர்வம்' திரைப்படம் வெளியானது.
நேர்காணலில் சாய் பல்லவி என்ன பேசினார்?
இதுகுறித்து பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய மூத்த திரைப்பட பத்திரிக்கையாளர் பிரபு, “சமூக ஊடகங்களின் காலமான இன்று, முப்பது நொடி, அல்லது ஒரு நிமிடக் காணொளியை மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர் பேசிய முழு காணொளியையும் பார்த்த பின்பு தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்,” என்று கூறினார்.
அந்த நேர்காணலின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போம்.
ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ‘விராட பர்வம்' திரைப்படம் 2022-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் நக்சல் இயக்கத்தைக் கதைக்களமாகக் கொண்டது.
இந்தத் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக ‘க்ரேட் ஆந்திரா' என்ற யூட்யூப் சேனலுக்கு நடிகை சாய் பல்லவி நேர்காணல் ஒன்றை கொடுத்தார்.
இந்த நேர்காணல் 2022-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அன்று யூட்யூபில் வெளியானது.
அதில் கீழ்கண்ட உரையாடல் இடம்பெற்றிருந்தது:
நெறியாளர்: இந்தப் படத்தில் நீங்கள் நக்சல் இயக்கத்தினரின் உடை அணிந்திருந்தீர்கள். உங்களுக்கு அவர்கள் மீது ஏதேனும் இரக்கம் உள்ளதா?
சாய் பல்லவி: வன்முறை என்றுமே ஒரு சிறந்த வழி இல்லை என்று நான் நம்புகிறேன். நக்சலிசம் சரியா தவறா என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. பாகிஸ்தான் மக்கள் நம் ராணுவ அதிகாரிகளை தீவிரவாதிகள் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நம்மால் அவர்களுக்கு ஆபத்து உள்ளது. அதேபோல நாம் அவர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கிறோம். நமது பார்க்கும் கோணத்திற்கேற்ப நமது கண்ணோட்டம் மாறுபடும். வன்முறை சரியா? தவறா? என்பதைச் சொல்ல முடியாது.
நெறியாளர்: இடதுசாரி இயக்கங்களைப் பார்த்துள்ளீர்களா?
சாய் பல்லவி: நான் இடதுசாரி-வலதுசாரி என்று எல்லாவற்றையும் பார்த்துள்ளேன். நான் நடுநிலையான நபர். நான் வலதுசாரி குடும்பத்திலோ அல்லது இடதுசாரி குடும்பத்திலோ பிறந்திருந்தால் நான் ஒரு சார்புடையவராக இருந்திருப்பேன். ஆனால் என் வீட்டில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று சொல்லி வளர்த்தார்கள்.
இடதுசாரி அல்லது வலதுசாரி... இவர்களில் யார் சரி என்று நாம் சொல்ல முடியாது. உதாரணமாக ‘காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தில் அங்குள்ள பண்டிட்களை எப்படி கொலை செய்தார்கள் என்று பார்த்தோம். அதுவே மதக்கலவரம் என்றால், ஒரு பசுமாட்டை வாகனத்தில் ஏற்றி சென்ற முஸ்லிம் ஓட்டுனரை தாக்கிவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வது என்ன? இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?
வலியவர்கள் தங்களை விட எளியவர்களைத் தாக்குவது தவறு. தவறைச் சுட்டிக்காட்டும் பக்கத்தில் நிற்கவேண்டும். நல்ல மனிதர்களாக இருப்பவர்கள் எப்போதும் நடுநிலையோடு இருப்பார்கள்.
பால், நெய், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
28 அக்டோபர் 2024
நாளொன்றுக்கு 300 முறை கடலில் மூழ்கி எழும் இந்த 'நிஜ கடற்கன்னிகள்' பற்றி தெரியுமா?
29 அக்டோபர் 2024
சாய் பல்லவி, அமரன் திரைப்படம், இந்திய ராணுவம் பட மூலாதாரம்,instagram/chinmayisripaada
பாடகி சின்மயி என்ன சொன்னார்?
இந்தச் சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் கருத்தினைப் பதிவிட்டுருக்கும் பாடகர் சின்மயி ஸ்ரீபாதா, “சாய் பல்லவி சொன்னதைப் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் பகுத்தறிவுச் சிந்தனை திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதுபோல யாரேனும் ஒருவர் கேள்வி எழுப்பினால் அவர்களை ‘நக்சல்’ அல்லது ‘தேச விரோதி’ என்று அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் இருந்தும் பார்க்கவேண்டும் என்று மூத்த திரைப்படப் பத்திரிக்கையாளர் பிரபு, பிபிசி தெலுங்கிடம் கூறினார்.
“பிரபலங்களை மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். அதனால் அவர்கள் அரசியல் தொடர்பாகவோ, மத உணர்வுகள் பற்றியோ பேசும்போது பல முறை சிந்தித்துதான் பேச வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவது போல இவற்றைக் கையாளக்கூடாது," என்கிறார் பிரபு.
“சாய் பல்லவி, சீதை கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்வது தவறு. ஒரு நடிகர் எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஒருவருடைய தனிப்பட்டக் கருத்துகளை வைத்துக்கொண்டு இவர் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கலாம், நடிக்கக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது,” என்றும் பிரபு கூறினார்.
“சாய் பல்லவி கூறியதில் என்ன தவறு உள்ளது? இந்த விமர்சனங்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. உணர்வுகள், கலாசாரங்கள் என்ற பெயரில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளன.
இதுகுறித்து பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய சமூக ஆர்வலர் சஜாயா, திரைத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலுள்ள பெண்களுக்கும் இதுபோல கேலி செய்யப்படுவது அதிகரித்துவருகிறது,, என்றார். "அரசாங்கம் முன்வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது,” என்றார் சஜாயா.
பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?
28 அக்டோபர் 2024
தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண் - என்ன ஆனார்?
28 அக்டோபர் 2024
சாய் பல்லவி, அமரன் திரைப்படம், இந்திய ராணுவம் பட மூலாதாரம்,X/Sai_Pallavi92
படக்குறிப்பு,டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்
சாய் பல்லவியின் பதில் என்ன?
இந்தச் சர்ச்சை குறித்து இதுவரை சாய் பல்லவி எந்தவொரு பதிலும் கூறவில்லை.
மறுபுறம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, “நமக்காக உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் நினைவாக இங்கு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும்போது மிகவும் உணர்ச்சிவசமானேன்,” என்று நடிகை சாய்பல்லவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை - அமலா பால், விவாகரத்து வருடம் - 2016
பிரபல நடிகை தனது குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டார்.
கடந்த டிசம்பரில் முதலில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ரம்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ரம்பா எட்டு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் தவிர, சில பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில படங்களுடன்.
பல சிக்கல்களையும் சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்கள் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்தப் படம் என்ன மாதிரியான விமர்சனங்களைப் பெற்று வருகிறது? படம் எப்படி இருக்கிறது?
முக்கியமாக, 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் - LCU' வெற்றி பெற்றதா?
விஜய் குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி உருவாக்கினார்கள்? போலியை கண்டறிவது எப்படி?
4 அக்டோபர் 2023
சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன வேடம் என்ன?
1 அக்டோபர் 2023
சந்திரமுகி: உண்மையான மாளிகையும் கொலைகளும் - நூறாண்டுக்கு முன் நடந்தது என்ன?
1 அக்டோபர் 2023
பொதுவாக எல்லா விமர்சனங்களும் இந்தப் படம் 'A History of Violence' என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.
இருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தொய்வடைவதால் இப்படம் அசலான படமாக அமையவில்லை எனவும் பெரும்பாலான விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதோடு, ஊடக விமர்சனங்கள் லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸுக்கான தொடர்பு வலிந்து திணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.
விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT
படக்குறிப்பு,
'இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், இது ஒரு ‘ஒன் மேன் ஷோ’, விஜய் இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார்'
விஜய்யின் ‘ஒன் மேன் ஷோ’
‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ், லோகேஷ் கனகராஜ், நன்கு அறியப்பட்ட பழைய கதையான ‘நாட்டை விட்டு வெளியேறி வாழும் ஹீரோ’ கதையைத் தேர்ந்தெடுத்து, அதை படைப்பூக்கமுள்ள ஆக்ஷன் காட்சிகளுடன் அழகுபடுத்தியுள்ளார், என்று கூறியுருக்கிறது. இந்தப் படத்தில் ரத்தம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.
“தியேட்டருக்குள் நுழைந்த அரை மணிநேரத்திற்குள் படத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும், லோகேஷ் தனது ‘புதுமையான வன்முறை மற்றும் அதிரடி காட்சிகளில்’ ஜொலிக்கிறார்,” என்று எழுதியிருக்கிறது.
மேலும், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், இது ஒரு ‘ஒன் மேன் ஷோ’, விஜய் இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது.
திரிஷா, வெறுமனே நாயகனுக்கு ஜோடியாக மட்டும் சில காட்சிகளில் தோன்றாமல், அவரது கதாபத்திரத்துக்கும் நல்ல கவனம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ எனப்படும் LCU படங்களான கைதி, விக்ரம் ஆகியவை முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாக இருந்தபோதும் விக்ரம் படத்தில் குடும்ப சென்டிமென்ட் இருந்தது.
ஆனால், லியோ படத்தில் இருக்கும் குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தின் அதிரடி நகர்வைப் பாதிக்கிறது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியிருக்கிறது.
அதேநேரம், ‘LCU’ பகுதியும் வலிந்து திணிக்கப்பட்டதுபோல் தெரிந்தாலும், ‘லியோ’ படத்தின் மூலம் அடுத்த படத்திற்கான வலுவான கதையைப் பெற்றுள்ளார் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT
படக்குறிப்பு,
திரிஷா, வெறுமனே நாயகனுக்கு ஜோடியாக மட்டுமே சில காட்சிகளில் தோன்றாமல், அவரது கதாபத்திரத்துக்கும் நல்ல கவனம் அளிக்கப்பட்டிருக்கிறது.
லியோ விஜய்க்கு இன்னொரு ‘கில்லி’ ஆனதா?
இந்து தமிழ் திசை, தனது விமர்சனத்தில், இப்படம், விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு படமாக அமைந்திருப்பதாகத் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறது.
அதிவேகமாக நகரும் படத்தின் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால், ‘லியோ இன்னொரு கில்லியாக காலம் கடந்தும் விஜய்யின் மகுடத்தில் நின்றிருக்கும்,’ என்று கூறியிருக்கிறது.
“படத்தின் ஆகப் பெரும் குறை, உருக்கமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாததுதான். படம் முழுக்க வரிசையாய் வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.
சிங்கிள் சீனில் வந்தாலும், ‘ரோலக்ஸ்’ சூர்யா போன்ற மிரட்டல் காட்சிகள் வில்லன்களுக்கு இல்லை,” என்று எழுதியிருக்கிறது தி இந்து தமிழ் திசை.
மேலும், படம் முழுக்கவே தொடர்ந்து சண்டைக் காட்சிகள் வருவதும் அயர்சியைத் தருகிறது என்றும் விமர்சித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றும் இந்து தமிழ் திசை எழுதியிருக்கிறது.
விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT
படக்குறிப்பு,
இப்படத்தின் 'இருண்ட கடந்த காலம் கொண்ட நல்ல மனிதன்’ என்னும் கதை இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கதை வகை.
படத்தின் திரைக்கதை அதிரடியை தக்க வைத்ததா?
தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் நாளிதழ், ‘லியோ’ படம் அதிரடியாகத் தொடங்கினாலும், திரைக்கதை இரண்டாம் பாதியில் தொய்வடைவதாக எழுதியிருக்கிறது.
‘A History of Violence’ திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்திருந்தாலும், இப்படத்தில் அசல் தன்மை இல்லை, என்று கூறுகிறது இந்த விமர்சனம்.
‘இருண்ட கடந்த காலம் கொண்ட நல்ல மனிதன்’ என்னும் கதைக்களம் இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கதை வகை என்பதாலும், இப்படத்தில் எழுத்தாளரும் இயக்குநரும் அதை மேலும் மேம்படுத்தத் தவறியதாலும், லியோவின் திரைக்கதை லோகேஷின் திரைக்கதைகளிலேயே சுமாரானதாக இருக்கிறது, என்றும் இந்தியன் எக்ஸ்பிரெஸ் விமர்சனம் கூறியிருக்கிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தைப் போலவே, இந்த விமர்சனமும், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பகுதியாக இப்படம் அமைந்திருந்தாலும், அந்தத் தொடர்பு செயற்கையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது, என்று எழுதியிருக்கிறது.
விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT
படக்குறிப்பு,
'லியோ படத்தில் இருக்கும் குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தின் அதிரடி நகர்வைப் பாதிக்கிறது'
இது லோகேஷ் யூனிவர்ஸா? விஜய் யூனிவர்ஸா?
ஆங்கில இணைய இதழான ஸ்க்ரோல், லியோ மெதுவாகத் தொடங்கி கிளைமேக்ஸையும் மெதுவாகவே அடைகிறது என்று எழுதியிருக்கிறது.
“இப்படத்தின் திரைக்கதை தேவையான இடங்களில் ஆர்வத்தைத் தூண்டுகிறது, ஆனாலும் இது பழக்கப்பட்ட கதைதான்,” என்று கூறியிருக்கிறது.
மேலும், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இந்தப் படம் ஒரு பகுதியாக இருந்தாலும், விஜய்தான் தனது யூனிவர்ஸின் மாஸ்டர் என்று கூறியிருக்கிறது.
விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT
படக்குறிப்பு,
'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் பகுதியாக இப்படம் அமைந்திருந்தாலும், அந்தத் தொடர்பு செயற்கையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது'
அனிருத்தின் இசை எப்படி?
சமீபகாலமாகத் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவாகி வரும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசையைப் பற்றி அனைத்து விமர்சனங்களும் பொதுவாகச் சாதகமாகவே எழுதியிருக்கின்றன.
இந்து தமிழ் திசை, “அனிருத் மீண்டுமொரு முறை இளைஞர்களை வசியம் செய்திருக்கிறார். படம் முழுக்கவே அனிருத் இசை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களை தரத் தவறவில்லை,” என்று எழுதியிருக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அனிருத் ரவிச்சந்தரின் ஒலிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்று கூறியிருக்கிறது.
“அவரது வழக்கமான ‘நட்சத்திர வழிபாட்டு’ இசையமைப்பில் இருந்து விலகி, அனிருத் மிக நல்ல பாடல்களுடன் லியோவுக்கு தனித்துவமான இசையைச் சேர்த்திருக்கிறார்,” என்று கூறியிருக்கிறது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, படத்தின் இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தைத் தொடுவதாகக் கூறுகிறது. “முதல் பாதியில் ஒரு மெதுவான பாடல் மற்றும் இரண்டாம் பாதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘நா ரெடி தான்’ ஆகியவை, படத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் முதல் பாதியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆற்றல் மிகுந்த பின்னணி இசை தேவை,” என்று எழுதியிருக்கிறது.
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.
1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.
குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியுடன் மேடையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு உடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ரஹ்மான் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்.
இதை கேட்ட அங்கிருந்த ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. பின்னர், சாய்ரா பானு கூட்டத்தை வாழ்த்தி, “மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், ஏனென்றால் அவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரது குரலால் அவரை நேசித்தேன். அவ்வளவுதான். என்னால் சொல்ல முடியும்.” என சுருக்கமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
"Naatu Naatu," from "RRR," music by M.M. Keeravaani; lyrics by Chandrabose
1990ல் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான எம்.எம். கீரவாணியை அதற்கு அடுத்த ஆண்டே மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். தமிழில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 15க்குள்தான் இருக்கும் என்றாலும் சில மறக்கமுடியாத தமிழ்ப் பாடல்களைத் தந்திருக்கிறார்.
தமிழில் அறிமுகமான அழகன் படத்திலேயே தமிழ் திரைப்படப் பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார் அவர். மரகதமணி இசையமைத்து தமிழில் வெளியான சில இனிமையான பாடல்களின் பட்டியல் இது.
1. சங்கீத ஸ்வரங்கள் (அழகன்): அழகன் திரைப்படத்தில் கதாநாயகனான மம்மூட்டியும் நாயகியான பானுப்ரியாவும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும்கூட, இப்போதும் யாராவது தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினால் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டே சுட்டிக்காட்டும் அளவுக்கு, காலத்தால் அழியாத பாடல் இது. அருமையான இசை, அட்டகாசமான வரிகள் என எந்தத் தருணத்திலும் கேட்கத் தகுந்த பாடல் இது. இந்தப் பாடலின் பின்னணியில் வரும் காட்சியில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு துவங்குவதற்கு முன்பாக ஒலிக்கும் பின்னணி இசையையும் பாடலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார் மரகதமணி. இந்தப் பாடலை சந்தியா என்பவரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பாடியிருப்பார்கள்.
ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி: மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆஸ்கர் விருது வென்றது ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் - ஆஸ்கர் மேடையில் கீரவாணி
9 மணி நேரங்களுக்கு முன்னர்
தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது
4 மணி நேரங்களுக்கு முன்னர்
2. மழையும் நீயே (அழகன்): இந்தப் பாடலும் அதே பாடத்தில் மம்முட்டிக்கும் பானுப்ரியாவுக்கும் இடையிலான பாடல்தான். இருவருக்கும் இடையிலான காதல் வளரும் நிலையில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலில், மம்மூட்டிக்கு ஒரு கீ போர்டை வாங்கி அனுப்பும் பானுப்ரியா, "இசையைவிட இனிமையானவருக்கு - ப்ரியங்களுடன்" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையையும் வைத்திருப்பார். பதிலுக்கு, பானுப்ரியாவுக்கு ஒரு காரை வாங்கி அனுப்பும் மம்மூட்டி, "என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையை காருக்குள் வைத்திருப்பார். மனதை வரும் மெல்லிசையும் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் குரலும் சேர்ந்து மறக்க முடியாத பாடலின் பட்டியலில் இந்தப் பாடலைச் சேர்த்தன.
3. காலமுள்ளவரை (நீ பாதி நான் பாதி): கௌதமியும் ரகுமானும் நடித்த 'நீ பாதி.. நான் பாதி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், மிக வித்தியாசமான இசையுடன் இடம்பெற்றிருந்தது. வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடியிருந்தார்கள். முதல் முறை கேட்கும்போதே பிடித்துப்போகும் இந்தப் பாடல், அந்தத் தருணத்தின் சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்றாக இருந்தது.
4. நிவேதா (நீ பாதி நான் பாதி): ஒரு பாடல் நெடுக, ஒரே ஒரு வார்த்தையை வைத்து மட்டும் உருவாக்கி, அந்தப் பாடலை ஹிட் செய்ய முடியுமா? அதைச் செய்து காட்டினார் மரகதமணி. இந்தப் பாடல் நெடுக கதாநாயகி கௌதமி ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயரான 'நிவேதா' என்ற ஒரு வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப வரும். இருந்தபோதும், சலிப்புத்தட்டாத வகையில் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.
ஆஸ்கர் விருது - கீரவாணி
பட மூலாதாரம்,GETTY IMAGES
5. நன்றி சொல்லிப் பாடுவேன் (சேவகன்): நடிகர் அர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் அவரும் குஷ்புவும் நாயகன் நாயகியாக நடித்திருப்பார்கள். பெண் குரல் ஒலிக்கும்போது சோகமாகவும் ஆண் குரல் சந்தோஷமாகவும் பாடும் இந்தப் பாடல் அந்த சமயத்தில் தேநீர் கடைகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.
6. கம்பங்காடு கம்பங்காடு (வானமே எல்லை): இந்தப் படத்தில் ப்ருத்விராஜும் விசாலி கண்ணதாசனும் இணைந்து பாடுவதைப் போல எடுக்கப்பட்ட இந்தப் பாடல், இப்போது கேட்டாலும் புதுமையாக ஒலிக்கக்கூடியது.. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, மரகதமணியும் சித்ராவும் இணைந்து பாடியிருந்தார்கள்.
7. மறக்கமுடியவில்லை (ஜாதிமல்லி): 1993ல் வெளியான ஜாதிமல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இப்போது எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், இந்தப் படம் வெளியான தருணத்தில் ஒரு மிகச் சிறந்த நினைவெழுச்சி பாடலாக இது இருந்தது. குஷ்புவுக்கும் முகேஷிற்கும் இடையிலான பாடலாக இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் சித்ராவும் பாடியிருந்தார்கள். "மழை ஆடிய எங்கள் வீதியில், அலை ஆடிய தண்ணீர் மேலே/விளையாடிய காகித கப்பல்/ மறக்க முடியவில்லை/ நான் ஆடிய காகித கப்பல்/ தண்ணீரில் மூழ்கும் முன்னே கண்ணீரில் மூழ்கிய சோகம்/மறக்க முடியவில்லை" என்ற வரிகள் பலரால் அப்போது தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டன.