அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில்




 


(மீரா நகர் நிருபர்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு டிப்பர்கள் மற்றும் அதன் அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிள் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்துச் சம்பவம் இன்று (23) அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.