அம்பாரை மாவட்டத்திலும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் எச்சரிக்கை




 


பாரிய மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் இந்த அறிவித்தல் பொருந்தும் என்பதுடன், அந்தப் பகுதிகளில் மழையுடன் பாரிய மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அவதானம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.