( வி.ரி. சகாதேவராஜா)
அக்கரைப்பற்று பிராந்திய புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக தந்தநாராயண நியமிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாவையைச் சேர்ந்த இவர் ஏலவே கொழும்பில் பணியாற்றினார்.
ஏலவே அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகராக பி. பண்டார சேவையாற்றி வந்தார்.
அவர் அம்பாறை பிராந்தியத்திற்கு பொலீஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அக்கரைப்பற்று பிராந்திய போலீஸ் பிரிவானது இறக்காமம் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை நிந்தவூர் காரைதீவு ஆகிய போலீஸ் பிரிவுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment