கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலகம் நடாத்திய "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு(2024) கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.பெளசுல் ஹிபானாவின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளில் தலைமையில் கல்முனையில் இன்று(06) நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக பிரிவில்,சாஹூல் ஹமீட் செய்னுல் கதீர்(எழுத்தாளர்),சுமைய்யா ஜெஸ்மி மூஸா(பல் துறை கலைஞர்),முகம்மது யாஸீன் முகம்மது சுபியான் (பொல்லடிக் கலைஞர்) ஆகிய மூன்று கலைஞர்களுமே "சுவதம் விருது"வழங்கி கெளரவிக்கப்பட்டனர். பரிசு,சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,கெளரவ அதிதியாக கலந்து கொண்ட அம்பாரைமாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஸான் ஆகியோர்களால் "கலைஞர் சுவதம்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட சிரேஸ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எஸ். எம்.நெளபல்,கிராம அபிவிருத்தி உத்தயோகத்தர் ஏ.ஏ.ஜாபீர், அபிவிருத்தி உத்தியோகத்தகர் ஏ.எச் .ஜெமீல்,கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம்.நபீல்,மனித வள முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ. எல். எம்.சபீக் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலகத்தில் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளராக பணியாற்றும் மருதமுனையை சேர்ந்த ஏ.ஆர்.எம். சாலிஹ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி தனது 60ஆவது வயதினை பூர்த்தி செய்து, அரச சேவையிலிருந்து ஓய்வு நிலைக்கு செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் நினைவு சுவடுகள் எனும் நூல் அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஸான் ,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.பெளசுல் ஹிபானா ஆகியோருக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
M.N.M.Afras
0772961631
jounulist
Post a Comment