ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.
ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.
பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.
ரமலான், ஈத், இஸ்லாம், நோன்பு, முஸ்லிம்கள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இஃப்தாருக்கு முகமது நபி காலத்தில் இருந்தே நோன்பை முடிக்க பேரீட்சை சாப்பிடுவது பொதுவான தேர்வாக இருந்து வருகிறது
ஸஹர் மற்றும் இஃப்தார் என்பது என்ன?
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது.
அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.
இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பலரும் இதை பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) நேரத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்.
ரமலான் நோன்பின் போது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் சத்துகளையும் பெற புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை ஸஹரில் உண்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். போதிய அளவு தண்ணீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, இஃப்தாருக்கு முகமது நபி காலத்தில் இருந்தே நோன்பை முடிக்க பேரீட்சை சாப்பிடுவது பொதுவான தேர்வாக இருந்து வருகிறது. குடும்பத்துடன் வீடுகளில் அல்லது மசூதிகளில் ஒன்று கூடி, இஃப்தார் மூலம் நோன்பு திறப்பது ஒரு வழக்கமாக உள்ளது.
கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்
26 பிப்ரவரி 2025
தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
26 பிப்ரவரி 2025
ரமலான் நோன்பு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
ரமலான், ஈத், இஸ்லாம், நோன்பு, முஸ்லிம்கள்பட மூலாதாரம்,Getty Images
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்." என ரமலான் நோன்பு குறித்து குர்ஆனில் (ஸூரத்துல் பகரா, 2:183) கூறப்பட்டுள்ளது.
"இந்த ரமலான் மாத நோன்பில், ஸஹர் முதல் இஃப்தார் வரை, சாப்பிட, குடிக்க மட்டுமல்ல, உடலுறவு கொள்வது, பொய் சொல்வது, பாவச் செயல்கள் செய்வது, சண்டையிடுவது போன்ற அனைத்து செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதை மீறினால், அவர்களது நோன்பு ஏற்கப்படாது." என்கிறார் மௌலானா சம்சுதீன் காசிம்.
பல முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில், முடிந்தவரை குர்ஆனைப் படித்து முடிக்க முயற்சிப்பார்கள்.
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக, ரமலான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தின் லைலத்துல் கத்ர் எனும் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறினாலும், அது குறிப்பாக எந்த நாள் என்பது தெரியவில்லை. ஆனால், ரமலான் மாதத்தின் 27வது இரவு இஸ்லாமியர்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.
இஸ்லாம் மதத்தின் வரலாற்றில் முக்கிய போராக கருதப்படும் பதுருப் போரும் (கி.பி. 624) ரமலான் மாதத்தில் தான் நடைபெற்றது.
"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்." என்று இஸ்லாமியர்களின் ஹதீஸ் (புகாரி- 1899) எனப்படும் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
பல முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில், முடிந்தவரை குர்ஆனைப் படித்து முடிக்க முயற்சிப்பார்கள். ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான மாதமாகவும் ரமலான் கருதப்படுகிறது.
பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்
26 பிப்ரவரி 2025
'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்
28 பிப்ரவரி 2025
ரமலான் நோன்பின் வரலாறு என்ன?
முகமது நபியின் ஹிஜ்ரத் அதாவது மெக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த (கி.பி. 622) இரண்டாம் ஆண்டு அதாவது கி.பி. 624 இல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது அல்லது கட்டாயமாக்கப்பட்டது.
அன்று முதல் உலகம் முழுவதும் எந்த மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நோன்பானது ஃபர்ஸ் (கட்டாயம்) ஆக்கப்பட்ட ஆண்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 622 ஆம் ஆண்டில் முகமது நபி, ஸஹாபி (தோழர்கள்) உடன் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்தார்.
இஸ்லாத்தில் இது ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் நடந்த தேதியிலிருந்து, முஸ்லிம்களின் ஆண்டு எண்ணும் பணி தொடங்கியது.
ஹிஜ்ரியின் இரண்டாம் ஆண்டில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மத நூலான குர்ஆனால் கட்டாயமாக்கப்பட்டது அல்லது கடமையாக்கப்பட்டது என்று இஸ்லாமிய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாத்தில் யாரெல்லாம் நோன்பு நோற்கத் தேவையில்லை?
ரமலான், ஈத், இஸ்லாம், நோன்பு, முஸ்லிம்கள்பட மூலாதாரம்,Getty Images
இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், சில விதிவிலக்குகளும் உண்டு.
1) குழந்தைகள் - பருவமடைவதற்கு முன்பு அவர்கள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை.
2️) வயதானவர்கள் - உடல் பலவீனமானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்கள் அதற்கு பதிலாக ஃபித்யா (தர்மம்) கொடுக்கலாம்.
3️) நோய்வாய்ப்பட்டவர்கள் - தற்காலிக நோய் என்றால், அதிலிருந்து மீண்ட பிறகு நோன்பு வைக்கலாம். நாள்பட்ட நோய் என்றால் ஃபித்யா கொடுக்கலாம்.
4️) கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் - நோன்பு வைப்பதால் அவர்களுக்கு அல்லது குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்படுமானால், தவறவிட்ட நோன்புகளை பின்னர் ஈடு செய்யலாம் அல்லது ஃபித்யா கொடுக்கலாம்.
5️) பயணிகள் (முசாஃபிர்) - 80 கி.மீ.க்கு மேல் பயணம் செய்பவர்கள் நோன்பைத் தவிர்த்துவிட்டு, பின்னர் அதை ஈடு செய்யலாம்.
6️) மாதவிடாய் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் - நோன்பு நோற்கத் தேவையில்லை, தவறவிட்ட நோன்புகளை பின்னர் ஈடு செய்யலாம்.
காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?
ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?
ரமலான், ஈத், இஸ்லாம், நோன்பு, முஸ்லிம்கள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வானில் பிறை (சந்திரனின் முதல் பிறை) தென்படுவதைப் பொறுத்து, ஈகைத் திருநாள் முடிவு செய்யப்படுகிறது
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு 'ஈத் அல்-பித்ர்' (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுக்கிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.
வானில் பிறை (சந்திரனின் முதல் பிறை) தென்படுவதைப் பொறுத்து, இந்த நாள் முடிவு செய்யப்படுகிறது. ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை வேறுபடலாம்.
ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகைகள் அதிகாலை முதலே நடத்தப்படும், இந்த தொழுகைக்கான நேரமும் மாறுபடும். புத்தாடைகள் அணிந்து மசூதிகளில், திடல்களில் அல்லது மைதானங்களில் நடைபெறும் தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள்.
ரமலான், ஈத், இஸ்லாம், நோன்பு, முஸ்லிம்கள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது
உலகம் முழுவதும் ரமலான் எப்படி கொண்டாடப்படுகிறது?
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில், ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது, புபுர் லம்புக் எனப்படும் மசாலா அரிசி புட்டு உண்ணப்படுகிறது.
மலேசியா, புருனே, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் ஈத் திருநாள், ஹரி ராயா (Hari Raya) என்று அழைக்கப்படுகிறது. ஹரி ராயாவைக் கொண்டாடும் முஸ்லிம்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளுக்கு வரும் குழந்தைகள் மற்றும் விருந்தினர்களுக்கு பச்சை உறைகளில் பணத்தை பரிசாக வழங்குகிறார்கள்.
ஈத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்' என வாழ்த்து கூறி, மூன்று முறை தழுவிக் கொள்வதைக் காண முடியும்.
அதன் பொருள் 'ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் அல்லது ரமலான்' என்பதாகும். அது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.
ஈத் முபாரக் போல வெவ்வேறு வகையான வாழ்த்துகள் உள்ளன. உதாரணமாக நைஜீரியாவில், மக்கள் 'பல்லா டா சல்லா' (Balla da Sallah) என்று சொல்வார்கள்.
மலேசியாவில் ஒருவருக்கு ஈத் வாழ்த்து தெரிவிக்க, 'செலமத் ஹரி ராயா' (Selamat Hari Raya) என்று கூறுவார்கள்.
Post a Comment