நீரில் மூழ்கிய சிறுவர்கள் வைத்தியசாலையில்




 


நீரில் மூழ்கிய காவத்தமுனை சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வாழைச்சேனை - நாசிவன்தீவு கடலில் நீராடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (4) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுகளுடைய இரு சிறுவர்களே இவ்வாறு நீராடும் போது கடலில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கிய சிறார்களை இளைஞர்கள் நீந்திச் சென்று காப்பாற்றியுள்ளனர்.
நீரில் மூழ்கிய இரு சிறுவர்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.