உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை




 


பாறுக் ஷிஹான்)


நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய இன்று பொதுமக்களிடமிருந்து  கிடைக்கப்பெற்ற பல்வேறு  முறைப்பாட்டிற்கமைய   உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய  சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கமைய  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி   வழிகாட்டலில்  சென்ற மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான சுகாதார குழுவினர் இச் சோதனையில்  ஈடுபட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இதன் போது  பழக் கடைகள்,  பலசரக்குக் கடைகள்,  நோன்பு திறப்பதற்கான (இப்தார்) சிற்றுண்டி  விற்பனை நிலையங்கள், வெளிநாட்டு இனிப்புப் பண்டங்கள் விற்பனை நிலையங்கள், என 13 உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதன் போது காலாவதியான பொருட்கள்  சுட்டுத் துண்டு இல்லாத பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்  பாவித்த சமையல் எண்ணெய்  என்பன  கைப்பற்றப்படதுடன் சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.