ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.
டாப்ஆர்டர் தோல்வி
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று 7 வது ஓவருக்குள்ளேயே விரைவாக ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது முறையாக டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். இதற்குமுன் 2023ல் ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்திலும் இந்த 3 பேட்டர்களும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர்.
15 ஓவர்களில் இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. 15 ஓவர்களில் இந்த அளவு குறைவாக ரன்கள் சேர்த்தது 2020ம் ஆண்டுக்குப்பின் இது2வது முறையாகும். 2022ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால் தொடக்கத்தில் மந்தமாக இந்திய அணி பேட் செய்தாலும், அடுத்த 25 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், நடுவரிசையில் அக்ஸர் படேல்(42), ஸ்ரேயாஸ் அய்யர்(79), ஹர்திக் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது.
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
ஆபத்பாந்தவன் ஸ்ரேயாஸ்
இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூணாக கிடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். சிறந்த பேட்டராக இருந்தபோதிலும் இன்னும் "அன்சங் ஹீரோவாகவே" இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணியின் டாப்ஆர்டர்கள் சறுக்கிய போதெல்லாம் அணியை தூக்கி நிறுத்தியது ஸ்ரேயாஸ் பேட்டிங்தான்.
எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராகி, அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் பேட் செய்வது சிறப்பாகும். ஆடுகளம் மெதுவாக இருக்கிறது, டாப் ஆர்டர்கள் வீழ்ந்துவிட்டார்கள் எனத் தெரிந்தவுடன் ரன் சேர்க்கும் வேகக்தைக் குறைத்து ஆங்கர் ரோல் எடுத்து ஸ்ரேயாஸ் பேட் செய்தார்
அக்ஸர், ஸ்ரேயாஸ் இருவரும் 51 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 75 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும், இதற்கு முன் 2022ல் அகமதாபாத்தில் 74 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்திருந்தார்.
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
நியூசிலாந்துக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் இதுவரை 4 அரைசதங்கள், 2 சதங்கள் என 563 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சை பிரமாதமாக ஆடக் கூடியவராக ஸ்ரேயாஸ் உள்ளார். 8 முறையுமே வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் 394 ரன்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 175 பந்துகளில் 169 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஹர்சித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் 2வது பிரதான பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தொடக்கத்திலேயே அப்பர் கட் ஷாட்டில் ரச்சின் ரவீ்ந்திரா விக்கெட்டை சாய்த்து ஹர்திக் பலம் சேர்த்தரா். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்து சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார்.
பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்
2 மார்ச் 2025
இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்
2 மார்ச் 2025
வில்லியம்ஸன் ஆறுதல்
நியூசிலாந்து அணிக்கு நேற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் மாட் ஹென்றி எடுத்த 5 விக்கெட்டுகள், வில்லியம்ஸனின் போராட்ட பேட்டிங்தான். 120 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் தவிர வேறு எந்த பேட்டர்களும் 25 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் 43 ரன்களைக் கடக்காததும் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த பேட்டரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்காதது தோல்விக்கு பெரிய காரணம்.
இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று டேரல் மிட்ஷெல், லேதம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடியும் வரை நியூசிலாந்து வெற்றிக்கான பாதி இலக்கை கடந்துவிட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லேதம் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்டர்கள் விக்கெட்டை இழந்தவாறு இருந்தனர்.
சான்ட்னர் நேற்று வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான பந்தில் போல்டாகினார். ஆட்டமிழந்த பின் சில வினாடிகள் ஸ்டம்பையும், வருணையும் பிரமிப்புடன் பார்த்துவிட்டு சான்ட்னர் பெவிலியன் திரும்பினார். வருண் தனது 10-வது ஓவரில் சான்ட்னரையும், ஹென்றி விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்
ஆடுகளம் நேரம் செல்லச்செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. அங்கே, பனிப்பொழிவும் இல்லாமல் இருந்ததால், பந்துவீச்சாளர்களுக்கு நல்ல 'கிரிப்' கிடைத்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்ததாகவே தோன்றியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், வில்லியம்ஸன் இருவருமே அதிக பந்துகளை எதிர்கொண்டனர்.
நியூசிலாந்து அணி 133 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்ததால், ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் நெருக்கடி அளித்ததால், அடுத்த 72 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது.
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்
2 மார்ச் 2025
இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?
21 பிப்ரவரி 2025
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
14 ஆண்டுகளுக்குப் பின்..
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, ஹர்திக் பாண்டியா இருவருமே 8 ஓவர்கள் மட்டுமே வீசினர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 2011-ம் ஆண்டுக்குப்பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
அதேபோல நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை இழப்பது 3வது முறை, இதற்கு முன் இலங்கை அணியிடம் 1998, 2001 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்திருந்தது.
நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 25 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?
2 மார்ச் 2025
உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?
28 பிப்ரவரி 2025
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
வருண் சக்ரவர்த்தி அறிமுகமே அசத்தல்
ஐசிசி சாம்பியன்ஸ் போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடிய தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் வருண், இதற்குமுன் ஜடேஜா, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராப அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் வருண் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், முகமது ஷமி ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர்
நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வருண் சக்வர்த்தி, அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்.
பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோஹித் சரியாக பயன்படுத்துவார்களா?
23 பிப்ரவரி 2025
குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?
28 பிப்ரவரி 2025
அரையிறுதி புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியுள்ளது இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதி வரை இந்திய அணி வந்துள்ளது. இந்த முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது.
துபை ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம், ஆஸ்திரேலிய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது சாதகமான அம்சமாகும். மற்ற வகையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்திருந்தாலும், கடுமையான சவால்களை அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக 350 ரன்களை சேஸ் செய்து தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.
ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதினாலே கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது.
ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 7 முறை மோதியுள்ளன. ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை மோதியதில் ஆஸ்திரேலிய அணி 3 முறையும், இந்திய அணி ஒருமுறையும் வென்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றியும், ஆஸ்திரேலிய அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன.
பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்
26 பிப்ரவரி 2025
ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?
27 பிப்ரவரி 2025
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் 2003 காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியும், 2011 காலிறுதியில் இந்திய அணியும் வென்றன. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை ஆஸ்திரேலிய அணியும் வென்றன. ஆனால் இந்திய அணி பெற்ற இரு வெற்றிகளும் காலிறுதியில் நாக்அவுட் சுற்றில் பெற்றதாகும், ஆஸ்திரேலியா லீக் சுற்றில்தான் இந்திய அணியை வென்றுள்ளது.
புள்ளிவிவரங்களைப் பொருத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன.
38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை.
ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 57 முறையும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை.
இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்
இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மெக்ருக், ஸ்மித், அலெக்ஸ் கேரெ, ஹார்டி ஆகியோர் பெரிய தலைவலியாக இருப்பார்கள்.
ஹெட் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் டிராவிஸ் ஹெட். இவரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோலத்தான்.
பந்துவீச்சில் அனுபவமான வீரர்கள் பெரிதாக யாருமில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ் தவிர மற்றவர்கள் பெரிதாக அச்சுறுக்கும் அளவுக்கு பந்துவீசுவதில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் பலம் சேர்ப்பார்கள். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை நம்புவதைவிட பேட்டர்களை நம்பியே களமிறங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள பேட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி பழகியதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும்.
துபை ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல்முறையாக ஆடுவதால், பிட்ச்சின் தன்மையை அறிந்து பந்துவீசுவது கடினம். ஆடுகளத்துக்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் மாற்ற வேண்டிய சவால்கள் உள்ளன.
காலிறுதி ஆட்டம் துபையில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். இதுவரை 3 லீக் ஆட்டங்களையும் இதே மைதானத்தில் ஆடியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரியும், இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய பலமாக உள்ளனர்.
Post a Comment