சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட சொற் பிரயோகங்கள் மற்றும் அவமதிப்பு தொடர்பில் பாராளுமன்றம் கவனம் செலுத்தவேண்டுமென அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (17) காலை சபையில் கோரிக்கை விடுத்தார்.
விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் பிமல், பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
'பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சட்டத்தரணி சுவஸ்திகா மீது ஆபாச ரீதியில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.சபாநாயகர் இதுவிடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற சொற்பதங்களை ஹன்ஸார்ட்டில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார் அமைச்சர் பிமல்.
Post a Comment