நூருல் ஹுதா உமர்
கிராமிய பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக வேள்வி பெண் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கற்றாழை பயிர் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஆரம்பம் நிகழ்வு கல்முனை வை.எம்.சி.ஏ.கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
வேள்வி ஒன்றியத்தின் தவிசாளர் ரிலீபா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவருமாகிய ஏ.ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இயற்கை உணவின் முக்கியத்துவம், பெண்களின் சுயதொழில் அபிவிருத்தி பற்றியும் தெளிவுபடுத்தினார்.
அதே போன்று அரசாங்கத்தின் ஊடாக பெண்களின் சுயதொழில் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி உதவிகள் பற்றியும், அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினர்.
இந் நிகழ்வில் மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் எம்.ஐ.றியால், வேள்வி ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் எம்.எம். முர்ஷித், VCP நிறுவன பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெறவுள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.
இத் திட்டத்தின் ஊடாக சுமார் 2500 பெண்கள் வாழ்வாதார ரீதியாக பயனடைவுள்ளதுடன். இவர்களை கண்காணிப்பதற்காக 25 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்
Post a Comment