வி.சுகிர்தகுமார்
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழாக கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களமானது பல்வேறுபட்ட உதவிகளை வருமானம் குறைந்த மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு மருத்துவ மற்றும் கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன் (28) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைத்திணைக்களப்பரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் பணிப்பாளர் யு.சிவராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர தள்ளுவண்டில் இரத்த அழுத்த பரிசோதனை இயந்திரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என பெறுமதியான பல்வேறு உதவிகள் பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சமூக சேவைப்பிரிவின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment