விஷேட கலந்துரையாடல்




 


பாறுக் ஷிஹான்


ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி Mr. Marc-André Franche மற்றும் குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்கிழமை (01) பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாகவும்  விரிவாக தெளிவுபடுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.