கடலில் தரித்திருந்த படகு மூழ்கியுள்ளது-கல்முனையில் சம்பவம்




 


பாறுக் ஷிஹான்

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த  பாரிய  படகு ஒன்று  இன்று (18) காலை கடலில் மூழ்கியுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த படகினை மீட்டு    கடற்கரைப் பகுதிக்கு  இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

குறித்த  படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு  இயந்திரம் உட்பட வலைகளுடன்  கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.இவ்வாறு மூழ்கிய    படகு சுமார் 65 லட்சத்துக்கும் பெறுமதியானதுடன்  கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.இன்று குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர்  குறித்த படகு முழ்குவதை   இனங் கண்டு  ஏனையோருக்கு   தகவல் வழங்கியதை  தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற  பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.

காரணமாகும் என  பிரதேச  மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக் கல் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால்     கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் கடற்கரை ஒன்று முழுமையாக இல்லாமல் போனலும்  போகலாம் என்ற அச்சம் இப்பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது.