கிழக்கில் ISO 9001 சான்றிதழை பெற்று டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை






 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் ISO 9001 சான்றிதழை பெற்ற ஒரேயொரு தனியார் வைத்தியசாலையாக கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் தலைமையிலான சிறந்த நிருவாகத்தின் கீழ் இங்குள்ள நவீன ஆய்வுகூடம் திகழ்கிறது. அங்கு சர்வதேச தரத்திலான சுமார் 1000 பரிசோதனைகள்  சேவையாக வழங்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஐஎஸ்ஓ ISO 9001 சான்றிதழ் பெற்ற,  நவீன ஆய்வுக்கூடமுள்ள ஒரேயொரு தனியார் வைத்தியசாலையாக டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டதையொட்டி,  அதனை மக்களுக்கு அறிவித்து பிரகடனப்படுத்தும்  நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் மருத்துவர் எம்.ஜே.சட்.எம்.ஜலால்டீன்  தலைமையில் நடைபெற்றது .
 
அது தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டதுடன், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நவீன ஆய்வுகூடப் பணிப்பாளர் கலாநிதி.ஆகிப் அதற்கான பூரண விளக்கத்தை வழங்கினார்.

இந் நிகழ்வில் 
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர்  மற்றும் ஏ. ஆதம்பாவா ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கூடத்தை பார்வையிட்டனர் . ஆய்வுகூட உத்தியோகத்தர் செல்வி.நிவே விளக்கமளித்தார்.

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கிளைகள் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலும் உள்ளன.