நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்




 


நூருல் ஹுதா உமர்


நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு வருடாந்தம் நடைபெறும் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய நோன்புப் பெருநாள் நிகழ்வு பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை பணியாட்குழுவினரின் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் முகமாக வீடுகளில் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு அதிதிகள் மற்றும் பணிக்குழுவினருக்கான விருந்தோம்பல் நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கல்விப் பணிமனையின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. என். வரணியா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.என்.ஏ.மலீக், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ஏ.அஸ்மா மலீக், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர் ரவீந்திரகுமார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.