போசாக்கான உணவு வழங்கும் செயற்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் !




 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் சம்பந்தமான  கலந்துரையாடல் சாய்ந்தமருது  உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் போன்றோர் பங்குபற்றினர்.  

எதிர்வரும் காலங்களில் போசாக்கான உணவுகளுக்கான வவுசர்கள் வழங்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய சுகாதாரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரத்துக்கு கேடான வகையில் அமையப்பெறும்  நிலையில் காணப்படுமாயின்  சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் இதன்போது தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டது.