யோஷித மனைவியுடன் பொலிஸ் நிலையத்தில்...





 கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்  வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.


கொழும்பில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன்பு இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவினர் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இரவு நடந்ததாகவும், அதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆரம்ப விசாரணைகளில் யோஷித ராஜபக்ஷ நேரடியாக இந்த மோதலில் ஈடுபடவில்லை என்று தெரியவந்தாலும், அவருடன் வந்த சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், யோஷித மற்றும் அவரது மனைவி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.