சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை
கடும் மழை காரணமாக சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 அங்குலம் வீதம் 5 வான்கதவுகளை திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் 12 அங்குலம் வரை வான்கதவுகளை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, மகாவலி ஆற்றின் சில பகுதிகளில் நேற்றிரவு (18ஆம் திகதி) இரவு முதல் பெய்து வரும் மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றுப் படுகையின் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.