பாறுக் ஷிஹான்
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பாறூக் ஷிஹான்
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த கடத்தலை நடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாகவும் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கூறியுள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (11) காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியை கடத்திச் சென்று மறைத்து வைத்த இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபாவை மாணவியின் தந்தையான வர்த்தகரிடம் கப்பமாக கோரிய பின்னர் அதனை 30 இலட்சமாக குறைத்துள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனைக் கேட்டு, 02 இலட்சம் வங்கியில் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை 50000 ஆயிரம் ரூபாவை உரிய கணக்கில் வரவு வைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அறியவருவதாவது,
குறித்த கடத்தலை நடத்தியவர் மாணவியின் மைத்துனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பாடசாலை சீருடை அணிந்து தனது தோழியுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் நிறுத்தப்பட்ட வேனில் இருந்து கீழே இறங்கிய உறவினர் அவளை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியுள்ளமை சி.சி. ரீ. வி கெமராக்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்போது, மாணவியை காப்பாற்றுவதற்காக வாலிபர் ஒருவர் வேனில் தொங்கிக் கொண்டு சுமார் 500 மீட்டர் தூரம் சென்று அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சந்தேக நபர் அவரை அடித்து வீழ்த்தியுள்ளார்.
பாடசாலை ஆசிரியர் ஒருவர் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் வேனை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளார் எனவும் கட்டுகஸ்தோட்டை நகரில்வைத்து அவர் வேனை தவறவிட்டதாகவும், பின்னர் பொலன்னறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில், குறித்த வேனை பொலிஸார் நேற்று முன்தினம் (11) பிற்பகல் கண்டெடுத்துள்ளனர்.
கார் வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததால் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவி கடத்தப்பட்டபோது வேனை ஓட்டிச்சென்ற நபர் பொலன்னறுவையில் வேனை கைவிட்டு வீடு திரும்பும்போது தவுலகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய மாணவி, சந்தேக நபரின் தாயின் சகோதரரின் மகள் எனவும், அவருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர், ஜப்பானில் சில காலமாக தொழில் செய்து வருவதாகவும் சந்தேக நபர் மாணவி தரப்பில் விருப்பமில்லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை கண்டுபிடித்த பின்னரே அவர் மூலம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தெளிவான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பிரதேசத்தில் குறித்த மாணவியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் தவுலாகல மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அது மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண கல்வி செயலாளர் சிறிமேவன் தர்மசேன அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண தரம் 11 பரீட்சையை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, தவணைப் பரீட்சைக்கான சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்" என்ற கருத்தின் ஊடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.
இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற இல.03 இல் கௌரவ
குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரரின் சட்டத்தரணிகள், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனையை வழங்குமாறு மன்றாடினர்.
கடந்த 2016ஆம் ஆண்டு சந்தேகநபர் “இஸ்லாம் ஒரு புற்று நோய், அதை அவர் துடைத்தெறிவார்” என்று மேற்கோள் காட்டி வெறுப்புணர்வை ஏற்படுத்திய உரையின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
கிருலப்பனை பொலிஸாரால் நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மூத்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் முதலாவது முறைப்பாட்டாளரின் நலன்கள் கவனிக்கப்பட்ட
பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு கறி பனிஸ்களை ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்துள்ளார்.
அங்கு அவரது இளைய மகன் சாப்பிட்ட கறி பனிஸில் லைட்டரின் உலோகப் பகுதி காணப்பட்டது.
அவ்வேளையில் மஞ்சுள பெரேரா இது தொடர்பில் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த போதிலும், இன்று விடுமுறையில் இருப்பதாக தெரிவித்த அவர், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு தனது பிரச்சினையை தெரிவிக்குமாறும் தெரிவித்தார்.
பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று அவர் இதனைக் கூறியபோதும் தனது முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பி அனுப்பியதாக மஞ்சுள தெரிவித்தார்.
மேலும், இந்த ஹோட்டல் பாணந்துறை மாநகர சபைக்குட்பட்ட ஹோட்டல் எனவும், எனவே இது தொடர்பில் மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் ஒருவர் இடைக்கால பணிநீக்கம்--
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் வெல்லாவெளியில் கொலை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் நீதவானின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று சனிக்கிழமை (4) இiடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது
மாவட்டதிலுள்ள நீதவான்; ஒருவரினன் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற பிணையில் வெளியில் எடுத்து தருவதாக தலா ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபா வீதம் 60 ஆயிரம் ரூபாவை கடந்த நவம்பர் மாதம் 18 ம் திகதி இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களை பிணையில் எடுத்து விடததையடுத்து பணத்தை இலஞ்சாமக கொடுத்தவர் இது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து குறித்த கான்ஸ்டபிளை அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையயத்துக்கு இடமாற்றப்பட்டதுடன் இது தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவினரை விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணித்திருந்தார்.
இதன் போது குறித்த பணத்தை இலஞ்சமாக பெற்றதற்கான ஆதாரத்தை புலனாய்வு பிரிவினர் தேடி விசாரணை செய்து வரும் நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சம் வாங்கியவரின் வங்கி கணக்கிற்கு இலஞ்சமாக வாங்கிய பணத்தை வைப்பிலிட்டுள்ளார். இதனடிப்படையில் இலஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தி பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்
இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய குறித்த பொலிஸ் கானஸ்டபிள்ளை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு அறிவுறுத்தலுக்கமைய உடனடியாக அவரை இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கனகராசா சரவணன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டில் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டியினரால் கொலை குற்றத்தின் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சோபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் நேற்று (2) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சி.ஜ.டியினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது