ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
இணையத்தில் 103 நதிகளின் பெயர்களும் தமிழில் கிடைக்கவில்லை. விக்கிமீடியாவிலும் தமிழ் ஆங்கிலம் எந்த மொழியிலும் காண முடியவில்லை. நான் ஆங்கில தளமொன்றில் கிடைத்த தரவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தி இருக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்துவோம்.
1. கழனி கங்கை Kalani Ganga
2. போல்கொட ஏரி Bolgoda Lake
3. களு கங்கை Kalu Ganga
4. பெந்தோட்ட கங்கை Bentota Ganga
5. மது கங்கை Madu Ganga
6. மாதம்பே கங்கை Madampe Gange
7. தெல்வத்தே கங்கை Telwatte Gange
8. ரத்கம ஏரி Ratgama Lake
9. ஜின் கங்கை Gin Gange
10. கொக்கலா ஏரி Koggala Lake
11. பொல்வத்த கங்கை Polwatta Gange
12. நில்வலா கங்கை Nilwala Ganga
13. சினிமோதர ஓயா Sinimodara Oya
14. கிராம ஓயா Kirama Oya
15. ரெகவ ஓயா Rekawa Oya
16. ஒருபொக்க ஓயா Orubokka Oya
17. கச்சிகல் ஆறு Kachigal Ara
18. வளவ கங்கை Walawa Gange
19. காரகன் ஓயா Karagan Oya
20. மலாலா ஓயா Malala Oya
21. எம்புலிகல ஓயா Embulikala Oya
22. கிரிந்தி ஓயா Kirindi Oya
23. பம்பாவா ஆறு Bambawa Ara
24. மகாசிலாவ ஓயா Makasilawa Oya
25. புராவ ஓயா Burawa Oya
26. மெனிக் கங்கா Menik Ganga
27. கடுபிலா ஆறு Katupila Ara
28. கருந்தா ஆறு Karunda Ara
29. நமடகஸ் ஆறு Namadagas Ara
30. கரம்பே ஓயா Karambe Oya
31. கும்புக்கன் ஓயா Kumbukkan Oya
32. பகுரா ஓயா Bagura Oya
33. கிரிகுல ஓயா Girigula Oya
34. ஹலவா ஆறு Halawa Ara
35. விலா ஓயா Wila Oya
36. ஹெடா ஓயா Heda Oya
37. கரந்த ஓயா Karanda Oya
38. செய்மெனா ஆறு Seymena Are
39. தேன்டியாடி ஆறு Teandiadi Are
40. கங்கிகச்சி ஆறு Kangikachchi Ara
41. ரூஃபஸ் குலாம் ஆறு Rufus Kulam Ara
42. பன்னல் ஓயா Pannel Oya
43. அம்பலன் ஓயா Ambalan Oya
44. கல் ஓயா Gal Oya
45. ஆண்டெல்லா ஓயா Andella Oya
46. தும்பன் கேணி தொட்டி Tumpan Keni Tank
47. நமதக ஆறு Namadaga Aru
48. மண்டிபாடு ஆறு Mandipadu Aru
49. பதந்தோப்பு ஆறு Pathantoppu Aru
50. வெடி ஆறு Vedi Aru
51. மகலவடையன்ஆறு Magalavatayan Aru
52. முந்தேனி ஆறு Mundeni Aru
53. மியாங்கொல்ல எல Miyangolla Ela
54. மதுரு ஓயா Maduru Oya
55. புளியன்பொட ஆறு Pulliyanpota Aru
56. கீரிமேச்சி ஓடை Kirimechchi Odai
57. போடிகொட ஆறு Bodigoda Aru
58. மந்தன் ஆறு MandanAru
59. மகரச்சியாறு MaKarachchiaru
60. மகாவலி கங்கை Mahaweli Ganga
61. கண்றாலே ஆறு Kanrale Aru
62. பலபொட்ட ஆறு Palapotta Aru
63. பண்ணா ஆறு Panna Aru
64. பன்குளம் ஆறு Pankulam Aru
65. குஞ்சிகும்பன் ஆறு Kunchikumban Aru
66. பூலாக்குட்டி ஆறு Pulakutti Aru
67. யான் ஓயா Yan Oya
68. மீ ஓயா Mee Oya
69. மா ஓயா Ma Oya
70. சூரியன் ஆறு Churian Aru
71. சாவர் ஆறு Chavar Aru
72. பல்லடி ஆறு Palladi Aru
73. மணலாறு ManalAru
74. கோடலிக்கல்லு ஆறு Kodalikkallu Aru
75. பேராறு PerAru
76. பாலு ஆறு Palu Aru
77. மருதபிள்ளை ஆறு Maruthapillay Aru
78. தொரவில் ஆறு Thoravil Aru
79. பிரமந்தன் ஆறு Piranthan Aru
80. நெத்தலி ஆறு NetheliAru
81. கனகராயன் ஆறு Kanakarayan Aru
82. கல்வளப்பு ஆறு Kalwalappu Ari
83. அக்கராயன் ஆறு Akkarayan Aru
84. மண்டேகை ஆறு MandekaiAru
85. பல்லவராயன் காட்டு ஆறு Pallavarayan kaddu Aru
86. பாலி ஆறு Pali Aru
87. சிப்பி ஆறு Chippi Aru
88. பரங்கி ஆறு Parangi Aru
89. நாயாறு NayAru
90. மல்வத்து ஓயா / அருவி ஆறு Malwattu Oya
91. கல்லாறு Kal Aru
92. மோதரகம ஆறு Modaragama Aru
93. கலா ஓயா Kala Oya
94. மூங்கில் ஆறு Moongil Aru
95. மி ஓயா Mi Oya
96. மதுரங்குளி ஆறு Madurankuli Aru
97. கலகம ஓயா Kalagama Oya
98. ரத்தம்பல ஓயா Rattambala Oya
99. தெதுரு ஓயா Deduru Oya
100. கரம்பலா ஓயா Karambala Oya
101. ரத்மல் ஓயா Ratmal Oya
102. மஹா ஓயா Maha Oya
103. அத்தனகலு ஓயா Attanagalu Oya
104. வழுக்கி(கை) ஆறு
105 .தொண்டைமான் ஆறு
குளங்கள் அல்லது ஏரிகளுடன் இணைந்திருக்கும் ஆறுகள் 64
தற்போதைய ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட 82 தடாகங்களில், 62 பல்வேறு வேளாண் சூழலியல் பண்புகளுடன் (மண், மழை நிகழ்தகவு போன்றவை) உலர் மண்டலத்தில் அமைந்துள்ளன.
இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன.
இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. கலாஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது.
வேதாந்தி சேகு இஸ்ஸடீன் சேர் காலமானார்.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் இன்று தனது 80 வது வயதில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்.
Mohamed Hasan Cegu Isadean (பிறப்பு 12 மே 1944) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதி ஆவார், இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தவிசாளருமான அவர், அந்தக் காலப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தவர், மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் நம்பப்படுகிறார்.
Mohamed Hasan Cegu Isadean (பிறப்பு 12 மே 1944) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதி ஆவார், இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தவிசாளருமான அவர், அந்தக் காலப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தவர், மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் நம்பப்படுகிறார்.
கடந்த 2001-2010 வரையான காலப் பகுதயில், நாடாளுமன்ற உறுப்பினரான, தகவல் ஊடகப் பிரதி அமைச்சராக, கிராமிய ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராகவும் பணிபுரிந்திருந்தார்.
இவர் நாழிறா டீச்சரின் அன்பு கணவரும்
பந்து ( Azuhoor )
மஞ்சு
சூபியா
ஹஸனா (பிரதமரின் பிரத்தியோக செயலாளர்)
ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
ஜனாசா அக்கரைப்பற்று தைக்கா மையவாடியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்களின் விவரங்கள் விரிவாக:
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்)
சர்வஜன அதிகாரம் (SB) - 178,006 வாக்குகள் (1 ஆசனம்)
ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 வாக்குகள் (0 ஆசனம்)
வேறு கட்சிகள் - 945,533 வாக்குகள் (9 ஆசனங்கள்)
தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 61.56% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு, 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அது மொத்த வாக்களிப்பில் 17.66% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 35 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, 5 தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான அனுமதி கிடைத்துள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சி 500,835 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மொத்த வாக்களிப்பில் 4.49% வாக்குகளை சுவீகரித்துள்ளது.
புதிய ஜனநாயக முன்னணிக்கு மொத்தமாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, அந்தக் கட்சிக்கு மொத்தமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சிக்கு 178,006 வாக்குகள் கிடைத்துள்ள பின்னணியில், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. எனினும், கட்சி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,975 வாக்குளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெற்றுக்கொண்டது. ஆனால், அதுதவிர இதர தமிழர் பகுதிகளை தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது.
மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதுடன், இரண்டாவது இடத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், மூன்றாவது இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
அதேபோன்று, மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம் கடந்த முறை காணப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்கள் அடங்கிய தேர்தல் மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் விளங்குகிறது.
கண்டி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்தது. ஆனால், இந்த முறை 2020 தேர்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் காணப்பட்ட நுவரெலியா மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தது. அதோடு, இம்முறை அந்த வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை இம்முறை பெற்றுக் கொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் அப்போது எட்டாவது இடத்தை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
ஆனால், முன்னர் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் கட்சிகள் பெற்ற வாக்கு வங்கியில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மாத்தறை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்த நிலையில், இம்முறை அந்தக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பிடித்துள்ளது. அதேவேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
பதுளை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்தது. ஆனால், அப்போது மூன்றாவது இடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை முன்னிலை வகிக்கிறது.
வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.
எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் வென்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.
மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்குக் கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.
குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்தில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பல ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நேரடி அரசியல் ஈடுபட்டு வந்த நிலையில், இம்முறை தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டார்.
நாமல் ராஜபக்ஸவின் பெயர், தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டதுடன், ஏனைய ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில், ஷஷிந்திர ராஜபக்ஸ மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட போதிலும், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், தேசியப் பட்டியலில் அக்கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இதன்படி, ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், தனது சொந்த மண்ணில் தேர்தல் ஒன்றில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை தேசிய கட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது.
அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.
இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன.
குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.
இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.