தாண்டியடி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில்




 


ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் 2025...


அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினரால் பாடசாலை மட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது...


ஜே.கே.யதுர்ஷன்


அந்த வகையில் நேற்றைய தினம்  242 இராணுவ படைப்பிரிவின் தலைவர்  கேர்னல் GRT. களேக்கோரலே , RSP சிறேஷ்ர அதிகாரி மேஜர் E.D.S.K தெனியாய அவர்களின் வழிகாட்டலில் திருக்கோவில் வலயக்கல்லி பிரிவுக்குட்பட்ட தாண்டியடி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் காஞ்சிரன் குடா இராணுவத்தினரால் கிளீன் ஸ்ரீ லங்கா வேனலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.....


இவ் நிகழ்வில் காஞ்சிரன் குடா இராணுவ படைப்பிரிவின் 08வது  இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் இரண்டாம் உத்திரவு அதிகாரி மேஜர் GR.ஹேவானாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....


இன் நிகழ்வானது வேன் வாத்திய மூழக்கங்களுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது .....


மேலும் இன் குறித்த  நிகழ்வில்  பாடசாலை நடன ஆசிரியர் வினோதினி அவர்களின் நெறிப்படுத்தலில் ஆன வரவேற்பு நடமும் இடம்பெற்றதுடன் கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டபற்றிய பாடசாலை மாணவர்களினால் நாடகம் ஒன்றும் இடம்பெற்றது...


இன் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில்  கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.T.உதயகுமார் பிரதிக்கல்வி பணிப்பாளர் கே.பிரபாகரன் பாடசாலை அதிபர் திரு.S.தர்மசீலன் பிரதி அதிபர் தயாரூபன் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார் அதிகாரிகள் மாணவர்கள்  பெற்றோர் பாடசாலை அபிவிருத்தி குழுவினர்   இராணுவ அதிகாரிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.....


மற்றும் இராணுவத்தினரால் பாடசாலை சுற்று சூழல் துப்பரவு பணியும் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....