நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரஸின் சார்பில் வீரமுணை வட்டார வேட்பாளராக போட்டியிடும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதவாளர்கள் திங்கட்கிழமை இரவு தாக்கியாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் தாக்கப்பட்டமை தொடர்பில் எமது செய்தியாளர் நூருல் ஹுதா உமரிடம் கருத்து வெளியிட்ட சஹீல், தனது அலுவலகத்தின் முன்னால் தனது ஆதரவாளர்கள் சகிதம் தான் இருந்தபோது சம்மாந்துறை பிரதேச சபையில் ஏனைய வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அவரின் ஆதரவாளர்களும் எனது காரியாலயத்திற்கு வந்து காட்டுமிராண்டித்தனமாக என்னையும் எனது சகோதரரையும் தாக்கினார்கள். இதனால் எனது சகோதரருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் நானும் தாக்கப்பட்டுள்ளேன். எனது அலுவலகமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த அராஜக அரசியலை ஒழித்து காட்டவே நாங்கள் தேசிய காங்கிரசில் தேர்தல் கேட்கிறோம். இந்த அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார். தாக்குதலுக்குள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் உட்பட தேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்றிரவே விஐயம் செய்திருந்தனர்.
Post a Comment