பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19) மாலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கோசமிட்டவாரறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அரசாங்கம் மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை முற்றாக நீக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டம் அட்டாளைச் சேனை பகுதியிலும் புதன்கிழமை (19) தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதி
இப்போராட்டத்தில் அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Post a Comment