வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி; ஜனாதிபதிக்கு ஓர் மடல் எனும் அடிப்படையில் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் மாதிரி மற்றும் இல்மனைட் அகழ்வு போன்றவற்றுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரையில் சரியான தீர்வு இல்லா நிலையில் இக்கவனயீர்ப்பு நேற்று முன் (25)முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் , தாண்டியடி, உமிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களினால் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கு தபால் மடல் அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையினை முன்வைப்பராயின் திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் இல்மனைட் அகழ்வு எதிராக வீதிக்கு இறங்கி போராட முன்வருவர் என பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இக்கவனயீர்ப்பில் பொதுமக்கள் மற்றும் சமுக அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மடல் அனுப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன் திருக்கோவில் தபால் நிலையத்தில் தாபால் பெட்டியில் மக்களால் தபால் அட்டைகள் இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது....

Post a Comment