புனித ரமழான் 27வது ரமழான் நோன்பைச் சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகள் நேற்று இரவ துவங்கி இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.
நேற்று இரவு 8:45க்கு ஆரம்பித்து இன்று அதிகாலை மூன்று மணிவரை இரவு நேரத் தொழுகை, வழிபாடுகள், துஆப் பிரார்த்தனை, பாவமன்னிப்பு போன்றவையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி தேனீர் உட்பட, நோன்பு நோற்பதற்கான (ஸஹர்) அதிகாலை உணவும் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலின் நிருவாக சபையினர், இதனை மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment