"பிரசவம்"




 


( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை  நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய "பிரசவம்" என்ற  கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு இன்று (6)   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

 கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற இருக்கிற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் 
கலந்து சிறப்பிக்கிறார்.

 சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண உதவிக்காணி ஆணையாளர் கே எல்எம். முஸம்மில் பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் உள்ளிட்ட பல  அதிதிகள் கலந்து சிறப்பிக்கிறார்கள் .

நூல் நயவுரையை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தவிருக்கிறார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவு போதனாசிரியராக அரச கடமை ஆற்றும் சதானந்தன் ரகுவரனின் முதலாவது இலக்கிய படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.