சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு





 பாறுக் ஷிஹான்


 சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில்  முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் அண்மையில்  நடைபெற்றது.

இதன்போது மாணவர்களின் போசாக்கு, அளவிடப்பட்டு உடற் திணிவுச் சுட்டென் (BMI) கணிப்பு, உயரத்திற்கேற்ற நிறையின் அவசியம், வாய்ச் சுகாதாரம் தொடர்பான கருத்தாடல்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலய  முன்பள்ளி இணைப்பாளர்  சாஜித் பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்   பாடசாலை பற் சிகிச்சையாளர் பொதுச்சுகாதார பரிசோதகர்ஆகியோர் கலந்து கொண்டனர்.