லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் விமான நிலையம் முழுமையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக விமான நிலையத்துக்கான மின்சார விநியோகம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையின் காரணமாக விமான நிலையத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமான நிலையமானது உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகக் காணப்படுவதோடு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளதால், 1,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பயணிகளும் நெருக்கடியை சந்தித்துள்ளனா்.
விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை பயணிகள் எந்த சூழ்நிலையிலும் விமான நிலையத்திற்கு பயணிக்கக்கூடாது என்றும் மேலதிக தகவல்களுக்காக தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் மேலும் அறிவித்துள்ளனா்
Post a Comment