Showing posts with label Accident. Show all posts



ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.


பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது.


இவ்விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர், அவர்கள் அனைவரும் காயமடைந்து திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


வி.சுகிர்தகுமார், யதுர்சன்


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூளாவடி சந்திக்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று(15) காலை டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து காஞ்சிரங்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இவ்விபத்தில் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து இடம்பெறவில்லை.
குறித்த வாகனத்தில் பயணித்த தேவகிராமத்தின் பங்குத்தந்தை ஒருவரும் இரு அருட்சகோதரிகளும் இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.
அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெறுகின்ற ஆராதனை வழிபாட்டிற்காக சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் குறுக்காக சென்ற மோட்டார் சைக்கிளுக்;கு வழிவிட எத்தணித்த நேரம் குறித்த வாகனத்தில் டயர் காற்றிழந்து வெடித்த காரணத்தினால் வான் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 அக்கரைப்பற்று  யூனியன் வீதியினால் வந்த கார் பிரதான வீதியைக் கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காரின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது


 சற்றுமுன் பெரிய கல்லாற்று பாலத்தடியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன

இதில் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என தகவல்.

 



அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



. வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம் லொறி சாரதி கைது-- 



(கனகராசா சரவணன்)


வாழைச்சேனை பொலனறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சேற்று புதன்கிழமை 94) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.



புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய  கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலனறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மச்சக்கரவண்டியில் பிரயாணித்த 65 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.



இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த  நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்  ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறிசாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 



இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 



ஜே.கே.யதுர்ஷன்


விநாயகபுரம் பிரதான வீதியில் வாகன விபத்து ..... 


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில்  கார் விபத்து இடம்பெற்றுள்ளது.... 


குறித்த விபத்தானது  2024/12/05 ஆதாவது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....


மேலுக் இவ் விபத்தானத அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பயத்த சொகுசு கார் ஒன்று விநாயகபுரம் பிரதான வீதியில் தொலைதொடர்பு மின் கம்மத்தில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.....இவ் விபத்தில் குறித்த கார் சேதமடைந்ததுடன் அவ் பகுதியில் கடைஒன்றில்  நிறுத்தி வைக்கப்பட்டிந்த மோட்டார் சைகிள்களும் இவ் விபத்தில் சேதடைந்துள்ளது....


இவ் விபத்து பற்றிய மேதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்....


ஜே.கே.யதுர்ஷன்




பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்  உயிரிழந்துள்ளனர்.

 அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை(21)  இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்   பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.சம்பவ தினமன்று  வேகமாக  நண்பர்களுடன்  மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில்  அம்மாணவன் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும்  18 வயதுடைய பாரூக் முஹம்மது சீத்  என அடையாளம் காணப்பட்டார்.அத்துடன் இவரது சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திடிர் மரண விசாரணை அதிகாரியின் பிரசன்னத்துடன் மரண விசாரணை இடம்பெற்று  உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.இது தவிர சடலத்தின் பாகங்கள்  மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு   அனுப்பி வைக்கப்பட்டன.

இது தவிர சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (21) மாலை வீதியில் சென்ற மாடு ஒன்றுடன்  மோதலை தவிர்ப்பதற்காக   மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  23 வயது மதிக்கத்தக்க மதன் பவி லக்சான் இளைஞன் அருகில் இருந்த  மின்கம்பத்துடன் மோதி  படு காயமடைந்தார்.பின்னர் சிகிச்சைக்காக  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்   சிகிச்சை பலனின்றி  அங்கு உயிரிழந்திருந்தார்.கிராம சேவகரது மகனான இவ்விளைஞன்  வீடு திரும்பும் வழியில்  இந்த விபத்த்திற்கு முகம் கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலத்தை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்   பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டதுடன்  உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.பின்னர் குறித்த பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பதுளை, டன்ஹிந்தவில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

 


திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் மற்றும் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

 



ஏ. ஷபாஅத் அஹமட் -

சற்று நேரத்திற்கு முன்னர் நிந்தவூரைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நிந்தவூரை நோக்கிச் சென்றிருந்த வாகனம் கல்முனையில் வைத்து விபத்தில் சிக்கியது.
இச்சம்பவம் கல்முனை பிரதான வீதியில் "அல்தாப்f ஹோட்டலுக்கு" முன்பாக நடுவீதியில் அமைக்கப்பட்டிருந்த பூச்சாடியுடனான தடுப்பொன்றில் மோதுண்டபோது நடைபெற்றது.
வாகனத்தின் முன்பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அவர்கள் வேறு ஒர் வாகனத்தின்மூலம் நிந்தவூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று திரும்பியவேளையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

 



அக்கரைப்பற்றில் இருந்து காலிக்கு அரிசி ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

லொறியின் முன் இடது சக்கரத்தின் காற்று வரம்பு மற்றும் வாகனத்தை சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் லொறி வீதியை விட்டு கவிழ்ந்ததில் இன்று (24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 



நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் கிளிநொச்சியில் விபத்தில் சிக்கியதில் ஒருவருக்கு படுகாயம்.

 

#STT/Trends

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


கல்முனை அம்பாறை பிரதான வீதியில் வங்களாவடி எனும் இடத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன் போது உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது .



 



மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர்கள் புத்தல மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒலுவில்  எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.


கல்முனையில் இருந்து வந்த சொகுசு பஸ்யுடன் அக்கரைப்பற்றில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான ஆரியவதி கலபதி அவர்களுடைய மகன் விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) இயற்கை எய்தியுள்ளார்.


 மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுடன் தாய், தந்தை முச்சக்கரவண்டியில் சம்பவ தினமான இரவு 7 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க விளக்கு பழுதடைந்துள்ளதையடுத்து பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை சிறுவனின் தந்தை சரி செய்துகொண்ட நிலையில் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் வீதியின் குறுக்கே கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வேன் ஒன்று சிறுவனை மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வேன் சாரதியை கைது செய்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.