வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று (23) இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் அருட்தந்தை ஜெய நிக்சன் தலைமையில் பங்கு தூய வின்சன் டி பவுல் சபையின் அனுசரணையுடனும், பங்கு இளைஞர்கள் மற்றும் துனை பங்கு இளைஞர்களும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை இடம்பெற்ற வழிபாட்டினை தொடர்ந்து தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயம் மற்றும் துணை பங்கு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் உறுப்பினர்களால் நாம் தவக்கால ஒறுத்தல் முயற்சியாக, நடைபெற்ற இரத்ததான முகாமில் பெருந்திரளானவர்கள் கொண்டு இரத்தத்தினை தானமாக வழங்கி வைத்தனர்.
வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த தட்டுப்பாடு மற்றும் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் எனும் தொனிப்பொருளுக்கமைய கலந்து கொண்டவர்கள் குருதிக்கொடையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment