கண் வில்லைகள் கையளிப்பு




 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக ஒரு தொகை கண் வில்லைகள் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வெள்ளிக்கிழமை  (14) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் டீ.பிரபா சங்கர் அவர்களிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.