கல்முனையில்.சர்வதேச மகளிர் தின விழா




 

( வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை   ஆதார வைத்திய சாலையில் சர்வதேச மகளிர் தின விழா பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று  (14) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

 மகளிர் தினத்தினை முன்னிட்டு பல வகையான நிகழ்வுகள் இடம் பெற்றன.
 
பெண்களுக்கான பற் சுகாதாரம் பேணும் நடவடிக்கை மற்றும் மகளிர் சுகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சமகாலத்தில் நடைபெற்றன.

 வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.