சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புகள்




 


நூருல் ஹுதா உமர்


ஏ.வி.எஸ்.ஸ்மார்ட் லங்கா நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புகள் (Bed Sheet) வழங்கப்பட்டுள்ளது. குறித்த படுக்கை விரிப்புகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (13) சாய்ந்தமருது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர். ஏ.வி.எஸ்.ஸ்மார்ட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ரப் அலி, வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 இதன்போது ஏ.வி.எஸ்.ஸ்மார்ட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ரப் அலி குறித்த படுக்கை விரிப்புகளை கையளித்தார். சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபையும், சுகாதார சேவை நண்பர்கள் குழுவும் ஏ.வி.எஸ்.ஸ்மார்ட் லங்கா நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த படுக்கை விரிப்புக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.