சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சை குழு 3 அலுவலகம்





பாறுக் ஷிஹான்
 
சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சை குழு 3 அலுவலகம் திறந்து வைப்பு


2025  ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சைக் குழு 3 அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு உத்தியோக பூர்வமாக சிப்கா சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகரும் சுயேட்சைக் குழு தலைவருமான எஸ்.எல்.ஏ நஸார்  மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான யு.எல்.அஸ்பர் ஜே.பி  ஆகியோரால்  நாடா வெட்டி  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது நிகழ்வில்    கிறாஅத் ஓதப்பட்டதுடன் அறிமுக உரையினை இச்சுயேச்சை குழுவின் ஊடக செயற்பாட்டாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர்  எம்.சி. அஹமட் புர்கான்  ஜே.பி  மேற்கொண்டார்.


பின்னர் தொடர்ந்து வேட்பாளர் அறிமு கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று ஸலவாத்துடன் நிகழ்வ யாவும் நிறைவடைந்தன.

மேலும் சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வானொலி பெட்டி விளங்கும் என சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சைக் குழு 3 வின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை மண்ணும்இ மக்களும் இன்று ஏதிலிகளாக உள்ளார்கள். காரணம் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் எமது மண்ணையும்இ மக்களையும் தொடர்ந்தேச்சையாக ஏமாற்றி வந்துள்ளார்கள். இனியும் ஏமாற்ற காத்திருக்கின்றார்கள்.எமது மண் மாட்சி பெற வேண்டும். எமது மக்கள் மீட்சி பெற வேண்டும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட வேண்டி உள்ளது. ஆகவேதான் எமது மண்ணையும்இ மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற சமூக நோக்கத்தை முன்னிறுத்தி பிரதேச சபைக்கு சுயேச்சையாக போட்டியிடுகின்றோம்.சம்மாந்துறை தொகுதி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய கூடிய அளவுக்கு வாக்கு வலிமையை கொண்டது. ஆனால் சம்மாந்துறை தொகுதிக்கு அண்மைய காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்ச்சியாக கிடைப்பதாக இல்லை.

ஆனால் எமது மக்களின் வாக்குகளை வைத்து வேறு தொகுதிகளை சேர்ந்தவர்கள் எம். பிகளாக வருகின்றனர். அவர்கள் எமது மண்ணையும்இ மக்களையும் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி.அந்த அரசியல்வாதிகள்தான் நாம் இன்று தேர்தல் கேட்பதற்கான காரணம் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையில் இருந்து மாற்றம் உருவாக வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கிற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும்.

நாட்டு மக்கள் ஒருமித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். அதே போல சம்மாந்துறை பிரதேச மக்கள் ஒருமித்து வானொலி பேட்டிக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் எம்மால் பிரதேச சபையில் ஆட்சியை உருவாக்கி நடத்தவும் முடியும் என சுயேச்சை குழு - 03 இன் தலைமை வேட்பாளர் சமூக சேவையாளர் எஸ். எல். ஏ. நஸார் தெரிவித்தார்.

எமது சம்மாந்துறை மண்ணினதும் அதன் மக்களினதும் பூர்வீகம்இ இறைமைஇ பண்பாடுஇ கலைஇ கலாச்சாரம்இ நாகரீகம்இ போன்ற இன்னோரன்ன எமது மண்ணுக்கே உரித்தான தனித்துவ அடையாளத்தை நமது எதிர்கால சந்தியிளருக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பும் தார்மிகக் கடமையும் என்றென்றும் நமக்கான பணியாகும்.'மாற்றமில்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லைஸி' என்ற துார நோக்குடனான புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் உருவாக்கி அதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டியுள்ளது.கடந்த பொதுத் தேர்தலில் மைது சம்மாந்துறை   கற்றுக்கொண்ட பாடமும் பெற்றுக் கொண்ட தோல்வியும் நம்மை வழிநடாத்திய பேரினவாத கைக்கூலிகளுக்கும் தனித்துவ அரசியல் பேசிய தரகர்களுக்கும் இப்பிரதேச சபைத் தேர்தலின் மூலமாக நிச்சயமாக பாடம் கற்பித்தேயாக வேண்டும்.அந்தவகையில் சமூக சிந்தனையும்இ துணிச்சலும்இ ஆளுமை மிக்கவர்களையும் இப்பிரதேச சபைத் தேர்தலில் களமிறக்கி இருக்கின்றோம். உங்கள் ஆதரவை எமக்கு வழங்குகின்ற போது எம்மால் அதனை திறன்பட செய்துகாட்ட முடியுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான யு.எல்.அஸ்பர் ஜே.பி குறிப்பிட்டார்.


சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றினால் கொத்தராத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து துாரநோக்குடனான வேலைத்திட்டங்களை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகாரிகளை தனது கை பொம்மைகளாக வைத்திருந்த எமது முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்குட்பட்ட அரச காணிகள் இனங்காணப்பட்டு அவற்றை நிரந்தர வதிவிடம் இல்லாமல் ஒத்துக்குடியாட்டமாக வாழ்து கொண்டிருப்பவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஊடாக மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் குடியிகுப்புக் காணிகள் மற்றும் நிரந்தர வீடுகளை அமைந்துக் கொடுப்பதற்கான வேலைத் திட்டம் முன்னெடக்கப்படும்.

செந்நெல் கிராமத்தில் அரை குறையாக தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள பொதுச் சந்தையை பூரணமாக அமைத்து பொது மக்களிடம் கையளித்தலுடன் அதிக விலை கொடுத்து மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு அவதியுறும் மக்களுக்காக  அரச மருந்தகமான (ஒசுசல என்ற அரச மருந்து விற்பனை நிலையத்தினை சம்மாந்துறையில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எம்மால் நடவடிக்கை எடக்கப்படும்.முழு இலங்கையிலும் போதையற்ற பிரதேசம் சம்மாந்துறையே என்ற நன்மதிப்பை எமது மண்ணுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம் என  சுயேச்சை குழுவின் ஊடக செயற்பாட்டாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர்  எம்.சி. அஹமட் புர்கான்  ஜே.பி தெரிவித்தார்.