கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம்




 


வி.சுகிர்தகுமார்     

  கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலை திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் வேலை திட்டம் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணகிகிராமம் கண்ணகி மகாவித்தியாலயத்தில் (04)நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ரி; .இராசநாதன்; தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் நீத்தை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி உபுல் பண்டார சமூக செயற்பாட்டாளர் கே.கண்ணன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் இராணுவ உயர் அதிகாரிகள் வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் என ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பெரும் வரவேற்பளித்தனர்.  இதன் பின்னராக தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைக்க வலய கொடியினை ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலைக்கொடியினை அதிபரும் ஏற்றினர்
தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டதுடன் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் நிகழ்வு தொடர்பிலும் அதிதிகள் உரையாற்றினர்.
இதன் பின்னராக சிரமதான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் குப்பைகள் அகற்றப்பட்டது.
இதில் இராணுவத்தினர் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.