Showing posts with label Court. Show all posts

 


(கனகராசா சரவணன்) 


மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்கப் போவதாக வந்த கடிதம் கட்டித் தொகுதியை விசேட அதிரடிப்படையினர் மேப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை 


(கனகராசா சரவணன்) 


மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்து  தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட துடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்


குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க போவதாக பொலிசாருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதேரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பபட்டுள்ளதையடுத்து சம்பவதினமான இரவு உடனடியாக பொலிசார் நீதிமன்ற பதிவாளர் நீதவான் உடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியதுடன் கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்


இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படை  குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் மேப்பநாய் சகிதம் கட்டிடப்பகுதியை சுற்றி வெடிகுண்டை தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையினை 8 மணிவரை மேற்கொண்தை தொடர்ந்து நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்   


இதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான  சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில்  இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 



பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து  பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம்


 கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பினை வழங்கி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

 


*நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது  வழக்குப்பதிவு இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது*


இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.

 


மட்டக்களப்பு மேலதிக நீதிபதி அவர்கள்,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதியாக மே மாதம் 2 ந் திகதி முதல் கடமையேற்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.





 


துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

 


தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு பொது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளது. அத்தகைய வழிகாட்டுதலைக் கோரும் பொது நல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 


இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக 6 பிரதிவாதிகள் மன்றில் அறிவித்துள்ளனர்.

 


அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து முஷாரப் எம்.பி தாக்கல் செய்திருந்த மனு நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன , பிரியந்த ஜயவர்தன , அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் நீண்டகாலம் ஆராயப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

 


பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் உள்ள சில ஷரத்துகள் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது; அல்லது SC பரிந்துரைத்த திருத்தங்கள் இணைக்கப்பட்டால், மசோதாவை எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும்

 


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள 13 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

 

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

 

இதேவேளை, தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.



அக்கரைப்பற்று நீதிமன்றிலிருந்து மாற்றலாகி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு2024.01.01 ந் திகதி முதல் செல்லும், அக்கரைப்பற்று மாவட் ஈ நீதவான நீதிமன்ற  கெளரவ நீதிபதி ஹம்சா அவர்களுக்கான பிரியாவிடை இன்று 2023.12.19 அன்நு அக்கரைப்பற்று தனியார் விருந்தகத்தில், இடமபெற்றது.

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களால், ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில், அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி ரிசிபா ரஜீவனும்  கலந்து  சிறப்பித்தார்.

சட்டத்தரணிகளால், கெளரவ நீதிபதி அவர்களுக்கு சேவை நலன் நினைவுப் படிகம் வழங்கி வைக்கப்பட்டது.



கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி தாடி வைத்துக் கொண்டு தனது இறுதியாண்டுக் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டமைக்கு காரணமான பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிராக நேற்று இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.



குறிப்பிட்ட மாணவர் சார்பாக சட்டத்தரணி சுரேன் ஜானராஜ் மற்றும் சட்டத்தரணிகள் றுடானி ஸாஹிர், றஷாட் அஹமட் மேர்வின் தயாளன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 


ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தாடி விவகாரத்தில் இன்னொரு மாணவர் வழக்குத் தொடர்ந்து இடைக்கால உத்தரவொன்று அமுலில் இருக்கும் நிலையில், மீண்டும் பிரதிவாதிகள் தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர் என்ற விடயம் நீதியரசரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவரான ஸஹ்றியை பிரதிவாதிகள் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தும் விரிவுரைகளில் பங்கு பெறுவதைத் தடுத்தும் வந்திருந்தனர்.


 எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவர்கள் பிடிவாதம் அவர்களை விடவில்லை. எந்தவித அடிப்படையும் இல்லாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இப்பேராசிரியர்கள் மீறி உள்ளனர். முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமான தாடி வைப்பதைத் தடுப்பதில் முன் நிற்கின்றனர். வழக்கினை செவியுற்ற நீதிமன்றம் மனுவில் கோரிய இடைக்கால நிவாரணத்தினை உடனே வழங்கியது.


குறிப்பிட்ட நிவாரணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், பேராசிரியர் கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் குறிப்பிட்ட மாணவரை வைத்தியசாலையில் நடைபெறும் Clinical Clarkshipல் பங்கு பற்றுவதில் இருந்தும், களவிஜயங்கள் செல்வதில் இருந்தும் ஏனைய பரீட்சைகளில் இருந்து தோற்றுவதில் இருந்து தடுக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு எதிராக தடை உத்தரவினை வழங்கி உள்ளது. 


இதையடுத்து மாணவர் சஹ்றி மீண்டும் பல்கலைக்கழகம் செல்கிறார்.

 


பாறுக் ஷிஹான்

 

சம்மாந்துறை  பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதமுனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச்.அல் ஜவாஹிர்   சம்மாந்துறை  பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சம்மாந்துறை நீதவான்    ரி.கருணாகரன் முன்னிலையில் திங்கட்கிழமை(04.12.2023) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மரண விசாரணை டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகம் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியினை  இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம்   மொழிபெயர்ப்பு டிப்ளோமா  கற்கை நெறியினை பேராதனைப் பல்கலைக்கழகம்  ஆகியவற்றில் பூர்த்தி செய்துள்ளார்.அத்துடன்   ஒரு ஆங்கில ஆசிரியராகவும்  இவற்றிற்கு மேலதிகமாக 16 வருட கால மொழிபெயர்ப்பாளர் அனுபவமும் அகில இலங்கை சமாதான நீதவானாக சுமார் 14 வருட காலம்  கொண்டவராவார்.றிஸ்லி முஸ்தபா கல்வி மேமம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டு பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்.

 மேலும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் என்பதுடன்
மர்ஹூம் எம்.எம்.அப்துல் ஹமீத்  ஏ.ஆர்.உம்மு சுறையா தம்பதிகளின் நான்காவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 



மாளிகைக்காடு நிருபர்

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த வழக்கில் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் அவரது சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இவர்கள் இடைக்கால தீர்வாக கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க செய்ய வேண்டும் என்பது உட்பட இன்னும் மூன்று நிவாரணங்களை கோரியுள்ளனர்.


இது தொடர்பிலான இடையீட்டு தீர்வொன்று கடந்த மேமாதம் 23ம் திகதி கட்டளையாக பிறப்பிக்கப்பட இருந்த நிலையில் மே முதலாம் வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தை கோரி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இடையீட்டு தீர்வொன்றை வழங்க கூடாது என்று இடையீட்டு மனுதாரர்களும், இடையீட்டு தீர்வை வழங்க கோரி சுமந்திரன் தரப்பினரும் வாதிட்டு பின்னர் தமது பக்க நியாயங்களை எழுத்து மூல சமர்ப்பிப்புக்களாகவும் செய்திருந்தனர்.


இருதரப்பு சமர்ப்பனங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இம்மாதம் 15ம் திகதி இடைக்கால கட்டளையை பிறப்பிக்க இருந்த நிலையில் இன்று (24) வரை ஒத்திவைத்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ பந்துல கருணாரத்ன அவர்கள் தனது தீர்மானத்தை மன்றுக்கு அறிவித்தார். அவரது அறிவிப்பில் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் இடையீட்டு தீர்வை கோரிய மனுவையும் அதற்கு எதிரான மனுவையும், வாதங்களையும் பரிசீலித்து ஆராய்ந்த பின்னர் இந்த இடையீட்டு நிவாரணத்தை நிராகரிப்பதாகவும் அந்த தீர்வை வழங்க முடியாது என்றும் மன்றுக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் சுமந்திரன், கலையரசன் தரப்பினர் நீதிமன்றத்தை கேட்டிருந்த இடைக்கால தீர்வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


அதே நேரம் வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க எதிர்வரும் 2024.01.17ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து கடைசி நேரத்தில் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர முஸ்லிம்களுக்கு ஏற்பட இருந்த இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புக்களின் பிரதானிகளும் கருத்து வெளியிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


நீதிச்சேவை ஆணைக்குழுவினால், கௌரவ நீதிபதிகளுக்கான 2024ம் ஆண்டுக்கான இடமாற்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில், பொத்துவில் நீதிமன்ற நீதிபதி கௌரவ றிஸ்வான் அவர்கள், அக்கரைப்பற்றுக்கு இடாற்றம் பெற்று வருகின்றார்.
 அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி ஹம்சா அவர்கள் மட்டக்கப்பிற்கும் மட்டக்களப்பு கௌரவ நீதிபதி பீற்றர்போல் அவர்கள் பண்டாரவளைக்கும்,பண்டாரவளை நீதிபதி திருமதி ஜீவராணி, திருமலை மேலதிக நீதிவானாகவும், மட்டக்களப்பு மேலதிக நீதிபதி சததாத் அவர்கள் அம்பாரை மேலதிக நீதிபதியாகவும், மட்டக்களப்பு மேலதிக நீதிபதியாக தர்சினி அவர்களும் , பொத்துவில் நீதிபதியாக ஜமீல் அவர்களும்  2024 ஜனுவரி 5 முதல் கடமையேற்கவுள்ளனர்.


 By LAKMAL SOORIYAGODA.

பிரதம நீதியரசருடன் கலந்தாலோசித்து  அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்தின் பேரில் ஜனாதிபதி உயர் நீதிமன்றங்களுக்கு மேற்கொள்ளும் நியமனங்கள், வெறுமனே மூப்பு அடிப்படையில் அல்லாமல் தகுதி மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும் என இலங்கையின் பிரபல சட்ட ஆலோசனைக் குழுவான சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு எதிரான நீதித்துறை அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஒரு அறிக்கையில் கோரியுள்ளது.


ஒரு மேலதிகாரியின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் வழக்கறிஞர் கூட்டமைப்பு தொடர்ந்ததுநீதிமன்ற நீதிபதி மிகவும் தீவிரமான விஷயம். அதேபோன்று, முறையான புகார்கள் இல்லாமல், நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கீழறுப்பதும் சமமாக மிகவும் சிக்கலானது.


"ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் விரைவான, வெளிப்படையான மற்றும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது முக்கியம்.

ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, இவை உண்மையா அல்லது பொய்யா என்பதைத் தீர்மானிக்க நீதித்துறை அதிகாரி

நீதித்துறையின் சுதந்திரம். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மக்களின் இறையாண்மையைப் பேணுவதற்கும் நீதித்துறையின் சுதந்திரம் அடிப்படையானது என்பதை நினைவூட்டுகிறோம்.

அரசியலமைப்பின் 3 மற்றும் 4(c) பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இலங்கையின்", சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு மேலும் கூறியது.


பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையைத் தவிர, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறும் செயல்முறை எதுவும் இல்லை என்று வழக்கறிஞர் கூட்டமைப்பு கவனித்தது.

மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான இடம்.


ஒரு உள் ஒழுங்குமுறையை நிறுவுமாறு உயர் நீதிமன்றங்களை வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது

இந்த நீதிமன்றங்களில் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அமைப்பு

பாராளுமன்றத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது கடைசி முயற்சியின் ஒரு நடவடிக்கையாகும். எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உடனடியாக சரியான முறையில் கையாளப்படுவதையும், கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப்படுவதையும் உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அது மேலும் கூறியது.


ஆர்வத்துடன் முரண்படுதல் அல்லது கடமை தவறுதல் அல்லது தவறான நடத்தை போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும், பகிரங்கமாக குற்றத்தை நிரூபிக்கும் அல்லது உறுதிப்படுத்தும் நம்பகமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியது.


"சில ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பிணைப்பு நெறிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றங்கள் முறையாக வெளியிட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜெஃப்ரி அழகரத்தினம், எம்.ஏ.சுமந்திரன், டினால் பிலிப்ஸ், எஸ்.டி. ஜெயநாகா, எம்.எம். சுஹைர், சட்டத்தரணிகளான பேராசிரியர் சாவித்திரி குணசேகர, பேராசிரியர் தீபிகா உடகம, உபுல் குமாரப்பெரும உட்பட பலர் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

 


தங்களின் சம்பளத்திற்கு புதிய வரிகளை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கங்கள் தாக்கல் செய்த மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த மனுக்கள் இன்று (05) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.


உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட மனுதாரர்கள், முன்பு செலுத்தும் வரி என அழைக்கப்படும் அட்வான்ஸ் தனிநபர் வருமான வரி (APIT) நீதித்துறை உறுப்பினர்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தனர்.


இலங்கை நீதித்துறை சேவை சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகிய மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.